Published:Updated:

குழந்தை எனும் தேவதை! - உண்மை சம்பவம் | My Vikatan

Representational Image ( Photo by Shyam on Unsplash )

காலங்கள் உருண்டோட நாமும் பணிக்குச் செல்ல, உடன் நமது குழந்தைகளை அழைத்துச் செல்லும் காலமும் வந்தது. அப்படியான ஒரு நாள் அது.

குழந்தை எனும் தேவதை! - உண்மை சம்பவம் | My Vikatan

காலங்கள் உருண்டோட நாமும் பணிக்குச் செல்ல, உடன் நமது குழந்தைகளை அழைத்துச் செல்லும் காலமும் வந்தது. அப்படியான ஒரு நாள் அது.

Published:Updated:
Representational Image ( Photo by Shyam on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஆரம்ப பள்ளிக்கூட காலத்தில் ஒரு சில நாட்களில் ஆசிரியைகள் தங்களுடைய குழந்தைகளையும் தங்களுடன் பள்ளிக்கு அழைத்து வருவார்கள். அந்த குழந்தைகளும் நமது சம வயது, வகுப்பு படிப்பவர்கள் என்ற போதிலும் அவர்களுடைய உடை, பேசும் விதம் என அனைத்து நடவடிக்கைகளையும் ஆச்சரியமாக பார்ப்போம். அவர்களுடன் நட்பு பாராட்ட மிகுந்த ஆவல் ஒரு புறம் இருக்க, . அடுத்த முறை எப்போது அவர்களை அழைத்து வருவார்கள் என்ற ஆவல் மறுபுறம் இருக்கும்.

காலங்கள் உருண்டோட நாமும் பணிக்குச் செல்ல, உடன் நமது குழந்தைகளை அழைத்துச் செல்லும் காலமும் வந்தது. அப்படியான ஒரு நாள் அது. முதல் வகுப்பிற்கு முன்பாக எல்கேஜி, யுகேஜி என சென்று கொண்டிருந்தார் எனது முதல் குழந்தை அஷ்மிதா. அது ஒரு சனிக்கிழமை அஷ்மிதா அவர்களுக்கு விடுமுறை. அதனால் என்னுடைய இரு சக்கர வாகனத்தின் முன்பாக நிற்க வைத்தபடி கோவை - சத்தி சாலையில் பயணம். டிவிஎஸ் வேகோ வண்டி என்பதால் முன்பாக உள்ள இடைவெளி அவர் நிற்பதற்கான இடைவெளியாக இருந்தது. பொதுவாகவே கோவை - சத்தி சாலை காலை நேரங்களில் மிகுந்த வாகனங்கள் மிகுந்து பயணிக்கும். மெதுவாக சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தேன் நான். முன்பாக நின்ற அஷ்மிதா அவர்கள் நன்கு வேடிக்கை பார்த்தபடி வந்தார். சத்தி செல்லும் சாலையில் அன்னூர் வரையிலான சாலையில் இரு பக்கமும் புளிய மரங்கள் இருக்கும்.

கோவை
கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாலையோரமாக இருந்த ஒரு புளிய மரத்தின் கீழாக ஒரு வயதானர் கீழே வீழ்ந்து உடல் முழுவதும் ஜன்னி கண்டவராக வெட்டி - வெட்டி இழுத்த நிலையில் கிடந்தார். இரு சக்கர வாகனத்தை மெதுவாக்கி சாலையோரமாக நிறுத்திய நான் எனது குழந்தையை அழைத்துக் கொண்டு அந்த பெரியவரின் அருகே சென்றேன். எனது கையை பிடித்தபடி நின்ற குழந்தை "அப்பா.... இந்த தாத்தாவுக்கு என்னாச்சுப்பா, ஏன் இப்படிக் கெடக்குறார்" என கேட்க, ஒரு நொடி யோசித்த நான் குழந்தையை அவரருகே நிற்க வைத்து விட்டு அடுத்த நொடியே என்னுடைய வாகனத்தில் வைத்திருந்த தண்ணீர் போத்தலை எடுத்து வந்த நான் அவரை மெல்ல என்னுடைய மடியின் கிடத்தி தண்ணீர் போத்தலை திறந்து அவருடைய முகத்தில் தண்ணீரை நான்கைந்து முறை வேகமாக தெளித்து தெளிய வைக்க முயற்சிக்க, அவருடைய நிலையில் எந்தவித மாற்றமுமில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக இந்த நிலையில் உள்ளவர்களுக்கு பருக எதுவும் கொடுக்க கூடாது என முன்பு முதலுதவி பற்றி படித்த ஞாபகம் வர, மறுபடியும் அவருடைய முகத்தில் நீரை தெளித்தபடியே, அடுத்ததாக என்ன செய்வதென என்ற யோசனையில் நான் இருக்க, என்னுடன் நின்ற குழந்தையும் எதுவும் புரியாதவராக என்னுடைய தோளினை பிடித்தபடி நிற்க, பல வாகனங்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு நான்கு சக்கர வாகனம் எங்களை கடந்து நிற்க, அதில் பயணம் செய்தவர்கள் இறங்கி வர, எங்களை கடந்து சென்ற சிறிது தூரம் சென்று விட்ட வாகனம் திரும்பி வந்து, சாலையின் மறுபுறமாக நிறுத்திவிட்டு அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்களும் இறங்கி சாலையை கடந்து ஓடி வந்தனர்.

