Published:Updated:

சபரிமலைக்கு போறீங்களா? இதோ உங்களுக்காக ஒரு தகவல் | My Vikatan

பக்தர்கள்

சபரிமலையை பொறுத்தவரை அங்கே 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இருந்தாலும், எங்கேயேயும் டீ, காபி, சிற்றுண்டி வகைகள் சுமாரான சுவையில் தான் இருக்கும்.

சபரிமலைக்கு போறீங்களா? இதோ உங்களுக்காக ஒரு தகவல் | My Vikatan

சபரிமலையை பொறுத்தவரை அங்கே 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இருந்தாலும், எங்கேயேயும் டீ, காபி, சிற்றுண்டி வகைகள் சுமாரான சுவையில் தான் இருக்கும்.

Published:Updated:
பக்தர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் தேதியில் மாலையிடும் அய்யப்ப பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். சிலர் 60 நாட்கள் விரதம் இருந்து, மகரஜோதியை தரிசனம் செய்த பிறகே, தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள். இதோ கார்த்திகை பிறந்துவிட்டது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்காக, ஒரு சின்ன தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சபரிமலையில் இந்த ஆண்டும் ஆன்லைன் முன்பதி அவசியம் என, திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, மாலையிட்டு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். இதற்கு முன்னர் இந்த ஆன்லைன் நடைமுறையை கேரள போலீஸார் கையாண்டனர். இந்த ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவஸ்தான அலுவலர்கள், ஆன்லைன் பதிவு முறையை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள்
பக்தர்கள்

ஆன்லைன் பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் உடனடி முன்பதிவு செய்வதற்கு 12 கவுன்டர்கள் திறக்கப்பட்டள்ளன. இதுதவிர திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகண்டேஷ்வரம் சிவன் கோவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை மகா கணபதி ஆலயம், எட்டமானூர் மகாதேவர் ஆலயம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி கோவில், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டிபெரியார் உள்ளிட்ட 12 இடங்களில் முன்பதிவு செய்யலாம்.

சபரிமலையை பொறுத்தவரை அங்கே 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இருந்தாலும், எங்கேயேயும் டீ, காபி, சிற்றுண்டி வகைகள் சுமாரான சுவையில் தான் இருக்கும். ஆனால், அங்கே இருக்கும் ஸ்ரீஹரிபவன் ஓட்டலில் நம் தமிழ்நாட்டு உணவு வகைகள் அருமையாக இருக்கும். நம்ம தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் இந்த ஓட்டலை நடத்துகிறார்.

இட்லி, தோசை, பூரி, பொங்கல், புரோட்டா போன்ற சிற்றுண்டி வகைகளும், சாம்பார் சாதம், பிரிஞ்சி போன்ற வெரைட்டி ரக சாதம் போன்ற உணவு வகைகள் இங்கு தான் கிடைக்கும். பயணத்தின்போது கேரளாவில் நம்ம ஊர் சாப்பாடு அவ்வளவாக கிடைக்காது என புலம்புவர்கள் அதிகம். நானும் அப்படி தேடிக் கிடைத்தது தான் இந்த உணவகம்.

பக்தர்கள்
பக்தர்கள்

யாத்திரை மேற்கொண்டு வந்து களைப்பாக இருக்கும் பக்தர்கள், அப்படியே யாத்திரை நிவாஸின் கரையோரம் உள்ள ஸ்ரீஹரி பவன் ஓட்டலில் ஒரு காபியும் பருகினால் அருமையாக இருக்கும். அதன்பிறகு மீண்டும் அய்யப்பனை தரிசனம் செய்துவிட்டு, மதிய சாப்பாட்டுக்கு வந்தால், ஓட்டலில் இடம் இருக்காது, சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் அங்கேதான் சாப்பிடுவார்கள். எனவே காத்திருந்து மதிய உணவை முடித்துக் கொண்டு, மெல்ல நடை போட்டு மலையை விட்டு கீழே இறங்கிடலாம்.

-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.