Published:Updated:

தித்தித்த தீபாவளி! | My Vikatan

Representational Image

அரசு கட்டுப்பாடுகள் நீங்கியவுடன், தீபாவளியை ஒன்றாக சேர்ந்து கொண்டாட முடிவெடுத்தோம். அம்மாவின் தலைமையில் பெங்களூரில் எங்கள் இல்லத்தில் அனைவரும் ஆஜரானோம்.

தித்தித்த தீபாவளி! | My Vikatan

அரசு கட்டுப்பாடுகள் நீங்கியவுடன், தீபாவளியை ஒன்றாக சேர்ந்து கொண்டாட முடிவெடுத்தோம். அம்மாவின் தலைமையில் பெங்களூரில் எங்கள் இல்லத்தில் அனைவரும் ஆஜரானோம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அடுத்த மாதம் வரும் முக்கியமான பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். இதை நமது சொந்தங்களுடன் ஒன்றாகக் கொண்டாடினால் அந்த மகிழ்ச்சியே தனி தான். அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு பெரு மகிழ்ச்சி!

எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் எட்டு சிறு குடும்பம். கொரோனாவால் பல மாதங்கள் திண்டாடி மன்றாடிய நாங்கள் கடந்த வருடம் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, அரசு கட்டுப்பாடுகள் நீங்கியவுடன், தீபாவளியை ஒன்றாக சேர்ந்து கொண்டாட முடிவெடுத்தோம். அம்மாவின் தலைமையில் பெங்களூரில் எங்கள் இல்லத்தில் அனைவரும் ஆஜரானோம். ஒரு சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாவிட்டாலும் கூடியவரை சந்தோஷம் என்று கொண்டாட்டத்தை தொடங்கினோம்.

பாட்டு கச்சேரி
பாட்டு கச்சேரி

சுற்றுலா இல்லாமல் தீபாவளியா? முன்கூட்டியே வந்த அனைவரும் பெங்களூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படை எடுத்து நடை நடந்தோம். மஸ்கட் மாப்பிள்ளை ஸ்பெஷல் போட்டோகிராஃபர். அவர் எடுத்த படங்களை வைத்து சுற்றுலா தலங்களைக்குறித்து பாடமே எடுக்கலாம்! நடுவில் இரண்டு கண்மணிகள் காணாமல் போய் விட்டார்கள். அவர்களை தேடு தேடென்று தேடினால் கடைசியில் ஒரு மரத்தடியில் இன்ஸ்டாகிராமில் ரீல் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாகவே நடந்ததில் சுற்றுலா பேருலாவாக முடிந்தது.

அடுத்த நாள் அனைவருக்கும் உடை வாங்க கடை கடையாய் படை எடுத்தோம். நாங்கள் செல்லாத கடை திறக்காத கடை மட்டும் தான். மற்றபடி எனது மனைவியின் தலைமையில் எல்லா கடைகளுக்கும் சென்று, மனம் என்றும் பசுமையாகவே இருக்க பச்சை நிறத்திலும், மகிழ்ச்சி என்றும் ஊதிப்பெருக ஊதா நிறத்திலும் தேர்ந்தெடுத்து உடைகள் வாங்கினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீபாவளிக்கு முதல் நாள் ஒரு புறம் இனிப்பு பலகாரங்கள் தயாராகிக்கொண்டிருக்க மறுபுறம் பாட்டுக்கச்சேரி களை கட்டியது. அம்மா முதல் குழந்தைகள் வரை அனைவரும் திரு. MSV, திரு. இளையராஜா மற்றும் திரு. AR ரஹ்மான் பாடல்களைப்பாடி தூள் கிளப்பினார்கள். ராஜா சாரின் 'மயிலே மயிலே உன் தோகை எங்கே' என்ற பாடல் இந்த நூற்றாண்டின் சிறந்த பாடலாக எங்கள் ஸ்மூல் ராணியால் தேர்வு செய்யப்பட்டது.

எங்கள் குடும்பம்
எங்கள் குடும்பம்

அடுத்த நாள் தீபாவளிப் பண்டிகை. அதிகாலையிலேயே அனைவரும் எழுந்தனர். அனைவருக்கும் தலையில் எண்ணெய் தேய்க்கும் படலம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மா தலைமை தாங்கி அனைவருக்கும் எண்ணெய் தேய்த்தார். இதோ... இவர் தலையில் எண்ணெய் தேய்க்கும் போது மட்டும் அம்மாவின் கை கொஞ்சம் அதிகமாகவே வழுக்குகிறதே! அந்த ரகசியத்தை அடுத்த வாரம் கூறுகிறேன். அனைவரும் குளித்து முடித்தவுடன் இறைவனை வணங்கினோம். பிறகு பட்டாசுப்படலம் தொடங்கியது. எங்கள் வாண்டு... போட்டான் பாரு... அணுகுண்டு. அதில் மண்டை உடையாமல் தப்பித்தது பெரும் பாடு! அடுத்து உணவு பலகாரம் முதலான வகையறாக்கள் கட்டு கட்டென்று கட்டி விட்டு கதை கதையாய் பேசிக்கொண்டிருந்தோம்.

அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இதை சொந்தங்களுடன் பகிர்வதிலேயே பிரச்சனைகள் பாதியாய் குறைவது நிச்சயம். இவ்வாறாக எங்கள் கடந்த வருட தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. பண்டிகைகள் கொண்டாட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கூடி மகிழ்வதே கோடி கொண்டாட்டம் என்பது என் திண்ணமான எண்ணம். நாங்கள் அடுத்த மாதம் வரும் இந்த வருட தீபாவளியை முழு குடும்பத்துடன் மேலும் சிறப்பாக கொண்டாட இப்போதே தயாராகி வருகிறோம். அப்போ நீங்க?

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.