Published:Updated:

நாக்கு | குறுங்கதை | My Vikatan

Representational Image

'பள்ளி முதல்வராய் இருப்பதால் ஆசிரிய அலுவலர்களை நிற்க வைத்து அதிகாரமாய் பேசத் தேவையில்லை என்பதும்; அமரவைத்து கௌரவமாகவும் பேசலாமே...!' என்பது சீனியர் ஆசிரியர் சிவராமனின் கருத்து.

நாக்கு | குறுங்கதை | My Vikatan

'பள்ளி முதல்வராய் இருப்பதால் ஆசிரிய அலுவலர்களை நிற்க வைத்து அதிகாரமாய் பேசத் தேவையில்லை என்பதும்; அமரவைத்து கௌரவமாகவும் பேசலாமே...!' என்பது சீனியர் ஆசிரியர் சிவராமனின் கருத்து.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"அது ஒரு மெட்ரிக் பள்ளி.

பிரின்ஸிபால் மாத்ருபூதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. எந்தநேரமும் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால் வெடிக்கும்.

பிரின்ஸிபால்ன்னா கொம்பா முளைச்சிருக்கு ?" பொறுமிப் பேசுவார் டிரில் மாஸ்டர் முத்து.

"எந்நேரமும் கடுகு வெடிக்கிற மாதிரி .மூஞ்சி.. ..விடியாமூஞ்சி.." தமிழாசிரியர் கோபியின் சாடல்.

"சரியான முசுடு" கணக்கு டீச்சரின் கமெண்ட்.

திரைமறைவில்தான் பிரின்ஸிபால் மாத்ருபூதத்தை அவதூறு பேசுவார்களே தவிர அவருக்கு முன் 'கப்சிப்' தான்.

'பள்ளி முதல்வராய் இருப்பதால் ஆசிரிய அலுவலர்களை நிற்க வைத்து அதிகாரமாய் பேசத் தேவையில்லை என்பதும்;

அமரவைத்து கௌரவமாகவும் பேசலாமே...!' என்பது சீனியர் ஆசிரியர் சிவராமனின் கருத்து.

மாத்ருபூதம் ரிடையர் ஆகிச் சென்றுவிட்டார்.

சீனியாரிட்டி அடிப்படையில் சிவராமன் முதல்வரானார்.

முதல்வரான முதல் நாளே "ஸ்டாஃப் ஃப்ரண்ட்லி" முறையில் பணியை துவங்கினார்.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்நாள் முதல் பிரிவு முடியும் நேரம் சுற்றுக்கு சென்றார்.

மூடியிருந்த லேடிஸ் ஓய்வறையிலிருந்து “சிவாராமன் என்ன செய்தான் தெரியுமா…?”

பலமாய் பேசிய உரையாடல் அவர் காதில் விழுந்தன.

சற்றே காதில் வாங்கினார்..

"சிவராமு உட்கார வெச்சிப் பேசுது போல..." ராகிணி

"பழைய பிரின்ஸ்ஸிபால் விஷயாதி. நேச்சர் ஆஃப் ஒர்க் தெரிஞ்சவர். சிவராமுவைப் பொருத்தவரை அனுசரிச்சு போனால்தான் ஓட்டமுடியும்னேன்.." இது கண்ணகி மிஸ்.

‘ஆசிரியர்களை அடிமைபோல நடத்தக்கூடாது. அவர்களை மதிப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, கௌரவப் படுத்திய என்னை இப்படிச் சிறுமைப்படுத்திப் பேசுகிறார்களே...?’

'ச்சே.. இப்படியும் மனிதர்களா?’

ஆயாசத்தோடு அறைக்குத் திரும்பினார் சிவராமன்.

ப்யூனை அழைத்தார்.

"எக்ஸ்ட்ரா நாற்காலிகளை எடுத்துரு" என்று உத்தரவிட்டார்.

" ஐயா.. " என்று 'ஓ ஏ' ஏதோ சொல்ல வாய் திறந்தான்.

" சொன்னதை செய்... இல்லைன்னா வேலையை விட்டுத் தூக்கிருவேன்" கத்தினார் சிவராமன்.

"பழைய பிரின்சி முன்கோபி தான். ஆனால் வேலையை விட்டு தூக்கிருவேன்னு அவர் ஒரு நாளும் சொன்னதில்லை. இவருக்கு அவர் எவ்வளவோ தேவலாம்"

முணுமுணுத்துக்கொண்டே ப்யூன் நாற்காலிகளை அப்புறப்படுத்தினான்.

இந்தச் செய்தி தலைப்புச் செய்தியாகி பள்ளி முழுவதும் வைரலாகப் பரவிக் கொண்டிருந்தது.

*******

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.