Published:Updated:

பேருந்தில் ஒரு நாள்!

Representational Image

இது நாள் வரையிலும் பொதுப் பிரச்சனையில் தலையிடாத பெரிய மனுஷங்களுக்கும், வேடிக்கை மட்டுமே பார்க்கும் மகா ஜனங்களுக்கும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்...

பேருந்தில் ஒரு நாள்!

இது நாள் வரையிலும் பொதுப் பிரச்சனையில் தலையிடாத பெரிய மனுஷங்களுக்கும், வேடிக்கை மட்டுமே பார்க்கும் மகா ஜனங்களுக்கும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்...

Published:Updated:
Representational Image

என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்த, இது நாள் வரையிலும் பொதுப் பிரச்னையில் தலையிடாத பெரிய மனுஷங்களுக்கும், வேடிக்கை மட்டுமே பார்க்கும் மகா ஜனங்களுக்கும், முக்கியமாக பிரச்னையில் சிக்கினால் கண்ணை கசக்கிக்கொண்டே வீட்டுக்குப் போகும் பெண்களுக்கும் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன்...

கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒரு எக்ஸாம்க்காக ஒரு காலேஜுக்கு போனேன். மூணு மணி நேரம் பயணம். எக்ஸாம நல்லபடியா முடிச்சுட்டு வீட்டுக்கு வர பஸ் ஏறுனேன்.

எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் இருக்கு... நான் எப்ப வெளில போனாலும் எந்த பஸ்ல ஏறுறேன்... எத்தனை மணிக்கு கிளம்புறேன்னு என் அப்பா, அண்ணா அப்புறம் என் ஃப்ரண்ட்டுக்கு தகவல் சொல்லிருவேன், என்னோட பாதுக்காப்புக்காக... அதே போல அன்றும் எல்லார்கிட்டயும் தகவல் சொல்லிட்டு ஜன்னல் ஓரமா தேடி புடிச்சு போய் ஒரு சீட்டுல உட்கார்ந்துட்டேன்.

பேருந்து
பேருந்து

ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துட்டு ஹெட் செட்ல நமக்கு புடிச்ச பாட்ட கேட்டுட்டு வர்ற உணர்வு இருக்கே... ப்பா... வேற லெவல் உணர்வு அது... எனக்கு எப்போதுமே யுவன்தான். யுவன் சார் பாட்ட கேட்டுட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துட்டு வர்றப்ப, என்னைய யாரோ குறுகுறுனு பார்க்குற மாதிரி இருந்துச்சு... பெண்களுக்குத்தான் உள்ளுணர்வு அதிகமாச்சே சொல்லவா வேணும்...

சரி யாருடா அதுனு திரும்பிப் பார்த்தா... ஒரு பையன் என்னைய பார்த்துட்டு சிரிச்சுட்டு நின்னான். இவன் நமக்கு தெரிஞ்ச மூஞ்சி மாதிரி இல்லையேனு, ``என்னடா தம்பினு” கேட்டேன். அதுக்கு ``ஒண்ணும் இல்லையேனு” சொல்லிட்டு திரும்ப சிரிச்சுட்டே நிக்க, சரி எதுவும் மூளை கோளாறு போலனு அதுக்கு அப்புறம் நானும் அவன கண்டுக்கல. கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருந்த அக்கா, உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்னையா? உங்க லவ்வர் உங்களயே பார்த்துட்டு இருக்காங்கனு கேட்க... யாருடா அது? எனக்கே தெரியாம எனக்கு லவ்வரானு பின்னாடி திரும்பி பார்த்தா... அதே பையன் என் பின்னாடி சீட்டுல உட்கார்ந்து, என் சீட்டு பின்னாடி இருக்க கம்பில தலைய சாய்ச்சு என் கழுத்துக்கிட்ட அவன் முகத்த வச்சுட்டு பார்த்துட்டு இருந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவன முறைச்சுக்கிட்டே...`` கண்டவன் கூடலாம் என்னைய சேர்த்து வச்சு பேசாதீங்கக்கா... உங்க வேலையப் பாருங்க’’னு அந்த அக்காவ திட்டிட்டு திரும்ப நான் பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரத்துல என் கால யாரோ சுரண்டுற மாதிரி இருக்க... திரும்பி அவன முறைச்சா... அவன் என்னனா அசராம நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கனு கண்ணடிக்கிறான்...

