Published:Updated:

தயிர் வடை முதல் கற்கண்டு வடை வரை! - கொஞ்சம் குக்கிங் நிறைய லவ்

Representational Image ( Photo by Vinitha V on Unsplash )

வடைக்கு உளுந்து மாவு அரைப்பது என்பது பட்டாம்பூச்சியைத் தொடுவது போல் பட்டாம்பூச்சியை இறுகப் பிடித்தால் இறந்துவிடும். மாவை தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால் வடை கல்லு போலாகிவிடும்.

தயிர் வடை முதல் கற்கண்டு வடை வரை! - கொஞ்சம் குக்கிங் நிறைய லவ்

வடைக்கு உளுந்து மாவு அரைப்பது என்பது பட்டாம்பூச்சியைத் தொடுவது போல் பட்டாம்பூச்சியை இறுகப் பிடித்தால் இறந்துவிடும். மாவை தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால் வடை கல்லு போலாகிவிடும்.

Published:Updated:
Representational Image ( Photo by Vinitha V on Unsplash )

கவலையை மறக்க உளுந்து வடை.. மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க தயிர் வடை.. களைப்பைப் போக்க கோஸ் வடை.. வெற்றியைக் கொண்டாட சாம்பார் வடை… ஆரோக்கியத்துக்கு சூப் வடை... அட... அட... இதுதாங்க வாழ்க்கை! இதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை. இதற்குமேல் ஆசைப்படுவதெல்லாம்... புத்தர் சொன்னது தாங்க... அதாங்க ஆசையே அழிவுக்குக் காரணம்.


என் உயிரோடும் உணர்வோடும் கலந்தது வடை. அப்பா (சிறுவயதில்) நடைப்பயிற்சி முடிந்து திரும்பும்போது வாங்கி வந்த கீரை வடையை மறக்க முடியுமா, மறக்கத்தான் முடியுமா? (எனக்கு மட்டும் இரண்டு) (அப்பாவுக்கு நான் ஸ்பெஷல் ஆச்சே!) பண்டிகைகளின்போது அம்மா உரலில் அரைத்து செய்த உளுந்து வடைக்கு ஈடாகுமா மற்ற பலகாரங்கள். உரலில் வடைக்கு மாவு அரைப்பது ஒரு கலை அதிலும் குறிப்பாக பச்சை மிளகாய், இஞ்சியைத் தள்ளி தள்ளி விட்டு அரைக்கும்போது... கூடுதல் சுகம்.

Representational Image
Representational Image
Photo by Prchi Palwe on Unsplash

வடைக்கு உளுந்து மாவு அரைப்பது என்பது பட்டாம்பூச்சியைத் தொடுவதுபோல் பட்டாம்பூச்சியை இறுகப் பிடித்தால் இறந்து விடும். மாவை தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால் வடை கல்லு போலாகிவிடும். (பல்லைப் பதம் பார்க்கும். நெஞ்சை அடைக்கும். அது வேறு விஷயம் ) இலேசாகப் பிடித்தால் பறந்து விடும். சற்று நீரை அதிகமாகச் சேர்த்து அரைத்தால் எண்ணெயில் கரைந்துவிடும். (எண்ணெய் குடிப்பதைத்தாங்க நாசுக்கா சொல்றேன்.) ஆக, பார்த்து பக்குவமா அன்பா தொட்டுத்தொட்டு மாவ அரைக்கணும்.

உரிமையும் கண்டிப்பும் அதிகமானால் உறவுகள் கசந்து போகும். வடை மாவில் உப்பும் நீரும் அதிகமானால் வடை வடையாக வராது. ஆயிரம்தான் நூடுல்ஸூம், சாண்ட்விச்சும் வந்தாலும் நம்ம பாரம்பரிய உணவான வடைக்கு ஈடாகுமா பாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வடையை சுட்டு எடுப்பது... ஆயக்கலைகள் 64-க்குப் பிறகு, 65 வது கலை என்றே சொல்லலாம். மாவை கொஞ்சம் கொஞ்சமாக (கொஞ்சலாய்) (மென்மையாய்) எடுத்து (நடுவில் அழகாக துளையிட்டு) (குட்டிபௌர்ணமி நிலா போல்) வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கணும்.

(தீ மிதமாக எரிய வேண்டும்) வடையின் உட்புறம் வெந்ததும் தீயை அதிகப்படுத்தி மேற்புறம் சிவந்து மொறுமொறுப்பானதும் எடுக்கணும். அந்த சூடான வடையின் மணமிருக்கே... அத ரகசியமா சுவாசிக்கிறப்ப... அது என்னென்னவோ மேஜிக் பண்ணும் நெஞ்சுக்குள்ள. எங்க வீட்டு விருந்தில் தவறாமல் இடம்பெறும் உணவு ஆதிரை'ஸ் ஸ்பெஷல் தயிர் வடை. கொஞ்சம் கிட்ட வாங்க ! அந்த ரெசிபியை உங்க காதில சொல்றேன். நீங்களும் வீட்டுல செஞ்சு கணவரையும் பிள்ளைகளையும் அசத்துங்கள். வடையை சாப்பிடும் அந்த நொடி... ரொமான்ஸ் ஆரம்பமாகிவிடும் நீங்களும் கணவரும் ஓ... பட்டர்ஃப்ளைன்னு பாட ஆரம்பித்துவிடுவீர்கள். (கண்ணோடு கண் பார்த்துக் கொள்ளும்போது வடை சாப்பிடுறதை மறந்துடாதீங்க. சுடச்சுட வடைய சாப்பிட்டு பாடலைத் தொடருங்கள்) அட, சீக்கிரம் சொல்லுங்க! ஆதிரை ரெசிப்பியைன்னு நீங்க திட்டுறது/சொல்றது காதுல விழுது... இதோ சொல்லிடறேன்ப்பா...

