Published:Updated:

ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதமும் நூற்பு சிவகுருநாதனும்!

இவ்வளவு நாட்கள் விவசாயம் பற்றி அறிவுரை கூறி வந்த தமிழ் சினிமா இப்போது நெசவுத் தொழில் பற்றி பேச ஆரம்பித்து உள்ளது. வரவேற்புக்குரிய விஷயம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கி நடித்த படம் "சிவகுமாரின் சபதம்". இவ்வளவு நாட்கள் விவசாயம் பற்றி அறிவுரை கூறி வந்த தமிழ் சினிமா இப்போது நெசவுத் தொழில் பற்றி பேச ஆரம்பித்து உள்ளது. வரவேற்புக்குரிய விஷயம். அந்த விதத்தில் ஆதியின் சிவகுமாரின் சபதம் படமும் காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்துள்ளது.

டிகிரி முடித்து மூன்று வருடங்களாக சிறுசிறு வேலைகள் செய்து வரும் ஆதி தன் குடும்பத்தை காப்பாற்ற தனது தாத்தா செய்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை கையில் எடுக்கிறார். தன் தாத்தாவிடம் இருந்து பட்டு நெய்யும் நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறார். அப்படி அவர் நெசவு நெய்யும் காட்சிகளை "நேசமே" பாடலில் பார்த்ததும் இவரை போல நிஜத்தில் நெசவு நெய்யும் ஒரு இளைஞரின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள "நூற்பு" சிவகுருநாதன் தான் ரியல் சிவக்குமார். சிவகுருநாதனின் வாழ்க்கை தான் திரையில் சிவக்குமாரின் சபதமாக மாறி உள்ளது. ஐடி கம்பெனி ஒன்றில் மாதம் 60000க்கும் மேல் சம்பாதித்து வந்தவர் சிவகுருநாதன். அவர் தனது வேலையை விட்டுவிட்டு சிவராஜ் அவர்களின் "குக்கூ" காட்டுப்பள்ளியில் பயிற்சி பெற்று தற்போது ஈரோட்டில் சொந்தமாக "நூற்பு" என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அது மட்டுமின்றி நெசவுத் தொழிலை இளைஞர்கள் பலருக்கு கற்றுக் கொடுத்தும் வருகிறார்.

சிவகுமாரின் சபதம்
சிவகுமாரின் சபதம்

அக்டோபர் 10, 2019 ம் ஆண்டில் ஆனந்த விகடனில் "வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்" என்ற பெயரில் நூற்பு சிவகுருநாதன் பற்றி கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. (பாரம்பர்யம் - https://www.vikatan.com/news/general-news/sivagurunathan-talking-about-traditionally-weaving-work) ஒருவேளை இந்தக் கட்டுரை தான் சிவகுமாரின் சபதம் படத்திற்கு இன்ஸ்பிரேசனாக இருந்திருக்குமோ என்ற நினைப்பு படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. திரையில் காட்டியது போல நிஜத்தில் ஒரு மனிதர் உள்ளார், அவர் நமக்கு நன்கு தெரிந்தவர் என்றதும் மனதில் மகிழ்ச்சி உண்டானது.


அதே போல எழுத்தாளர் ஜெயமோகனும் தன்னுடைய இணையதளத்தில் செப்டம்பர் 29, 2021 ல் நூற்பு சிவகுருநாதன் பற்றி எழுதி இருக்கிறார். சிவகுமாரின் சபதம் படம் எடுப்பதற்கு முன்பே ஹிப்ஹாப் ஆதி நூற்பு சிவக்குமாரை பற்றி தெரிந்து வைத்திருந்தார் என்றால் படத்தின் டைட்டில் கார்டில் "நூற்பு" சிவகுருநாதன் பெயரை இடம்பெற செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நூற்பு பெயர் இடம்பெறவில்லை. அவர் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறவில்லை என்பதை நினைக்கும்போது சிவகுருநாதன் பற்றி ஹிப்ஹாப் ஆதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.


ஐடி வேலையை விட்டுவிட்டு நெசவுத் தொழிலை பிறருக்கு கற்றுக்கொடுத்து நெசவு தொழிலை வெற்றிகரமான தொழிலாக மாற்றி வரும் ஈரோட்டு மண்ணின் மைந்தன் "நூற்பு" சிவகுருநாதன் பற்றி ஹிப்ஹாப் தமிழா பேச வேண்டும். இது திரையில் நடந்த நெசவு புரட்சி போல் நிஜத்திலும் நெசவுத்தொழிலில் மாற்றம் ஏற்பட வழிவகுக்கும்.


- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு