வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப்பள்ளியில் படித்து ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவிகளின் முழு கல்விச்செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று ஒரு அறிவிப்பு வந்தது. சமூக வலைதளங்களில் பலரும் அந்த அறிவிப்பை பாராட்டினர். தனியார் பள்ளிகளில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க நடத்தப்படும் மத்திய அரசின் நுழைத்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கோ ஐஐடி என்றால் என்னவென்றே தெரியாத நிலைமை தான் இங்கு இருக்கிறது. ஐஐடியில் இதுவரை எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்பது கேள்விக்குறி? அரசுப்பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பேசிக்கொண்டனர். பிறகு சத்தத்தை காணோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்கடுத்த சில மாதங்களில் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடம், மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பு கவனிக்கும்படி இருந்தது. ஆனால் அது மட்டும் போதுமா? உண்மையில் கல்வி என்பது அடிப்படை வசதிகளில் ஒன்று. ஆனால் அந்த அடிப்படை வசதியை காசு கொடுத்து தான் பெற வேண்டும் என்கிற அவல நிலை தான் இங்கு நிகழ்கிறது.
குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள் என்று தாழ்மையுடன் வைக்கும் கோரிக்கை இது.
* 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை முழுவதுமாக அரசே ஏற்க வேண்டும்.
சில சமயங்களில் 10ம் வகுப்பில் 90% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று 12ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பார்கள் சிலர். 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 12ம் வகுப்பில் நன்றாக படித்து 90% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றிருப்பார்கள் சிலர். இப்படி ஏற்ற இறக்கத்துடன் இருக்க அவர்களுடைய குடும்ப சூழலோ உடல்நிலையோ கல்வி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதோ காரணமாக இருந்திருக்கலாம்.

ஆதலால்...
* 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டிலும் 90%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புச் செலவை முழுவதுமாக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு இரண்டில் ஏதோ ஒன்றில் 90%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் இளங்கலை படிப்புச் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் அரசுப்பள்ளிகள் மீது ஏழை மக்களுக்கு நம்பிக்கை வரும். பல லட்சம் ஏழை குடும்பங்களில் விளக்குகள் பிரகாசமாக எரியும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.