அப்பிடியா தம்பி... ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு என் ஃப்ரண்ட்டுக்கு போன் பண்ணி என் அப்பா கிட்ட பேசுற மாதிரி... அப்பா நான் இந்த பஸ்ல வந்துட்டு இருக்கேன்... என்னோட செருப்பு பிஞ்சுரும் போல இன்னும் கொஞ்ச நேரத்துல... நான் வீட்டுக்கு வர்றப்ப எனக்கு ஒரு புது செருப்பு வாங்கி வைங்கப்பானு சொல்லி போன வச்சுட்டு. திரும்பி அவன பார்த்தா... ரெண்டு சீட் தள்ளி போய் உட்கார்ந்து இருந்தான். ஹப்பாடா தொல்லை விட்டுச்சுனு நிம்மதியா பெருமூச்சு விட்டுட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன்.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் என் பை எல்லாம் எடுத்துட்டு இறங்க போறப்ப எதார்த்தமா அவன பார்க்குறேன், திரும்ப கண்ணடிச்சு பிளையிங் கிஸ் குடுக்குறான்... மவனே மாட்டுனடானு நினைச்சுகிட்டு நைசா இறங்க போறப்ப கூட்டத்துல இடிக்கிற மாதிரி அவனோட கையில பிளேட வச்சு கிழிச்சுட்டு.. அவன் காலுல என் செருப்புல நல்லா நருக்குனு மிதிச்சுட்டு... இனிமே எந்த பொண்ண தப்பா பார்த்தாலும் உனக்கு இதான் ஞாபகம் வரணும்னு வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன்.

இந்த விஷயம் பஸ்ல எல்லாருக்கும் பொதுவுலதான் நடந்துச்சு... பஸ்ல உள்ள எல்லாரும் அவன் பண்ணுன சேட்டைய பார்த்துட்டு தான் இருந்தாங்க... ஏன் அவன ஒருத்தர்கூட தட்டி கேட்கல? நமக்கேன் வம்புனு போயிடுறாங்க இல்லையா?

இதே விஷயம்... இல்ல இதவிட மோசமான விஷயம் அவங்க குடும்பத்து பொண்ணுங்களுக்கு நடந்தா இப்பிடித்தான் சும்மா இருப்பாங்களா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விஷயத்த என்னால வீட்டுல சொல்ல முடியாது. சொன்னா அதுக்கு அப்புறம் என்னய வீட்ட விட்டே வெளில விட மாட்டாங்க... இப்பிடி இதே போல எத்தனை பொண்ணுங்க வீட்டுக்கு பயந்து இந்த மாதிரி ஜீவன்கள சகிச்சுட்டு போய் இருக்கீங்க? நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி ஜீவன்கள எதிர்க்காம அமைதியா சகிச்சுட்டு போறீங்க...

இந்த மாதிரியானவனுகள எதிர்க்கனும், பயந்து அழுகக் கூடாதுனு நான் ஏழாவது படிக்கிறப்போ என்னோட தமிழ் ஐயா எனக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க. எங்க ஐயா அப்போ சொன்ன விஷயம் ``எப்போ வெளில போனாலும் பொண்ணுங்க பைல நாப்கின் வச்சுக்கிற மாதிரி, மிளகாப்பொடியும் மிளகுப்பொடியும் சேர்த்து வச்சுக்கணும்… கூடவே எப்போதும் ஒரு பின் வச்சுக்கணும்னு கத்துக்குடுத்தாங்க... அவரு சொல்லி பல வருஷம் ஆயிட்டாலும் இன்னும் இங்க எதுவும் மாறாம அதோட தேவை எனக்கு இருந்துட்டேதான் இருக்கு…

Representational Image
Representational Image

இது மாதிரி நம்ம கிட்ட தப்பா நடந்துக்கிறவனலாம் நாம சகிச்சுட்டு அமைதியா போகணும்னு எந்த அவசியமும் இல்லை... நாம அவங்கள எதிர்த்தாதான் அடுத்த பொண்ணுக்கிட்ட அவங்க அதே போல தப்பா நடந்துக்க பயப்படுவாங்க.

`ஆண் வர்க்கத்திற்கே

அவமானம் சின்னமாய்

ஆடவன் என்ற உருவில்

வஞ்சம் நிறைந்த ஓநாய் உன்னை

வன்புணர வரும் நேரம்...

சூழ்நிலைக் கைதியாகி உன்

சுயப்பலத்தை இழந்துவிடாதே....

அணங்கு உந்தன்

ஆடை நுனியை அந்த

அசிங்கம் பிடித்த ஓநாய்

தொடும் ஒரு விநாடி முன்

அவன் அலறி அடித்து ஓடுமாறு

அவனை நீ செய்திருக்க வேண்டும்... ‘

- பாரதியின் பைத்தியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism