Published:Updated:

கனவுகள் நிஜமான தருணம்! | My Vikatan

Representational Image

என் உறவுகளில் பலரும் , பெரிய ஆங்கில வழிக் கல்வியில் படித்த 'அதிமேதாவிகளெல்லாம்' ஒரு காலத்தில் இவளெல்லாம் எதை சாதிக்க போகிறாள் 'தமிழ் வழிக் கல்வியில்' படித்து... என்று என் காது படவே சொன்னவர்கள்.

கனவுகள் நிஜமான தருணம்! | My Vikatan

என் உறவுகளில் பலரும் , பெரிய ஆங்கில வழிக் கல்வியில் படித்த 'அதிமேதாவிகளெல்லாம்' ஒரு காலத்தில் இவளெல்லாம் எதை சாதிக்க போகிறாள் 'தமிழ் வழிக் கல்வியில்' படித்து... என்று என் காது படவே சொன்னவர்கள்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

படிக்கும் பள்ளியோ, வசிக்கும் ஊரோ சாதனை புரிய தடை ஏதும் இல்லை... உண்மை உண்மை மறுக்க முடியாத உண்மை.. நான் பிறந்தது கிராமம் தான்... படித்தது தமிழ் வழிக் கல்வியில் தான்! சின்ன வயதில் இருந்தே மற்றவர்கள் என்னால் முடியாது என்று ஏதாவது ஒரு செயலை சொல்லும்பொழுது ,அதை நன்முறையில் செய்து பாராட்டு வாங்க வேண்டும் என்பது எனது கனவாகவே இருந்தது.

என் உயர்ந்த கனவுகளை அடைய எண்ணம் என்ற ஒன்றுக்கு உயிர் கொடுத்தேன்.. அந்த உயிருக்கு ஒரு உருவம் கொடுத்தது... என்னைச் சுற்றியுள்ள சில நல்ல உள்ளங்கள்.

முதலில் எதிலெதிலெல்லாம் நான் பலம் என்பதை உணர ஆரம்பித்தேன். என் பேச்சு, என் எழுத்து பழகும் விதம் , மற்றவர்களை அனுசரித்து போவது, சரியான நேரத்தில் என் வாதத்தை மிகச் சரியாக எடுத்துரைப்பது..

எந்த விஷயத்தையும் நேர்மையான அணுகு முறையில் அணுகுவது... எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடம் இருக்கும் அழகு தமிழ்…

என் தமிழால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் மிகவும் உறுதியாய் நம்பினேன்.

ஆதிரை வேணுகோபால்
ஆதிரை வேணுகோபால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் பேச்சால் (தமிழால்)... தீர்க்கவே முடியாத நிறைய பிரச்சனைகளை ...(என் உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில்) குறிப்பாக பல விவாகரத்துகளை எனது கவுன்சிலிங் மூலம்(சலிக்காமல் பேசிப் பேசி) கோர்ட்டு படி ஏறாமல் ... சேர்த்து வைத்ததை... என் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன் இன்றளவும்.

என் உறவுகளில் பலரும் , பெரிய ஆங்கில வழிக் கல்வியில் ( பள்ளியில்) படித்த 'அதிமேதாவிகளெல்லாம்' ஒரு காலத்தில் இவளெல்லாம் எதை சாதிக்க போகிறாள் 'தமிழ் வழிக் கல்வியில்' படித்து... என்று என் காது படவே சொன்னவர்கள்.அப்படி சொன்ன பலரும், இன்று நான் கூறும் உளவியல் ஆலோசனைகளை கேட்டு/பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

இதோ இந்தக் கட்டுரையை இப்பொழுது நான் தாய்லாந்து ஃபுக்கட் விமான நிலையத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் தங்கி இருந்த மெரினாஃபுக்கட் ஹோட்டலில் இன்று காலை உணவிற்காக (complimentary breakfast) சாப்பிட வந்த போது நான் தமிழில் பேசியதை கேட்ட நான்கைந்து பெண்மணிகள் என்னருகே வந்து ``நீங்கள் பிரபலதமிழ் பத்திரிகையில் தொடர் எழுதும் ஆதிரை வேணுகோபால் தானே... இப்போது கூட அந்த தொடர் வந்து கொண்டிருக்கிறது'' என்று அதன் பெயரைக் குறிப்பிட்டார்கள். .. அந்த ஒரு நொடி.. வாழ்க்கையில் ஏதோ கொஞ்சம் சாதித்தது போல் தோன்றியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுவரை உணவருந்தி கொண்டிருந்த (அவர்களில் ஒருவர்)அன்பரசு என்பவர் 'உறவுகளிடம் உறவு மலர'.. என்று நீங்கள் எழுதி இருந்த ஒரு தொடர் இன்னமும் என் நினைவில் இருக்கிறது என்று எப்பொழுதோ நான் எழுதிய ஒரு கட்டுரையைச் சொல்லி, அந்தப் பத்திரிகையையும் குறிப்பிட்டு சொன்னார். எனக்கு பயங்கர ஆச்சரியம் பிளஸ் சந்தோஷம் விழிகளில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது. சிறகில்லாமல் பறந்தேன். தமிழ் வழிக் கல்வியில் படித்த என்னால் எதையும் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும், 'என்னாலும் முடியும் 'என்று நிரூபித்தது போல் இருந்தது அந்த நிகழ்வு. வாழ்க்கையில் எல்லாம் கற்றவர்கள் யாரும் இல்லை கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு.. கடின உழைப்பு வெற்றியைத் தராவிட்டாலும் வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் தரும் என்பதில் எனக்கு அசாத்திய நம்பிக்கை!

ஆதிரை வேணுகோபால் .
ஆதிரை வேணுகோபால் .

ஆம் ... இருபது வருடங்களுக்கு முன்பு பல இதழ்களிலும் எழுதினேன்.. எந்த இதழ்களிலும் எழுத்து பிரசுரமாகவில்லை. எல்லாம் திரும்ப வந்து கொண்டே தான் இருந்தது. விக்ரமாதித்தன் வேதாளம் போல் கொஞ்சமும் சலிக்காமல் எழுதினேன் எழுதினேன்... எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஓரு நாள் அவை எல்லாம் பட்டுக்கம்பளம் விரித்தாற் போல் என் எழுத்துகளை ஏற்றுக் கொண்டன.

மொத்தத்தில் "சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் வெற்றியின் உண்மையான மகத்துவத்தை நம்மால் உணர முடியும்." சிறப்பான நாளை வேண்டுமானால் நேற்றைவிட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். உழைக்கிறேன்... உழைப்பேன் உழைத்துக் கொண்டே இருப்பேன்....

தமிழ் வழி கல்வியில் படித்த நான் ஏதோ துளியூண்டாவது சாதித்து இருக்கிறேனா ? என் கேள்விக்கான பதிலை நீங்கள் சொல்லுங்கள்..!

நான் அடைந்த வெற்றி, அடையப் போகும் வெற்றி எல்லாவற்றிற்கும் காரணம் என் அழகிய தமிழ்!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால் .

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.