Published:Updated:

தொடர் வைப்பு நிதியும் சேமிப்பும்! | My Vikatan

Represenatational Image

பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இந்த முதலீட்டு கருவியை மக்களுக்கு வழங்கி வருகிறது.

தொடர் வைப்பு நிதியும் சேமிப்பும்! | My Vikatan

பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இந்த முதலீட்டு கருவியை மக்களுக்கு வழங்கி வருகிறது.

Published:Updated:
Represenatational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சேமிக்கும் எண்ணம் நம்முள் தோன்றியவுடன், முதலில் நம் நினைவுக்கு வருவது தொடர் வைப்பு நிதி தான்.

பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலகங்ள், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இந்த முதலீட்டு கருவியை மக்களுக்கு வழங்கி வருகிறது.

தொடர் வைப்பு நிதி என்றால் என்ன?

ஓர் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஓர் குறிப்பிட்ட காலத்திற்க்கு தொடர்ந்து சேமித்து வருவதே தொடர் வைப்பு நிதியாகும். நாம் சேமிக்கும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை கற்று கொள்ளலாம்.

எப்படி தொடங்குவது?

நாம் அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கிக்கோ சென்று விண்ணப்பிக்கலாம்.

அல்லது வங்கிகளின் இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

Representational Image
Representational Image

கால அளவு:

இதில் குறைந்தது 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். நாம் தேர்ந்து எடுக்கும் கால அளவிற்கு ஏற்ப வட்டி நிர்ணயிக்கப்படும். நாம் திட்டத்தில் சேரும் போது என்ன வட்டி நிர்ணயிக்க படுகின்றதோ அதே வட்டி தான் திட்டத்தின் முதிர்வு காலம் வரை தொடரும்.

குறுகிய கால திட்டம் - 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை.

நடுத்தர கால திட்டம் - 1 ஆண்டில் இருந்து 5 ஆண்டு வரை

நீண்ட கால திட்டம் - 5 ஆண்டில் இருந்து 10 ஆண்டு வரை.

தொடர் வைப்பு நிதியின் நன்மைகள்:

1. மிக எளிமையான சேமிப்பு திட்டம். முன்பு குறிப்பிட்டது போல நாம் தொடர்ந்து சேமிக்க பழகுவதற்கு ஏற்ற திட்டம்.

2. பாதுகாப்பான திட்டம் - நாம் சேமித்த பணம் மற்றும் வட்டி, முதிர்வு காலத்தில் நம் கணக்கில் வரவு வைக்க படும்.

3. நாம் குறைத்து 10 ரூ கொண்டே இந்த கணக்கை தொடங்கலாம்.

4. அஞ்சல் அலுவலகத்தில் முன்கூட்டியே நம் பணத்தை தொடர் வைப்பு நிதி கணக்கில் சேமிக்கும் சலுகை உள்ளது. அவ்வாறு சேமிக்கும் பணத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி உண்டு.

தொடர் வைப்பு நிதியின் தீமைகள்:

1. முதிர்வு காலத்திற்கு முன்பே நம் பணத்தை திரும்பி பெற விரும்பினால், ஒரு குறிப்பிட்ட சதவீதம் நாம் பெனால்டி(Penalty)யாக செலுத்த வேண்டும். அதுபோக நம் வட்டி சதவிதமும் குறையும்.

2. தொடர் வைப்பு நிதியின் வட்டி விகிதம் பணவீக்கத்தை விட குறைவானது.

3. தொடர் வைப்பு நிதி மூலம் நாம் பெரும் வட்டிக்கு வரி விலக்கு கிடையாது. நாம் எந்த வரி அடுக்கிற்கு (tax slab) கீழ் வருகின்றோமோ அதற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

முடிவுரை:

தொடர் வைப்பு நிதி ஓர் அத்யாவிசய சேமிப்பு திட்டம். நம் அனைவருக்குமே திட்டமிட்ட வருங்கால செலவுகள் இருக்கும்.

உதாரணத்திற்கு நம் குழந்தைகளின் கல்வி கட்டணம், குடும்பத்துடன் செல்ல இருக்கும் ஓர் சுற்றுலா பயணம், வாகனம் வாங்குதல் என பலவற்றிற்கும் தொடர் வைப்பு நிதி நமக்கு பயனளிக்கும்.

சிறுக சிறுக சேமிக்க பழகுவோம்.

சிறுதுளி பெருவெள்ளம்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.