Published:Updated:

இன்னும் ஆல் பாஸ் மனநிலை.. ஸ்மார்ட் போன் அடிக்‌ஷன்! - எப்படி இருக்கின்றன பள்ளிக்கூடங்கள்?

ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகள் அதிகம் என்பதால் ஒரே பாடத்தை ஒரே நாளில் மூன்று வகுப்புகளுக்கு நடத்த வேண்டியுள்ளது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு"..என்னும் பாடலில் ஒளவையார் நீர் ஆம்பலின் வளர்ச்சி நீர் மட்டம் எதுவரை இருக்குமோ அதுவரை இருக்கும். அதுபோல தான் பெற்ற நுண்ணறிவும் கற்ற நூல்களைப் பொறுத்தே அமையும் என்கிறார். கல்வி கரையில் கற்பவர்கள் நாள் சில என்பது போய் கொரொனா காலத்தில் கற்பவர் நாள் சில என மாறிவிட்டது.

கொரோனா காலம்.. இரு ஆண்டுகளாகத் தேர்ச்சி, இந்த ஆண்டு பள்ளி திறந்த பின் ஆங்காங்கே சிலருக்கு அச்சம் இருந்தாலும் பயமின்றி பள்ளியில் மீண்டும் காலடி எடுத்து வைத்தனர் பிள்ளைகள்.மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என உணர்ச்சி மிதப்பில் ஒவ்வொருவரும் முதல் நாள் வகுப்பில் அத்தனை பேரின் கண்களிலும் இனம் புரியாத சந்தோசம்.

பள்ளி ஆய்வு
பள்ளி ஆய்வு

#பள்ளியில்

காலையில் டெம்ப்ரேச்சர் பார்த்து உள்ளே அனுப்புவது, சானிடைசரில் கை துடைப்பது, சமூக இடைவெளியை கடைபிடித்து உள்ளே நுழைவது, வெளியேறுவது,

வகுப்பிற்கு இருபது பேர் அமர்ந்திருப்பது, ஒவ்வொரு பென்ச்சிலும் இருவர் மட்டுமே, இருவரும் நெருங்கி வராமலிருக்க புத்தகப்பைகள் இடையில் வைத்து என கொரொனாவுக்கே கொக்கானி காட்டினர் மாணவ மாணவியர். முதல் 45 நாட்களுக்கு Bridge course மட்டும் நடத்துவதால் மன அழுத்தமின்றி வருகை புரிந்தனர்.

பள்ளியில் காலை அனைவரும் வகுப்பிற்கு வந்தவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் EMIS எனப்படும் Education management information system எனும் ஆன்லைனில் 26 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அவை பள்ளி வளாகம், கழிவறை தூய்மையாக உள்ளனவா, அடிக்கடி தொடப்படும் கதவு, கைப்பிடிகள் சுத்தமாக உள்ளதா,thermal scanner நல்லமுறையில் உபயோகத்தில் உள்ளனவா, ஆக்சிமீட்டர், சோப், தண்ணீர் வசதிகள் சரிவர பயன்படுத்தப்படுகின்றனவா, ஹெல்ப்லைன் எண்கள் பார்வையில் படும்படி உள்ளனவா, மதிய உணவு தூய்மையாகவும், சமூக இடைவெளியுடன் வழங்கப்படுகின்றனவா, குப்பைத் தொட்டிகள், ஜன்னல்கள் சீராக உள்ளனவா, ஆசிரியர் மாணவர்கள் மாஸ்க், அடையாள அட்டை அணிந்துள்ளனரா, கோவிட் குறித்து முன்னெச்சரிச்சை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளனவா, இன்று ஆசிரியர் மாணவர்கள் யாரேனும் காய்ச்சல் ,பாசிட்டிவ் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளனரா,முதல் கட்ட உடல் பரிசோதனை நடத்தப்பட்டனவா,ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை பேர் வருகை புரிந்துள்ளனர் என 27 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலை பதினொரு மணிக்குள் யாருக்கேனும் தொற்று அறிகுறி இருந்தால் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

