Published:Updated:

புரட்டாசி மாத தளியல் ரெசிபிகள்! | My Vikatan

புரட்டாசி மாவிளக்கு

புரட்டாசி மாதத்தை 'பெருமாள்மாதம்' , 'விரதமாதம்' என்றே சொல்வர். பெருமாளை வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து தளியல் (தளிகை) போடுவது வழக்கம்.

புரட்டாசி மாத தளியல் ரெசிபிகள்! | My Vikatan

புரட்டாசி மாதத்தை 'பெருமாள்மாதம்' , 'விரதமாதம்' என்றே சொல்வர். பெருமாளை வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து தளியல் (தளிகை) போடுவது வழக்கம்.

Published:Updated:
புரட்டாசி மாவிளக்கு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

உணவுக்கட்டுபாட்டுடன் இறைவனை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள்... உடல்+உள்ளம்+ஆன்மா...மூன்றுக்குமான அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு பழமை வாய்ந்ததும், மகத்துவ மிக்கதுமாகும்.

புரட்டாசி மாதத்தை 'பெருமாள்மாதம்' , 'விரதமாதம்' என்றே சொல்வர். பெருமாளை வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து தளியல் (தளிகை) போடுவது வழக்கம்.

வீட்டில் உள்ளவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டு வழிபடுவர். அறுசுவை உணவுடன் நைவேத்தியம் செய்து படைத்து எம்பெருமானை வழிபடுவர்.

அப்போது கோவிந்தா...கோவிந்தா என் குடும்ப‌ உறுப்பினர்கள் சத்தமா சொல்லி எம் பெருமானை வணங்குவர். மாலையில் அருகில் உள்ள பெருமாள் /ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவர்.. புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தளியல் போட..

சகல தடைகள்+சங்கடங்கள் நீங்கிவாழ்வில் வளம் பெருகும்.

எம்பெருமானுக்கு தளியல் போட

சில நைவேத்தியங்கள்.

1.கல்கண்டு சாதம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்

பால் 1லிட்டர்

கல்கண்டு 2கப்

நெய் 1/2கப்

முந்திரி திராட்சை தலா15

எலத்தூள் 1/2டீஸ்பூன்

குங்குமப்பூ 1சிட்டிகை(ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும்)

செய்முறை

அரிசியுடன் பால்+2கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும்.வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

கல்கண்டு கரைந்து,சாதத்தோடு‌நன்றாகக்கலந்ததும் இறக்கவும்.

நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சை மை வறுத்து எடுக்கவும்.

இந்த நாளில் கலவை+மீதமுள்ள நெய்+ஏலப்பொடி+பாலில் கரைத்து குங்குமப்பூ ‌அனைத்தையும் கல்கண்டு சாதக் கவலையோடு சேர்ந்த கிளறி இறக்கவும்.

எள்ளு சாதம்
எள்ளு சாதம்

2.எள் சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்

கடுகு 1/4டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2

கறிவேப்பிலை சிறிதளவு

எண்ணெய், நெய் தலா1டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

வறுத்து பொடிக்க

கருப்பு எள் 1/4கப்

தேங்காய் துருவல் 1டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2

கடலைப்பருப்பு 2டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1டேபிள் ஸ்பூன்

செய்முறை

அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் தனித்தனியாக

மொறு மொறுப்பாக வறுத்து மிக்ஸியில் பொடித்து க்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்+நெய்யை ஒன்றாக சேர்த்து காயவைத்து கடுகு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து சாதத்தில் கொட்டிஅதனுடன் வறுத்து அரைத்த பொடியைத்தூவி கிளறி இறக்கவும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3.மிளகுசீரக சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்

நெய் 1டேபிள்ஸ்பூன்

கடுகு 1/2டீஸ்பூன்

முந்திரி 8

கறிவேப்பிலை சிறிதளவு

வெறும் வாணலியில் வறுத்து

பொடிக்க..

மிளகு சீரகம், துவரம் பருப்பு தலா

2டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 1

கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

அரிசியை உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும்

1டீஸ்பூன் நெய்யில் கடுகு கறிவேப்பிலை முந்திரி ஆகியவற்றை தாளிக்கவும்.

சாதத்துடன் தாளித கலவை+பொடித்து வைத்துள்ள பொடி+மீதமுள்ள நெய்+தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கிளறி இறக்கவும்.

மிளகு
மிளகு

4.கதம்ப சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்

துவரம் பருப்பு 1/2கப்

கேரட் 1

பீன்ஸ் 6

முருங்கை க்காய்1

கத்தரிக்காய் 2

வாழைக்காய் பாதி

உருளைக்கிழங்கு 1

தக்காளி 3

சாம்பார் பொடி 3டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4டீஸ்பூன்

கறிவேப்பிலை+மல்லித்தழை சிறிதளவு

நெய் சிறிதளவு

கடுகு 1/2டீஸ்பூன்

உளுந்து 2டீஸ்பூன்

உப்பு எண்ணெய் தேவையான அளவு

புளி  கோலிக்குண்டு அளவு.

செய்முறை

அரிசி பருப்புடன் மஞ்சள் தூள்+உப்பு+பெருங்காயத்தூள் சேர்த்து 5கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.புளியை1கப் நீரில் கரைத்து வைக்கவும்.

ப்ரௌன் பேரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து தக்காளி+காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.பிறகு சாம்பார் பொடி+உப்பு+புளிக்கரைசல் சேர் தந்து மிதமான தீயில் வேகவிடவும்.காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதனுடன் சாதக்கலவை+நெய்+கறிவேப்பிலை+மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

5.கோதுமைரவை பொங்கல்

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை 1/2கப்

பால்11/2கப்

பொடித்த வெல்லம் 3/4கப்

ஏலத்தூள் 1/2டீஸ்பூன்

முந்திரி திராட்சை தலா8

கிராம்பு 1

நெய்4டேபிள்ஸ்பூன்

செய்முறை

கோதுமை ரவை யை1டீஸ்பூன் நெய்யில் வாசம் வரை வறுத்து,1கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.நன்றாக வெந்ததும் அதில் பால் சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளறவும்(அடிப்பிடிக்காமல்)

பொடித்த வெல்லத்துடன் 1டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி.. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி கோதுமை ரவை க்கலவையோடுகலக்கவும்.அதனுடன் பாதியளவு நெய்+ஏலத்தூள்கிராம்பு சேர்த்து க்கிளறி இறக்கவும்.

மீதமுள்ள நெய் யில்முந்திரி+திராட்சை ஆகியவற்றை வறுத்து ரவைகலவையோடு சேர்த்துக் கிளறவும்....

இப்படி எல்லாம் செய்து பெருமாளுக்கு தளியல் போட

வாழ்வில் சகல சௌபாக்கியம் கிட்டும்.

 என்றென்றும் அன்புடன் 

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.