Published:Updated:

முழுமையான மற்றும் தரமான வாழ்க்கைக்கு என்ன செய்வது? | My Vikatan

Representational Image

நமக்கென்று ஒரு மாறுபட்ட சிந்தனை இருந்தாலும் நாம் சமூகத்தில் நம் மாறுபட்ட கருத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடன் நமக்கு கருத்து வேறுபாடு வருவதால் அவரை வெறுக்கவோ தவிர்க்கவோ வேண்டிய அவசியம் இல்லை.

முழுமையான மற்றும் தரமான வாழ்க்கைக்கு என்ன செய்வது? | My Vikatan

நமக்கென்று ஒரு மாறுபட்ட சிந்தனை இருந்தாலும் நாம் சமூகத்தில் நம் மாறுபட்ட கருத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடன் நமக்கு கருத்து வேறுபாடு வருவதால் அவரை வெறுக்கவோ தவிர்க்கவோ வேண்டிய அவசியம் இல்லை.

Published:Updated:
Representational Image

நம்மில் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியான மற்றும் தரமான வாழ்க்கை வாழ்வது என்பதே குறிக்கோள். ‘தரமான வாழ்க்கை’ என்பதை ஒரு நபர் தனது வாழ்க்கையின் முக்கியமான சாத்தியங்களை அனுபவிக்கும் அளவு என்று கூறலாம்.

டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி தரமான வாழ்க்கை என்பது ‘தனி மனிதனாக நாம் எவ்வாறு இருக்கிறோம், நாம் சார்ந்த சமூகத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் மற்றும் நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன’ என்ற மூன்று விதமான பிரிவுகளுக்குள் அடக்கம். இதை ஆங்கிலத்தில் ‘Being’, ‘Belonging’ மற்றும் ‘Becoming’ என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சில உட்பிரிவுகள் உள்ளன. இவை என்னென்ன, தரமான வாழ்க்கையை நிர்ணயிப்பவை யாவை என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

Representational Image
Representational Image

தனி மனித வாழ்க்கை – Being

Being என்பது ஒரு தனி மனிதனாக நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதைப்பொறுத்தது. இது உடல் ஆரோக்கியம், உளவியல் இருப்பு மற்றும் ஆன்மீகம் சார்ந்தது. உடல் ஆரோக்கியம் என்பது உடல் நிலை, தனிப்பட்ட சுகாதாரம், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஆடை மற்றும் உடல் தோற்றம் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியது. உளவியல் இருப்பு என்பது நபரின் உளவியல் ஆரோக்கியம், அறிவாற்றல், உணர்வுகள் மற்றும் சுய கட்டுப்பாடு பற்றிய மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஆன்மீகம் என்பது தனிப்பட்ட மதிப்புகள், நடத்தையின் தனிப்பட்ட தரநிலைகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை பிரதிபலிக்கிறது. ஆன்மீகம் மதம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த மதத்தையும் சாராமல் கூட நாம் ஒழுக்கமாக ஆன்மீக வாழ்க்கை வாழ முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமூகம் சார்ந்த வாழ்க்கை – Belonging

Belonging என்பது ஒரு நபரின் சூழல்களுடன் அவர் எவ்வாறு பொருந்துகிறார் என்பதைப் பொறுத்தது. ஒரு நபர் அவரது வீடு, பணியிடம், சுற்றுப்புறம், பள்ளி மற்றும் சமூகம் போன்ற அவரது சூழல்களுடன் கொண்டிருக்கும் தொடர்புகள் எவ்வாறு உள்ளன என்பதைப்பொறுத்தது. அவரை அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஏற்றுக்கொள்ளும் உணர்வையும் உள்ளடக்கியது. மேலும் போதுமான வருமானம், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்குத் திட்டங்கள் மற்றும் சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றைக் குறிக்கிறது. நமக்கென்று ஒரு மாறுபட்ட சிந்தனை இருந்தாலும் நாம் சமூகத்தில் நம் மாறுபட்ட கருத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடன் நமக்கு கருத்து வேறுபாடு வருவதால் அவரை வெறுக்கவோ தவிர்க்கவோ வேண்டிய அவசியம் இல்லை.

வெவ்வேறு எண்ணங்கள் மற்றும் கருத்துகள் கொண்ட இருவர் கூட சமூகத்தில் ஒற்றுமையாக வாழ முடியும். அதற்கு ஒருவர் கருத்தை மற்றவர் மதிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். இது நாகரிகத்தின் முதிர்ச்சிக்கான அடையாளம். இதை ஆங்கிலத்தில் ‘Agree to Disagree’ என்பார்கள்.
முழுமையான மற்றும் தரமான வாழ்க்கைக்கு என்ன செய்வது? | My Vikatan

வாழ்க்கையின் குறிக்கோள் – Becoming

Becoming என்பது தனிப்பட்ட இலக்குகள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் குறிக்கிறது. நமது கல்வி, தொழில் அல்லது வேலை மற்றும் தன்னார்வ சமூகம் சார்ந்த செயல்பாடுகளும் இதில் அடங்கும். மேலும் இது ஓய்வுநேரம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு தேடல் மற்றும் குறிக்கோள் உள்ளது. அது என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். ஒரு சிலருக்கு இது இயற்கையாகவே இள வயதிலேயே புரிந்து விடுகிறது.

அதன் பின்னர் அவர் அந்தக்குறிக்கோளை அடைய தேவையான முயற்சியை எடுக்கிறார். ஆனால் பலருக்கு தினம் தினம் அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்யவே வாழ்க்கையின் பெரும் பங்கை செலவிட வேண்டி உள்ளது. இதற்காக வருந்த வேண்டியது இல்லை. நடு வயதில் கூட நாம் இதற்கான முயற்சியை எடுக்கலாம். நமது குறிக்கோளை கண்டறிய ஒரு சில வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு நமது வாழ்க்கை முழுவதற்கும் தேவையான பணம் ஒரு வேளை நம்மிடம் இருந்தால், நாம் அன்றாடம் நேரத்தை, நமது மனதிற்கு திருப்திகரமாக மற்றும் நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக எவ்வாறு செலவிடுவோம் என்று யோசிக்கத்தொடங்கினால் இதற்கான விடை கிடைக்கலாம். நமக்குப் பிடித்த ஒன்று சமூகத்திற்கு நன்மை பயக்கும் எனில் அது உயர்ந்த குறிக்கோளாக மாறுகிறது. நாம் இதற்கான முயற்சியை எடுக்கத்தவறினால் பின்னர் வருந்த வேண்டி வரலாம்.

Representational Image
Representational Image

ஆகவே நாம் தனி மனித வாழ்க்கை மற்றும் சமூகம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதோடு மட்டுமல்லாது நமது தனிப்பட்ட குறிக்கோளையும் கண்டறிந்து நிறைவேற்றினால் நிச்சயம் ஒரு

முழுமையான தரமான வாழ்க்கை வாழ்ந்த திருப்தி கிடைக்கும். நமது சூழ்நிலைகளை குறை கூறுவதில் எந்தப்பயனும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த இந்த அரிய வாழ்க்கையில் நமது தெளிவான முடிவு மற்றும் முயற்சியின் மூலம் நாம் முழுமையான மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். நம் வாழ்க்கை நம் கையில்!

(இந்த கட்டுரையின் ஆசிரியர் ஸ்ரீராம் குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொழில் மற்றும் சமூகத் துறை நிறுவனங்களில் பணி புரிந்தவர். இவர் தற்போது பெங்களூரில் சமூகத் துறை நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றுகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.