Published:Updated:

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்க அரசு உத்தரவிடுமா? - வாசகர் வாய்ஸ்

Representational Image
Representational Image

குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரையோ கடவுளின் பெயரையோ மன்னரின் பெயரையோ சமூக சீர்த்திருத்தவாதிகளின் பெயரையோ அடையாள பெயராக வைத்து அங்கீகாரம் பெற்று நிறைய பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மாவீரன் கிட்டு, பரியேறும் பெருமாள், ராட்சசி ஆகிய மூன்று படங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி பாகுபாடு எப்படி காணப்படுகிறது...? மாணவ மாணவிகள் மனதில் சாதிய வன்மத்தை பதிய வைப்பது யார்...? போன்றவற்றை காட்டி இருப்பார்கள். இந்த மூன்று படங்களிலும் அறத்தின் வழியில் நடப்பதே சிறந்த மானுட வழி என்று அறிவுறுத்தியிருப்பார்கள்.

"மாவீரன் கிட்டு" படத்தை பார்த்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர், "நாங்கூட நல்ல படமா இருக்கும்னு நெனச்சேன்... படத்த பார்த்தா அதுல அந்த பசங்கள ஹீரோவா காட்டிருக்கானுங்க" என்று என்னிடம் சொன்னது எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் இப்படிபட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

சாதி
சாதி

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அரசு ஓவியக்கல்லூரி மாணவன் பிரகாஷ் தன் கல்லூரியில் நடந்த சாதிய வன்மத்தால், ஆசிரியர் ஒருவரின் சாதிய திமிரின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட போது இயக்குனர் பா. ரஞ்சித் "உயர்கல்வி நிறுவனங்கள் சாதிய அதிகார நிறுவனங்களாக மாறிக் கொண்டு வருவதால் ரோகித் வெமுலா, பிரகாஷ் போன்ற மாணவர்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..." என்று தான் படித்த அரசு ஓவியக்கல்லூரியில் உள்ள சாதிய வன்மத்தை தோலுரித்து போராட்டம் செய்தார். கல்லூரிகள் போல அரசு பள்ளிகளிலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகளை டாய்லெட் கழுவ சொல்லி ஆசிரியர் துன்புறுத்துவது போன்ற அநீதிகள் இழைக்கப்பட்டது நாம் அறிந்ததே.

மாஸ்டர் படத்தில் கல்லூரியில் எலக்சன் நடத்துவார்கள். அப்போது கௌரி கிசன் விஜய்யிடம் சென்று "சார் அப்ளிகேசன்ல "சாதி" சேர்க்கலாமா..." என்று கேட்க விஜய்யோ "சாதிய கல்லூரி தேர்தல்லே இருந்தே புறக்கணிப்போம்..." என்று சொல்வார். மாஸ்டர் பட விஜய் கதாப்பாத்திரம் மாதிரி சாதிவெறி இல்லாத உதவி பேராசிரியர்கள், சாட்டை பட சமுத்திரக்கனி மாதிரி சாதிவெறி இல்லாத பள்ளி ஆசிரியர்கள், ராட்சசி பட ஜோதிகா மாதிரி சாதிவெறி இல்லாத ஆசிரியைகள் நம் கல்விநிலையங்களில் மிக குறைவாகவே இருக்கிறார்கள்!

Representational Image
Representational Image

குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரையோ கடவுளின் பெயரையோ மன்னரின் பெயரையோ சமூக சீர்த்திருத்தவாதிகளின் பெயரையோ அடையாள பெயராக வைத்து அங்கீகாரம் பெற்று நிறைய பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. அதை போலவே ஒரு குறிப்பிட்ட நபரின் பெயருக்குப் பின்னால் ஒட்டுப்பெயராக சாதி பெயர் இருக்கிறது. அந்தப் பெயர்களை பள்ளிக்கூட பெயர்களாக நிறைய இடங்களில் காண முடிகிறது. ராமசாமி கவுண்டர் மேல்நிலைப் பள்ளி, ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி, ராமசாமி நாடார் மேல்நிலைப்பள்ளி, ராமசாமி செட்டியார் பொறியியல் கல்லூரி போன்று சாதிய அடையாளத்துடன் செயல்படும் பள்ளிகள் தமிழகத்தில் ஏராளம். இப்படி கல்வி நிலையங்களின் பெயரில் இருக்கும் சாதிப் பெயரை நீக்க அரசு உத்தரவிட வேண்டும். காரணம், இப்படிப்பட்ட பள்ளிகளில் சாதிய பாகுபாடு அதிகளவில் உள்ளது.

இப்படிப்பட்ட பெயர் கொண்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பெரும்பாலும் சாதி மீது பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். நான் கவனித்த வரையில் இந்த மாதிரி பள்ளிகளில் படித்த மாணவர்கள் எல்லாருமே வாட்சப்பில் சாதி சங்க குரூப்பிலும் பேஸ்புக்கில் சாதி பெருமை பேசும் குரூப்களிலும் முக்கிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதை அவர்கள் கௌரவமாகவும் எண்ணுகிறார்கள். பொது சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாதிவெறியை குறைக்க மாணவ சமுதாயத்தை அறவழி சார்ந்த சமுதாயமாக மாற்றிட அரசு இதுபோன்ற பள்ளி பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்க உத்திரவிட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

- மா. யுவராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு