வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கிருஸ்துமஸ் வருவதற்கு முன்தினம் இரவு சாண்டாகிளாஸ் குழந்தைகளுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை அவர்கள் வீட்டு வாசல்படியில் வைத்துவிட்டுப் போய், குழந்தைகளை மகிழப் பண்ணுவாராமே? எனக்கும் செய்வாரா? கண்களின் ஓரத்தில் நீர்ச்சொட்டு விழாதபடி தவித்துத் தடுத்தபடி யோசனையில் படுக்கையில் படுத்திருந்தான் அரசு.
‘என்ன யோசனை?’ ஆதரவாய்க் கேட்டாள் அவனை அணுஅணுவாகப் புரிந்து வைத்திருந்த மனைவி மல்லிகா.

‘இல்…ல்… லை,,,,, வேலைக்குப் போனபோது, கைநிறையக் காசு புழங்கியது ஆனால் இப்போ, ‘பென்ஷன்தான்’ வருது ஆனாலும் ஒண்ணாந்தேதியே அடுத்த ஒண்ணாந்தேதி என்ன கிழமை வருது? எப்ப வருதுன்னு பார்க்கிறாமாதிரி ஆயிடுச்சே? கடவுள் நம்மைத் தப்பா நெனைக்க மாட்டாரா? எத்தனை கொடுத்தாத்தான் இவனுக்குத் திருப்திவரும்னு கோவிச்சுக்க மாட்டாரா? மனக்குமுறலை மனைவியிடம் கொட்டினான்.
ஆதரவாய் அவள் சொன்னாள்…
‘கண்டிப்பாய்க் கோவிச்சுக்க மாட்டார். ‘தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுகிறவன் கண்டடைகிறான்!’’ என்று சொன்னவர் எதற்குக் கோவிக்கறார்?!.
‘அப்படியா?!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவனைப் பார்த்துத் தொடர்ந்து சொன்னாள்…

‘முன்யோசனையில்லாம பொழைக்கிறானே? வருமானம் நல்லா வந்த காலத்துல கொஞ்சம் முன்யோசனையா பொழைச்சிருந்தா இப்ப இப்படிக் கதறமாட்டானேனு வேணா நெனைப்பார். ஏதாவது வேணும்னா என்கிட்ட கேட்காம என் பிள்ளைகள் யார்ட்டக் கேட்கும் நெனைச்சுக் கேட்டதைக் கொடுக்கத் தவறமாட்டார்.
‘கலப்பையின் மேல் கை வைத்துவிட்டுப் பின் நோக்கிப் பார்க்கிற எவனும் பரலோக ராஜியத்திற்குள் பிரவேசிப்பதில்லை..!’ என்பதுபோல, அவரிடம் கேட்பது என்று முடிவு செய்துவிட்டு, சம்மதிப்பாரா என்கிற சந்தேகம் வேண்டாம்.

குழந்தைகளைக் குதூகலப்படுத்த சாண்டாகிளாஸாக வருவார். பெரியவர்கள் என்றால், பரோபகாரியாகத் தானே வந்து மகிழ்ச்சி தருவார்!.’ என்றாள்.
அவள் அப்படிச் சொன்னதும்தான் ஒன்று புரிந்தது அவனுக்கு. ‘ யாருடைய கோரிக்கையையும் இறைவன் நிராகாரிப்பதில்லை! என்ன, வேண்டுகிறவன் கோரிக்கையில் துளியாவது, நியாயமிருந்தால் சரி!’ என்று!!
-வளர்கவி, கோவை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.