#ஆசிரியர்கள்

ஆறு நாள் வகுப்புகள். இதில் உயர்நிலைப் பள்ளியாய் இருந்தால் சுழற்சி முறையிலும், எண்ணிக்கை குறைவாய் இருந்தால் வகுப்பிற்கு 20 பேர் என அமரவைக்கப் பட்டுள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகள் அதிகம் என்பதால் ஒரே பாடத்தை ஒரே நாளில் மூன்று வகுப்புகளுக்கு நடத்த வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு மேல்நிலை வகுப்பில் ஆங்கிலம் parts of speech நடத்த வேண்டுமெனில் முதல் வகுப்பில் எழுத்து வேலை கொடுத்துவிட்டு இரண்டாம் வகுப்பில் நடத்துகிறோம்.அடுத்து இரண்டாம் வகுப்பில் இதையே நடத்துகிறோம்.இதிலும் 25 மதிப்பெண்ணுக்கு தேர்வு, assignment, assessment என வேலை அதிகம் தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் சிலர் அடுத்த அலை வந்துவிடுமோ எனும் பயத்தில் ரெகுலர் பாடத்தையும் அவ்வப்போது கூறி வீட்டில் படிக்க ஏதுவாக நடத்துகின்றனர்.மாணவ மாணவியர் அடிக்கடி விடுப்பு எடுக்கின்றனர். வாரம் மூன்று நாள் வர வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு எடுக்கின்றனர்.வேலைக்கு செல்வோர் சிலர் 45 நாள் bridge course முடிந்தவுடன் ரெகுலர் வகுப்புக்கு வருகிறேன் என்கின்றனர். மாஸ்க் வந்தவுடன் தூக்கி வீசி விளையாடுகின்றனர். மிரட்டினால் பக்கத்தில் இருப்பவரின் பையில் உள்ள மாஸ்க்கை போடுகிறார்கள்.

தினசரி பிரிட்ஜ் கோர்ஸ் பாடத்தையே முழுமையாய் முடிக்க முடிவதில்லை.

மாலையில் வரிசையில் நின்று கண்காணித்து அனுப்பினாலும் பேக்கரி மற்றும் பேருந்து நிறுத்தத்தில் கும்பலாய்த் தான் இருக்கின்றனர் மாணவர்கள் என புலம்புகின்றனர். நடுநிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களையும் மாற்றுப் பணியில் ஈடுபடுத்தினால் சுமைகுறையும் என்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)
பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

தற்போது அரசுப் பள்ளியில் படித்து 7.5% சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்க்கு கல்விச் செலவு இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது அரசுப்பள்ளியை நோக்கி பார்வையை திருப்பியுள்ளது.

இன்னும் பலரின் மைண்ட் செட் முழுக்க இந்த ஆண்டும் ஆல் பாஸ் மனநிலையிலேயே உள்ளனர். இதைத்தான் முதலில் மூளைச்சலவை செய்து வருகிறோம். இந்த ஆண்டு நிச்சயம் தேர்வு கட்டாயம் நடக்கும் என்பதை தினசரி கூறி வருகிறோம். வாட்ஸ் அப்பில் பாடம் அனுப்பினால் பார்ப்பது கூட இல்லை. சிலர் ஸ்டேட்டஸ் பார்ப்பது போல் அப்படியே கடந்து விடுகின்றனர். எங்களுக்குத்தான் மிகவும் கவலையாய் உள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.

#மாணவர்கள்

நண்பர்களையும் பள்ளியையும் பார்த்ததில் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல் பார்க்கின்றனர். ஒரு மாணவரிடம் பேசிய போது.. ஜாலியா போகுது, படிக்க சொல்லி கட்டாயம் இல்லை. ஆனாலும் பிரிட்ஜ் கோர்ஸூடன் பாடமும் அவ்வப்போது நடத்துகின்றனர்.வீட்டில் சென்று படிக்கிறோம்.போன் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுவதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் இந்த வாரத்தில் டெஸ்ட் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர். வகுப்பறை, ஆசிரியர்கள் போதிய அளவில் உள்ளதால் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். விளையாட்டு வகுப்பெல்லாம் விடுவதில்லை என ஒருவர் பின்னாலிருந்து கூறினார்.

மூன்றாவது அலைக்காக வெயிட்டிங். எப்படியும் இந்த ஆண்டும் ஆல்பாஸ் ஆனால் ஹேட்ரிக் அடித்து விடுவோம் என்று துடுக்குடன் பேசி சிரிக்கின்றனர் மாணவர்கள்.

பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)
பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

#இடர்பாடுகளும் சவால்களும்

*9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நோட்டுகள் தராததால் பலர் கடைகளில் வாங்கிவிட்டனர். சிலர் வறுமையில் உள்ளதால் பழைய நோட்டுக்கள்,தம்பிகளின் சிலேட்டுகளில் எழுதிப் பார்க்கின்றனர் (எப்பசார் தருவீங்க)

*பல அரசுப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை உள்ளது.

*படிப்பில் மாணவியர் பொறுப்புடன் இருக்கின்றனர். மாணவர்கள் தான் பொறுப்பின்றி இருப்பதாக தெரிவித்தனர்.

*தினசரி புள்ளிவிபரங்கள் கேட்பது, பதிவேடுகள் பராமரித்தல் இருப்பதால் மனச்சோர்வு அடைகின்றனர் ஆசிரியர்கள்.

*ஆனாலும் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்க்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பெற்றுத்தர உள்ளனர்.

*பிரிட்ஜ் கோர்ஸ் கவலையின்றி, தனியார் பள்ளிகளில் அட்வான்ஸாக பாடங்களை நடத்தி வருகின்றனர்

*சில தனியார் பள்ளிகளில் பணம் கட்டினால் தான் புத்தகம் எனக் கூறுவதால் பலர் கடன் வாங்கி பணம் கட்டி படிக்கின்றனர்

*இந்த ஆண்டு கூடுதலாய் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு புத்தகம் இன்னும் வழங்கப்படவில்லை

*மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பில் சில ஆசிரியர்கள் உள்ளதால் ஒருவரே பல வகுப்புகளை பார்க்கும் சூழல்

*போதாக்குறைக்கு I.C.T (Information Communication Technology)

பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் பாதிப் பேர் அதற்கு சென்றுவிடுகின்றனர்.இதனால் வகுப்பில் ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது

*அரசுப் பள்ளியை நோக்கி வந்தவர்களை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, புத்தகங்கள், ஆசிரியர்கள் இல்லாத நிலை தொடர்வதால் மீண்டும் வேறு வழியின்றி தனியார் பள்ளிக்கே மீண்டும் செல்லும் ஆபத்தும் உள்ளது.


*30% மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்பு முறையில் திருப்தியற்ற நிலையில் இருந்ததாக ஆய்வு கூறுகிறது. ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி விட்டனர். இதற்கு நேரடி வகுப்பு ஒன்றே நிரந்தர தீர்வு.


*இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு எழுதுவோர்.. எந்த வித பொதுத்தேர்வும் எழுதியதில்லை ஆதலால் ஒரு வித அச்ச உணர்வுடனேயே இருக்கின்றனர்.


*நடப்பு கூட்டத்தொடரில் கல்வி அமைச்சர் அறிவித்த புத்தகப் பை நோட்டுக்கள்,காலணிகள் அனைத்தும் ஒவ்வொரு பள்ளி அறையிலும் வழங்காமல் பாதுகாப்பாக உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

சனிக்கிழமை பள்ளி வைப்பதால் பல மாணவ மாணவியர் வருகை புரிவதில்லை. இந்த ஆண்டு பள்ளியில் இடைநின்றோர் விகிதம் அதிகம் உள்ளது. ஊருக்குப் போகிறேன் எனக்கூறி மாற்றுச்சான்றுதழ் பெற்று செல்லும் பல பெற்றோர்கள் ஊரிலும் போய் பள்ளியில் சேர்ப்பதில்லை. குழந்தை தொழிலாளர்களாக இன்னும் சிலர் தொடர்கின்றனர். பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த இயலாத சூழலில் வீட்டிலேயே சிலர் இருக்கின்றனர். காலம் கைவிட்டாலும் கல்வி கை விடாது எனும் நம்பிக்கையில் பள்ளிக்கு வருகின்றனர் இளந்தலைமுறையினர்.


கைப்பொருள் கொடுத்தும் கற்றல்! கற்றபின் கண்ணும் ஆகும்; மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும்பொய்ப்பொருள் பிறகள்; பொன்னாம் புகழுமாம் துணைவி ஆக்கும் (சீவக சிந்தாமணி)


கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்பாடல் கையில் உள்ள பொருளை கொடுத்தாயினும் படி. அது உண்மையான பொருளைத் தந்து மெய்பொருளாகவும் உறுதுணையாகவும் கல்வி மட்டும் இறுதிவரை வரும். அத்தகைய கல்வியை ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் கற்போம்.!

-நிரஞ்சனா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு