Published:Updated:

ஜில்லுனு ஒரு பிரியாணி! | My Vikatan

பழைய சோறு

எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாட்கள் காலை உணவு பழைய சோறு தான். தொட்டுக்கொள்ள மட்டும் விதவிதமா...

ஜில்லுனு ஒரு பிரியாணி! | My Vikatan

எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாட்கள் காலை உணவு பழைய சோறு தான். தொட்டுக்கொள்ள மட்டும் விதவிதமா...

Published:Updated:
பழைய சோறு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நீங்கள் தினப்படி சாப்பிடும் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி.. ஏன் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான பிரியாணியைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கென்று தனிப்பட்ட முறையில் ஏதாவது பாடல்கள் இருக்கிறதா?? இல்லை அல்லவா! ஆனால் தி கிரேட் "பழைய சோற்றை மையமாக வைத்து ஒரு அருமையான பாடலை "திருநாள்" படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருப்பார்.

"பழைய சோறு

பச்சை மிளகாய்

பக்கத்து வீட்டு

குழம்பு வாசம்..." ன்ற வரிகள் (வார்த்தைகள்) நம்மை மெய்மறக்கச் செய்யும்.

பொன்னி அரிசி சோற்றை வடித்து ஆறவிட்டு 12 மணி நேரம் நீரூற்றி (நொதிக்க) வைத்து மறுநாள் காலை சாப்பிடுவது தான் பழையசோறு. இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ள.. உடல் பட்டாம்பூச்சி போல் (லேசாக) மிதக்கும். கூடவே தேனீயின் சுறுசுறுப்பும் கிடைக்கும்.

பழைய சோறு
பழைய சோறு

எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாட்கள் காலைஉணவு பழைய சோறு தான். தொட்டுக்கொள்ள மட்டும் விதவிதமா...

மோர் மிளகாய்" காக்கிச்சட்டை" கமல், மாதவிபோல் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும்.

எலுமிச்சை/ மாங்காய் ஊறுகாய் "வாழ்வே மாயம்" கமல் ,ஸ்ரீபிரியா போல் சரியாகத்தான் இருக்கும்...ஆனா....

பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் கீறிய பச்சை மிளகாய்" மைக்கேல் மதன காமராஜன்" கமல் ஊர்வசி போல சாப்ஃட்டா...

சின்ன வெங்காயம் "பஞ்சதந்திரம் "கமல் ,சிம்ரன் போல காரசாரமாய்..

புதினா துவையல்/ எள்ளு துவையல்/பருப்பு துவையல் "நாயகன்" கமல், சரண்யா மாதிரி ஒரு வித தனித்துவமாய்...

வத்தக் குழம்பு/ மொச்சகொட்டை கீரைத் தண்டு குழம்பு" சகலகலா வல்லவன்" கமல் ,அம்பிகாபோல 'பெப்பியாய்,

கரகர மிக்சர் ,மிளகு போட்ட காரா பூந்தி

"பேர் சொல்லும் பிள்ளை" கமல், ராதிகா மாதிரி (துடுக்காக ) சற்றே வித்தியாசமாய் ...

(சொக்க வைக்கும் சுவையில்) பச்சை மிளகாய் தொக்கு/ .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இஞ்சி தொக்குஇருக்கிறதே....ஸ்ஸ்ஸ்ப்பா... "மூன்றாம் பிறை", "மீண்டும் கோகிலா", வறுமை நிறம் சிறப்பு கமல் ,ஸ்ரீதேவி போல் பொருத்தம் என்றால் பொருத்தம். இதுதான் பொருத்தம் என்று அடித்துச் சொல்ல வைக்கும்.

கால் கிலோ பச்சை மிளகாய், 50 கிராம் புளி தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.( அம்மா ,அம்மியில் வைத்து அரைப்பார்கள்..அது தனிக் கதை) இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து மிளகாய் கலவையில் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து கலவையைக் கொட்டி வதக்கி எடுக்க "பச்சை மிளகாய் தொக்கு" "நான் உள்ளேன் ஐயா" ன்னு சொல்லும்!

பித்தம் தணிக்கும் பழைய சோறு!
பித்தம் தணிக்கும் பழைய சோறு!

150 கிராம் இஞ்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு ,ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்தெடுத்த பின். அடுப்பை அணைக்கவும் . அதனுடன் சுத்தம் செய்த இஞ்சி இஞ்சி இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் கொட்டைப்பாக்களவு புளி, தேவையான உப்பு சேர்த்து அம்மியில் நன்கு அரைத்து எடுத்து, வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு லேசாக வதக்கி எடுக்க இஞ்சிக்கு மிஞ்சி எதுவும் இல்லை என இஞ்சித்தொக்கு கம்பீரமாய் சொல்லும்.

மொத்தத்தில் பழைய சோற்றுக்கு இந்த பச்சை மிளகாய் தொக்கு/இஞ்சி தொக்கு தொட்டு சாப்பிட, வாழ்க்கை வர்ணஜாலமாகும்.

வாழ்க்கையில்

எதுவும் சுலபமில்லை

ஆனால்...

எல்லாமே "சாத்தியம் "தான்

என்ற தன்னம்பிக்கை தன்னால் (லே)வரும்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.