Published:Updated:

தொல்லை தரும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் | முதுமை எனும் பூங்காற்று |My Vikatan

Representational Image

மருத்துவ முன்னேற்றத்தினாலும், மக்களிடையே உடல்நலம் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்ச்சியினாலும் மனிதனின் வாழும் நாட்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

தொல்லை தரும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் | முதுமை எனும் பூங்காற்று |My Vikatan

மருத்துவ முன்னேற்றத்தினாலும், மக்களிடையே உடல்நலம் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்ச்சியினாலும் மனிதனின் வாழும் நாட்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வயதாகும்போது சிறுநீர் அடிக்கடி வருவதும், அதை சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போவதும் உண்டு. உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தும் இத்தொல்லையைப் பற்றிச் சற்று விவரமாகத் தெரிந்து கொள்வோம்.

வயது ஆக ஆக பகலில் சிறுநீர் செல்வது குறைந்து, இரவில் அதிகமாகும். பகலில் ஏழு முறைக்கு மேலும் இரவில் இரண்டு முறைக்கு மேலும் சிறுநீர் கழித்தால் அது வழக்கத்தை விட அதிகம். ஆனால் இது குடிக்கும் நீரின் அளவு, தட்பவெப்ப நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அடிக்கடி சிறுநீர் சென்றாலும் ஒரு நாளில் செல்லும் சிறுநீரின் மொத்த அளவு அதிகரிக்காது.

அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணங்கள்

 • முதுமை வயது ஆக ஆக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

 • அளவுக்கு அதிகமாகத் தண்ணீர், பானங்கள் (டீ, காபி) மற்றும் மது அருந்துதல்.

 • நீர் மாத்திரை, இரத்த அழுத்த மாத்திரை, மூட்டு வலிக்கு கொடுக்கும் மாத்திரை. இருதயம் பலவீனமடைதல்

 • தூக்கமின்மை

 • பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்

 • சிறுநீர்த் தாரையில் பூச்சித் தொல்லை

 • நீரிழிவு நோய் மற்றம் சிறுநீரகம் செயலிழத்தல்.

 • மலம் இறுகி அடைப்பு ஏற்படுதல்.

 • சிறுநீர்ப்பையில் கல் மற்றும் கட்டி.

 • பக்கவாதம் போன்ற நரம்பு வியாதிகள்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

மருத்துவ முன்னேற்றத்தினாலும், மக்களிடையே உடல்நலம் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்ச்சியினாலும் மனிதனின் வாழும் நாட்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதன் பின்னணியில், 50 வயதைக் கடந்த ஆண்களில் 50 சதவிதமும், 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவிதமும் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கததினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இனம் மற்றம் கலாசாரப் பேதமின்றி உலகமெங்கும் உள்ள வயதான ஆண்களின் உடல் நலனைப் பாதிக்கும் ஒரு நோய் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கமே. புராஸ்டேட் சுரப்பி என்பது தசையிலான ஓர் உறுப்பாகும். இது சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றி அமைந்துள்ளது. சிறுநீர் வடிகுராயை முழுவதுமாகச் சுற்றி சற்று பட்டைப்போல் சூழ்ந்துள்ளது. இளைஞர்களுக்கு இந்த புராஸ்டேட் சிறிய கொட்டை அளவுதான் இருக்கும். ஆனால், அவர்கள் வயதாகி வளர்ச்சி அடையும்போது சுரப்பியின் அளவு பெரிதாகிறது. இது ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மிகச் சாதாரணமாக ஏற்படக்கூடியது. இச்சுரப்பி வீக்கத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறிகுறிகள்

 • சிறுநீர் கழிக்கும் போது தடை ஏற்படுதல்

 • அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரத்தில்

 • சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும் முன்பாக தயக்கம்

 • சிறுநீர் கழித்து முடிந்த பின்பும் சிறுநீர்ப்பை இன்னும் நிரம்பி இருப்பது போல் உணர்தல்

 • கடைசியில் துளி துளியாய் சொட்டுதல்

 • சிறுநீர் கழித்த பின்பும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு மந்தமாக சிறுநீர் கழித்தல்

Representational Image
Representational Image

யாருக்கெல்லாம் வீக்கம் வரும்?

