Published:Updated:

மனம் கவர்ந்த ஆசிரியர் அவர்களுக்கு! | My Vikatan

Representational Image

வரலாற்றின் மேல் எனக்கு ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம். முதலாம் பானிபட், இரண்டாம் பானிபட், முகமதியர்களின் வரலாறு, விஜயநகர பேரரசு, சோழப்பேரரசு,... இப்படி ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளையும் கண் முன்னே காட்சிகள் நிழலாடும்படி வர்ணனைகளோடு பாடம் எடுப்பதில் வல்லவர்

மனம் கவர்ந்த ஆசிரியர் அவர்களுக்கு! | My Vikatan

வரலாற்றின் மேல் எனக்கு ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம். முதலாம் பானிபட், இரண்டாம் பானிபட், முகமதியர்களின் வரலாறு, விஜயநகர பேரரசு, சோழப்பேரரசு,... இப்படி ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளையும் கண் முன்னே காட்சிகள் நிழலாடும்படி வர்ணனைகளோடு பாடம் எடுப்பதில் வல்லவர்

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என் அப்பா சுங்க இலாகா அதிகாரி என்பதால் எனது பள்ளி மற்றும் கல்லூரி பருவம் பாண்டிச்சேரி , எடப்பாடி மேட்டூர், தர்மபுரி, வளவனூர், விழுப்புரம் இப்படி பல ஊர்களில்.. அதனால் ஒரு ஆசிரியருக்கு மட்டும் நன்றி சொல்வது என்பது முடியாத காரியம். பாண்டிச்சேரியில் ஹிமாக்குலேட் பள்ளியில் என் கையைப் பிடித்து உயிரெழுத்தை கற்றுக் கொடுத்த எலிசபெத் டீச்சரை எப்படி மறப்பது? என் தாய்க்கு இணையானவர்.. தாய்மொழியை எனக்குள் விதைத்தவர் ஆச்சே! அழகான வெள்ளை நிற பருத்தி புடவை உடுத்தி, கொண்டையிட்டு கழுத்தில் சிலுவைச் செயின் அணிந்து அவர் நடந்து வரும் அழகே அழகு இன்னமும் கண் முன்னால் அழகாய் !

எடப்பாடி அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி' ஐந்தாம் வகுப்பு 'ஆ'பிரிவு' தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு கணிதம் இப்படி அனைத்துக்கும் ஒருவரே டீச்சர் .அவர்தான் கனகா டீச்சர் மறக்க முடியுமா அவரை! தினம் ஒரு (புடவையின் நிறத்துக்கு பொருத்தமாக) ரோஜா அவர்கள் கொண்டையில் அழகாய் வீற்றிருக்கும் .

எர்னெஸ்ட் ராஜா சார் தன் துணைவியாருடன்
எர்னெஸ்ட் ராஜா சார் தன் துணைவியாருடன்

என் கையெழுத்தை இன்று பலரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் கனகா டீச்சர் தான். என் கையைப் பிடித்து (அப்போதெல்லாம் கையெழுத்து ஏடு என்று ஒன்று இருக்கும் இரண்டு வரிகள்' தமிழுக்கு', நான்கு வரிகள் 'ஆங்கிலத்திற்கு' என்று அதில் தினமும் எழுதி வர வேண்டும்)'ஓ',ழ',ஐ என்ற எழுத்துக்களை எல்லாம் இப்படித்தான் எழுதவேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொடுத்தவர் அவர்!

வளவனூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு 'ஆ 'பிரிவு உடற்பயிற்சி ஆசிரியை ஜானகி அவர்கள் எனக்கு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தவர்.. அப்பொழுதெல்லாம் பள்ளிகளுக்கு இடையே கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பேச்சு போட்டி, தனித்திறன் போட்டி என்று பல போட்டிகள் நடக்கும் மாவட்ட வாரியாக பல பள்ளிகள் கலந்து கொள்ளும். அப்போதெல்லாம் அவர் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ளச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார். பல புத்தகங்களை எனக்கு பரிந்துரைத்து வாசிப்பு என்பது பரந்துபட்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறியவர். அதே சமயம் வெறும் கதை புத்தகம் வாசிப்பதில் மட்டும் பயனில்லை வரலாறு அறிவியல் இவற்றோடு வாழ்வியல் சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்றும், புத்தகத்தைப் போல் சிறந்த துணை எதுவும் கிடையாது என்றும் சொன்னவர். இன்று பல மேடைகளில் நான் தைரியமாக பேசுகிறேன் என்றால் அதற்கு அவர் தான் முக்கிய காரணம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக தர்மபுரி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி +1,+2 வரலாற்று ஆசிரியை காஞ்சனாமாலா அவர்கள். வரலாற்றின் மேல் எனக்கு ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம். முதலாம் பானிபட், இரண்டாம் பானிபட், முகமதியர்களின் வரலாறு, விஜயநகர பேரரசு, சோழப்பேரரசு, குப்தர்களின் ஆட்சி காலம் பொற்காலம்... இப்படி ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளையும் கண் முன்னே காட்சிகள் நிழலாடும்படி வர்ணனைகளோடு பாடம் எடுப்பதில் வல்லவர் அவர் (கூடவே அதற்கு ஏற்ப ஒரு குட்டிக் குட்டி கதைகளை அழகாக சொல்லுவார் மனதில் 'டக்' என்று பதிந்துவிடும்) மெலிந்த தேகம், எளிமையான பருத்திப் புடவை கண்களில் வட்டவடிவ மூக்குக்கண்ணாடி பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் பாடம் எடுக்கையில் அவர் ஜான்சி ராணியாக கம்பீரமாக மாறிவிடுவார். இன்று நான் பல மேடைகளில் தன்னம்பிக்கை கூறும் கருத்துக்களை குட்டி குட்டி கதைகள் மூலம் கூறுகிறேன் என்றால் அதற்குக் காரணம் காஞ்சனா மாலா டீச்சர் தான்.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்த போது எனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த எர்னஸ்டு ராஜா சார், தமிழரசு சார் என் அறிவு கண்ணைத் திறந்தவர்கள்.

P. சந்திரபாபு சார்  துணைவியாருடன்
P. சந்திரபாபு சார் துணைவியாருடன்

படிப்பின் மேல் ஆர்வத்தை தூண்டச் செய்ததும் இவர்கள்தான். இந்த இடத்தில் பெருமையாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படித்து முடித்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்னமும் என் ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். எனது மகளின் திருமணத்திற்கு வந்திருந்து ஆசிர்வாதம் செய்தார்கள். இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும் ஒரு மாணவியாக எனக்கு!

தினமும் அவர்களுக்கு காலை வணக்கம் நானும் ,அவர்கள் எனக்கும் சொல்கிறார்கள் . எனது கட்டுரை எந்த பத்திரிகையில் வந்திருந்தாலும் படித்து விமர்சனம் செய்த தயங்க மாட்டார்கள். அதேபோல் தொலைக்காட்சியில் நான் கலந்து கொள்ளும் சமையல் சார்ந்த/பொதுவான நிகழ்வுகளை பார்க்க நேர்ந்தால் அலைபேசியில் பாராட்டிய பிறகு மறுவேலை பார்ப்பார்கள்.. என்னை உற்சாகப்படுத்துவதில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் அவர்கள்தான்..

கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது பிசினஸ் மேக்ஸ் பாடத்திற்கு P.சந்திரபாபு சாரிடம் டியூஷனுக்கு சென்றேன். வீட்டில்/ வெளியிடங்களில் பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும்.. பேசும்பொழுது மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் நெகட்டிவ் வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதுஎப்படி.. மகிழ்ச்சியாக இருப்பது எப்படி ...முகத்தை எப்போதும் எப்படி புன்னகையாக வைத்துக் கொள்வது... மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியில் இல்லை நம் மனதில் தான் இருக்கிறது என்றும்... கணக்குப் பாடங்களோடு வாழ்வியல் பாடத்தையும் கற்றுக் கொடுத்தார்.

கி.தமிழரசு சார்
கி.தமிழரசு சார்

இதோ இப்பொழுது எழுத்துத் துறையில்... எனது கிறுக்கல்களை எல்லாம் ஆச்சரியக் குறிகளாக்கும்... பிரபல பத்திரிகையின் ஆசிரியர்களான திருமதி லஷ்மி நடராஜன் அம்மா அவர்களும், திரு. நாகராஜ் குமார் சார் அவர்களும்... எப்போதெல்லாம் நான் சோர்ந்து போய் இருந்தாலும், இதை எல்லாம் எழுத முடியுமா ?என்று நான் தடுமாறும் சமயங்களிலும், 'உன்னால் முடியும்' ஆதிரை என்று என்னுள் நம்பிக்கை விதையை நட்டு,.. உரமிட்டு நீரூற்றுபவர்கள். (என்னுள் தன்னம்பிக்கை வித்தை முளைக்கச் செய்பவர்கள் இவர்களே)இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களிடமும் ஏதோ ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி என் வாழ்க்கையில் நிறைய பேருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.. அவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் .அனைவருக்கும் இந்த மாணவியின் நெஞ்சார்ந்த நன்றிகள். அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.