Representational Image
Representational Image

ஒரு கப் உளுந்தைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்துவிட்டு மைபோல் கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து எடுங்கள். எட்டு பாதாமை சுடுநீரில் ஊற வைத்து தோல் நீக்கி அதனுடன் எட்டு முந்திரி, தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன், இரண்டு பச்சை மிளகாய், வெள்ளரி விதை ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கப் வாசமான தயிருடன் உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலக்குங்கள். மீதமுள்ள அரை கப் தயிருடன் அரை கப் பாலை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, வடை சூடாக இருக்கும்போதே தயிர், பால் கலவையில் முக்கி எடுத்து அகலமான தட்டில் வையுங்கள். அனைத்து வடைகளையும் சுட்டு அடுக்கிய பிறகு, பாதாம் தயிர் கலவையை அவற்றின் மேல் பரவலாக ஊற்றி உங்களுக்குப் பிடித்த பொடியாக நறுக்கிய மல்லித்தழை அல்லது உங்கள் கணவருக்குப் பிடித்த கேரட் துருவல் அல்லது பிள்ளைகளுக்குப் பிடித்த காராபூந்தியைத் தூவி அழகான உங்கள் வளைக்கரங்களால் பரிமாறுங்கள்.

ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகி டூயட் பாடப்போவது நிச்சயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி கணவருக்கு தயிர்வடை செஞ்சாச்சு இப்போ மாமியார் மாமனாரை அசத்த, அதாவது வீட்டில் உள்ள பெரியவர்களை அசத்த சூப் வடைசெய்யலாமா அதனுடைய ரெசிப்பி…

சூப் வடைக்கு முதல்ல `சூப்' தயார் பண்ணிக்கலாம்.

கால் கப் துவரம் பருப்பை வேக வைத்து இரண்டு கப் அளவுக்கு நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

100 கிராம் பட்டர், காளான், வெங்காயம் 1, தக்காளி 3, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

8 பூண்டு பற்களை நசுக்கிக்கொள்ளுங்கள், 3 காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் தனியா, மிளகு ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன், பட்டை 1, லவங்கம் 1, ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து நைசாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். பருப்பு நீரில் நறுக்கிய காளான், வெங்காயம் தக்காளி பூண்டு கறிவேப்பிலை மல்லித்தழை உப்பு, மஞ்சள்தூள் ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் விட்டு இறக்கிவிடுங்கள்.

வடை மாவு
வடை மாவு

மற்றொரு வாணலியில் வெண்ணெய் விட்டு மீதமுள்ள 1 பட்டை 1 லவங்கம் 1 ஏலக்காய் தாளித்து பருப்புக் கலவையில் ஊற்றி மத்தால் நன்கு மசித்து வடிகட்டி பாதி ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு இறக்க சூப் ரெடி. இப்போ வடை செய்யலாம். ஒரு கப் உளுந்தைக் கழுவி 20 நிமிடம் ஊற வைத்து நீரை வடித்துவிட்டு மைபோல் கெட்டியாக அரைத்து அரைக்கும்போதே தேவையான இஞ்சி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்) அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கோஸ், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தீ மிதமாக எரிய வேண்டும்.

உட்புறம் வெந்ததும் தீயை அதிகப்படுத்தி மேற்புரம் சிவந்து மொறுமொறுப்பானதும் எடுத்து சூடான சூப்பில் போட்டு வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு கொடுக்க,

"என் மருமகளைப் போல் யாராவது உண்டா!" எனப் பாராட்டு மழையில் நனைவது நிச்சயம்.

சரி அடுத்தது குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு இனிப்பு வடை செய்யலாமா!?

ஒரு கப் உளுத்தம் பருப்பு, பச்சரிசி கால் கப், இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு பக்குவமாக அரைத்தெடுங்கள். அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். மாவு சற்று கெட்டியாக இருப்பது அவசியம். நைசாக அரைத்ததும், கற்கண்டையும் சேர்த்து (ஒண்ணே கால் கப்) நைசாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நிதானமான தீயில் மாவை சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுத்து பிள்ளைகளுக்கு பரிமாற பிள்ளைகள் கன்னங்களில் முத்தங்களை பரிசாக அளிப்பர்.

கோடை விடுமுறை விட்டாச்சு... சாம்பார் வடை, வெங்காய வடை, கீரை வடை, கோஸ் வடை மெதுவடை, புதினா வடை இப்படி தினம் ஒன்றாக பிள்ளைகளுக்கு செய்து அசத்துங்கள் தோழிகளே!

என்றென்றும் அன்புடன்,

- ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism