Published:Updated:

கஷ்டங்கள் போக்கும் கார்த்திகை சோமவார விரதம் | My Vikatan

சோமவார பிரதோஷம்

சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

கஷ்டங்கள் போக்கும் கார்த்திகை சோமவார விரதம் | My Vikatan

சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

Published:Updated:
சோமவார பிரதோஷம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சந்திரனை சோமன் என்பர். சந்திரனுக்கு உரிய கிழமை என்பதால் திங்கட்கிழமை சோமவாரம் என்று வழங்கப்படுகிறது. சோமன் என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழாக்கம் திங்கள். திங்கள் என்றால் சந்திரன். சோமவாரத்திற்கும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தட்சனின் சாபத்தால் தேய்ந்து போன சந்திரன் சிவனைச் சரணடைந்து சாபவிமோசனம் அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

உலகம் முழுவதும் ஒளி வீசச்செய்யக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்த தினம் ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமை ஆகும். 'க்ஷயரோகம்' என்னும் உடல் தேயும் நோய்க்கு ஆளான சந்திரன் சிவனைச் சரணடைந்து மீண்டும் வளர ஆரம்பித்த தினமே கார்த்திகை சோமவாரமாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்வர். இத்தகைய கார்த்திகை சோமவாரத்தில் நாம் சிவபெருமானை ஆராதித்து விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வின் கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் இந்துக்களிடையே புனிதமான ஒரு மாதமாகவும் பலவிரதங்களை அனுஷ்டிக்கும் மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபம், காலபைரவ ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி போன்ற விரதங்கள் கார்த்திகையில் அனுஷ்டிக்கப்படுகின்றன. இப்படி இம்மாதத்தில் பல விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது. இவ்விரதம் மிகவும் சிறப்புக்குரியதாகவும் விஷேசமானதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. துன்பங்களை விலக்கி இன்பங்களை வழங்கக்கூடிய விரதமாக சோமவார விரதம் அமைகிறது.

திருவாசி சிவாலயம்
திருவாசி சிவாலயம்
DIXITH

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றதாம். அவனுக்கு சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு 'சந்திரசேகரர்' என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்து சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

இந்த நாள்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.

கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தை தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாள்களில் சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார், சந்திரனின் பெயரை ஏற்று அருள்பாலிக்கும் தலங்களை தரிசிப்பது விசேஷம்.

கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும்.

ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினரை அழைத்து வந்து உபசாரங்கள் செய்து அவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும். கார்த்திகை மாதத்தில் சிவபெருமான்; அக்னிப் பிழம்பாக இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவரைக் குளிர்விக்க சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

1008 சங்காபிஷேகம்
1008 சங்காபிஷேகம்

கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதி கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும். அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதிகம்.

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து மீள்வர் என்பது நம்பிக்கை.

நம்வாழ்வின் கஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அடையச்செய்யும் கார்த்திகை சோமவார விரதம் இருப்போம்! நன்மைகள் பெருக ந்லம் உண்டாகும்.

- நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.