 • வயதானவர்கள்

 • உடற்பருமனாக இருப்பவர்கள்

 • விரைப்புத் தன்மை குறைவாக உள்ளவர்கள் பரம்பரையாகவும் சிலருக்கு வர வாய்ப்புண்டு

பரிசோதனைகள்

டாக்டர்கள் நோயாளியின் ஆசனவாயில் ஒரு விரலை நுழைத்து பரிசோதனை செய்து பிராஸ்டேட் வீக்கத்தை ஓரளவிற்கு சரியாக கண்டறிய முடியும். சிறுநீர், ரத்தத்தில் உள்ள பி.எஸ்.ஏ. (P.S.A.) அளவு மற்றும் அல்ட்ராசோனோகிராம் பரிசோதனை தேவைப்படும். சிறுநீரை வெளியேற்ற அறியும் பரிசோதனை (Uroflowmetry) மற்றும் நுண்கருவி மூலம் சிறுநீர்ப்பையை கண்டறிய பரிசோதனைகள் (Cystoscopy) தேவைப்படுபவர்களுக்கு செய்யப்படும். புராஸ்டேட் சுரப்பியில் அளவு அதிகரிக்கும் போது ரத்தத்தில் உள்ள பி.எஸ்.ஏ.வின் அளவும் அதிகமாகிறது. பி.எஸ்.ஏ.வின் சரியான அளவு 0.6 6.5. பி.எஸ்.ஏ. புராஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினாலும் மற்றும் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றினாலும் பி.எஸ்.ஏ. அதிகரிக்கும். ஆகையால் பி.எஸ்.ஏ. புராஸ்டேட் புற்றுநோய்க்கான உறதியான பரிசோதனை என்று சொல்ல முடியாது. புராஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது சிகிச்சையின் பலனை அறிய பி.எஸ்.ஏ. பரிசோதனை உதவும். மேலும் புராஸ்டேட் புற்றநோய்க்காக சிகிச்சைக்கு பின்னர் புற்றுநோய் மறுபடியும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவும் பி.எஸ்.ஏ. பரிசோதனை உதவும்.

பி.எஸ்.ஏ. அதிகமாவதற்கு வேறு காரணங்கள்

 • ஆசனவாயில் விரலை நுழைத்து பிராஸ்டேட் வீக்கம் அடைந்துள்ளதா என்ற பரிசோதனைக்குப் பின்பு.

 • பிராஸ்ட்டேட்டில் நோய் தொற்று (Prostitis) ஏற்பட்டால்.

 • திடீரென்று சிறுநீர் அடைபட்டு விட்டால். ●

 • சிறுநீர் தாரையில் நீரை வெளியேற்றும் குழாயை பொறுத்தினால்(Urinary Catheter)

 • சிறுநீர் தாரையில் நுண்கருவியை செலுத்தும் பரிசோதனைக்குப் பின்பு (Cystoscopy)

Representational Image
Representational Image

புராஸ்டேட் புற்றுநோய் மிகவும் மெதுவாக வளர்ந்து, இறுதி கட்டங்களில் தான் வெளிச்சத்திற்கு வருகிறது. எனவே சிறுநீர் மற்றும் புராஸ்டேட் சார்ந்த தொல்லைகள் உள்ளவர்கள் தங்களுக்கு புற்றுநோய் இல்லை என்பதை பி.எஸ்.ஏ. பரிசோதனை மூலம் அறிந்து கொள்வது அவசியம்.

 • குடும்பத்தில் யாருக்காவது புராஸ்டேட் புற்றுநோய் இருப்பின் அல்லது புராஸ்டேட், 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் பி.எஸ்.ஏ. பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

 • அறுபது வயதைக் கடந்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை பி.எஸ்.ஏ. பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பி.எஸ்.ஏ.யின் அளவு புராஸ்டேட் வீக்கத்தினாலும் மற்றும் அதில் ஏற்படும் புற்றுநோயினாலும் இரத்தத்தில் அதிகரிக்கலாம். இதை உறுதி செய்ய புராஸ்டேட்டிலிருந்து சிறுகட்டியை எடுத்து (Biopsy) பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பி.எஸ்.ஏ. அளவை வைத்து புராஸ்டேட் புற்றுநோய் வளர்கிறதா, பரவிகிறதா, சிகிச்சைக்கு பயனளிக்கிறதா என்பதை அறியலாம்.

சிகிச்சை முறைகள்

புராஸ்டேட் வீக்கம் ஒரளவிற்கு மிதமாக இருந்தால் மருந்திலேயே தொல்லைகளைக் குறைக்க முடியும். பல ஆண்டுகள் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டி இருக்கும். உதாரணம் : Alpha blockers, 5 - Alpha reductive inhibitors மற்றும் கூட்டு மருந்துகள் மூலமும் சிகிச்சை அளிக்க முடியும்.

மருந்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காதவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆண்குறி வழியாக ஒரு கருவியைச் செலுத்தி புராஸ்டேட் வீக்கத்தை சிறிது சிறிதாக வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள் (TURP). இச்சிகிச்சை முறை சுலபமானதே. ஆபத்து அதிகம் இல்லை. இப்போது லேசர் முறையில் ரத்தப்போக்கின்றி நல்லமுறையில் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். Holmium Laser Enucleation of Prostate (Holep). புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் இருந்தால். அதை முழுமையாக அகற்றப்ட வேண்டும் (Prostatectomy).

புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம், புற்றநோய் இல்லாத ஒரு வீக்கமாகும். இதனால் முதியவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்படும். தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதின் மூலம் இத்தொல்லைகளின்றி நலமாக வாழலாம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.