Representational Image
Representational Image

சுற்றிலும் அனைவரும் நின்று விட... நான் சற்றே அனைவருமே விலகி நில்லுங்கள் நன்றாக காற்று வரட்டும் என்று கூறிட, அடுத்த நொடியே நான்கு சக்கர வாகன ஓட்டுனர் ஒருவர் விரைவாக சென்று தான் ஓட்டி வந்த வாகனத்தில் இருந்து ஒரு இரும்பாலான ஒரு ஸ்பானரை எடுத்து வந்து கீழே விழுந்த பெரியவரின் கைகளில் வைக்க , நானும் அவருடைய கையுடன் அந்த ஸ்பானரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஜன்னி கண்ட அவருடைய உடலில் எங்கும் பட்டு விடாதவாறு பிடிக்க, சில நொடிகளில் ஜன்னி நின்று இயல்படைய சுற்றியிருந்த அனைவருமே நிம்மதியடைந்தோம்.

நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அனைவருமே மிகுந்த அக்கறையுடன், ' இவர யார் உங்களுடன் வந்தவரான?' என்று கேட்க, உங்களைப் போன்றே சாலையில் சென்றவன்தான் நான் என்ற படியே , அவரிடம்' ஐயா தாங்கள் யார்? என்னவாயிற்று? ' என கேட்க, மெல்ல இயல்படைய தொடங்கியிருந்த அவரும், ' தான் இங்கே அருகேயுள்ள ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தாகவும் , கடந்த பத்து நாட்களாக வேலையில்லை எனவும், தன்னுடைய சொந்த ஊர் ஈரோடு அருகேயுள்ள ஒரு கிராமம் எனவும், புதிதாக நடைபெறும் கட்டிடமருகே சமைத்து சாப்பிட்டு வர, கையில் ஏதும் பணமில்லாத நிலையில், பேருந்துக்கு கூட பணம் இல்லாத நிலை, எனவே நடந்தே ஊருக்கு சென்று விட வேண்டுமென நினைத்து நடந்து வந்ததாகவும், வந்த வழியில் இப்படியாகி விட்டதாகவும் கூறினார்.

அஷ்மிதா அவர்களுடன் நான்..
அஷ்மிதா அவர்களுடன் நான்..

சுற்றியிருந்த அனைவரும் அவர் கூறியதை கேட்டவர்கள், என்னை பார்த்து ' நாங்கள் அனைவருமே உங்களுடன் வந்தவர்தான் இவர் என்றே வாகனங்களை நிறுத்தி விட்டு வந்தோம் ' , என்று கூறிட ஸ்பானரை கொண்டு வந்து கொடுத்து உதவிய வாகனத்தில் வந்தவர்கள், 'உங்களை கவனித்து நாங்கள் வண்டியை நிறுத்தியதை விட உங்டளுடன் நின்று கொண்டிருந்த உங்களுடைய குழந்தை, குழந்தையின் முகபாவனைகளை கணடவுடன்தான், இவர் தங்களுடன் வந்தவர் என கருதி வண்டியை நிறுத்தி விட்டு வந்தோம்' என்றனர்.

அடுத்த நிமிடமே அனைவருமே தங்களுடைய சட்டைப் பையில் இருந்த சில ரூபாய் நோட்டுகளை அந்த பெரியவரின் கைகளில் கொடுத்து, ' இனி பேருந்து மூலமாகவே ஊருக்குச் செல்லுங்கள்!' என்று திணிக்க மிகுந்த நெகிழ்வாக அனைவரையும் வணங்கினார் அந்த பெரியவர்.

அனைவருமே அஷ்மிதா அவர்களுடைய கன்னங்களை தொட்டுக் கொடுத்தபடி விடை பெற்றனர். என்னுடைய கல்லூரிக் காலத்தில் இருந்தே 'ஆனந்த விகடன் ' வாங்கி படிக்கும் நான், அப்போதைய ஒரு வார விகடனில் ஒருவர் தன்னுடைய பெயர் 'அஷ்மிதா ' எனவும், அஷ்மிதா என்றால் அதிர்ஷ்ட தேவதை என்று பொருள் எனவும் படித்த போது நினைத்துக் கொண்டேன். நமக்கு வருங்காலத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவருக்கு 'அஷ்மிதா ' என பெயர் வைப்போம் என. உடல் நலன் பாதிக்கப்பட்ட பெரியவர் கீழே விழுந்த நிலையில், அவரை உடனடியாக நான் சென்று பார்த்ததை விட, நான் குழந்தையுடன் நின்ற நிலையை கண்டு ஓடி வந்து உதவியவர்களின் வார்த்தைகளை கேட்ட பொழுதில் உணர்ந்தேன். குழந்தை என்ற அதிர்ஷ்ட தேவதையை பெருமையாக.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.