Published:Updated:

அப்போ எதிரி இப்போ ஹீரோ! | My Vikatan

Spinach

குழம்புக்கு தொட்டுக்கொள்ள, ஈவினிங் ஸ்னாக்ஸ் சொல்லியாச்சு... கூடவே இடியாப்பம் சப்பாத்தி/நாண்-க்கு சத்தான சைட் டிஷ் ஒன்று கீரையில் செய்யலாமா?

அப்போ எதிரி இப்போ ஹீரோ! | My Vikatan

குழம்புக்கு தொட்டுக்கொள்ள, ஈவினிங் ஸ்னாக்ஸ் சொல்லியாச்சு... கூடவே இடியாப்பம் சப்பாத்தி/நாண்-க்கு சத்தான சைட் டிஷ் ஒன்று கீரையில் செய்யலாமா?

Published:Updated:
Spinach

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சுருக்கமாக சொன்னால் 20+ வயதில் கீரை எனக்கு வில்லன். (மூன்று முடிச்சு ரஜினி மாதிரி) 50+...ல் அவனே கதாநாயகன்.. (மன்னன் 'தலைவர்' மாதிரி.) அம்மா தட்டில் வைக்கும் கீரையை அம்மா திரும்பி பார்ப்பதற்குள் தட்டுக்கு அடியில், அல்லது பக்கத்து தட்டில், அல்லது ஒதுக்கிய கருவேப்பிலை காய்ந்த மிளகாயில் சேர்த்து.. அல்லது சாப்பிட்டாச்சு என்று சொல்லி (கடைசி வாயாக) வாயில் வைத்திருந்து கை கழுவும் நேரத்தில் துப்பியதெல்லாம் ஒரு காலம்.

ஆனால் இப்போ.. இந்த கீரையை இப்படித்தான் செய்யணும் . இந்த கீரையை இப்படி கூட செய்யலாம் இந்த கீரையை இப்படி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்... என்று சொல்லும் அளவுக்கு கீரை சமையலில் நான் பிஎச்டி பட்டம் வாங்கியாச்சு.

முள்ளங்கிக் கீரை பொறியல்
முள்ளங்கிக் கீரை பொறியல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் செய்யும் வித்தியாசமான கீரை ரெசிபிகள் இதோ உங்களுக்காக...

'வத்த' குழம்புக்கு நான் செய்யும் 'முள்ளங்கி கீரை உசிலி'

10 -12 முள்ளங்கி கீரையின் நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் ஒரு கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் 4 காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன்உளுந்து தாளித்து பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் தெளித்து தேவையான உப்பு சேர்த்து மூடி வைக்கவும். வெந்ததும் பருப்பு கலவையை சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறி இறக்க, அருமையான சுவையில் அசத்தும் இந்த உசிலி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"வெங்காய சாம்பாருக்கு" நான் செய்யும் பசலை கிறிஸ்பி.

ஒரு கட்டு பசலைக் கீரையை நன்கு சுத்தம் செய்து ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுகவும் . அதனுடன் கால் கப் கார்ன்ஃப்ளார் மைதா தலா கால் கப் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு தேவையான உப்பு ,எள் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து பிசறி சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுத்து மேலே ஒரு டீஸ்பூன் சர்க்கரையை தூவி பரிமாற செம டேஸ்டா இருக்கும் இந்த பசலை கிறிஸ்பி.

spinach
spinach

சோம்பலான ஞாயிறு மாலை பொழுதில் சுறுசுறுப்பாக நான் செய்யும் சூடான "கீரை ஆம்லெட்"

ஒரு கப் கடலை மாவு ,கால் கப் கேழ்வரகு மாவு சிட்டிகை மஞ்சள் தூள் தேவையான உப்பு சிட்டிகை சமையல் சோடா (தேவையெனில்)ஆகியவற்றை ஒன்றாக கலக்கிக் கொள்ளவும். எந்த கீரையாக இருந்தாலும் அரைக்கட்டு கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வெங்காயம், சிறு துண்டு இஞ்சி இரண்டு பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் கடலை மாவு கலவையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்துச் சிறிது எண்ணெய் தடவி இந்த மாவை சிறு ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி சிறு தீயில் வேகவிட்டுத் திருப்பிப்போட்டு எடுத்து தேங்காய் சட்னி/பூண்டு மிளகாய் பொடியுடன் பரிமாறி பாருங்கள் .உங்கள் கைகளுக்கு தங்க வளையல் வாங்கி தருவார் உங்களவர்.

வளையல் இல்லை என்றாலும் ஒரு முத்தம் கண்டிப்பாக கிடைக்கும்.

Spinach
Spinach

குழம்புக்கு தொட்டுக்கொள்ள, ஈவினிங் ஸ்னாக்ஸ் சொல்லியாச்சு... கூடவே இடியாப்பம் சப்பாத்தி/நாண்-க்கு சத்தான சைட் டிஷ் ஒன்று கீரையில் செய்யலாமா?

அரைக்கீரை ,தரைப்பசலைக் கீரை தலா ஒரு கட்டு சுத்தம் செய்து அதனுடன் இரண்டு தக்காளி ,இரண்டு பச்சை மிளகாய் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஆறியதும் உப்பு சேர்த்து கடைந்து வைத்துக் கொள்ளவும் .மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்த கிழங்கை கீரை கலவையில் சேர்த்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் டீஸ்பூன் சீரகம், சிட்டிகைகஸ்தூரி மேத்தி தாளித்து 4 பூண்டு பல் ( நசுக்கி) சேர்த்து வதக்கி கீரையில் கலக்க" ஆலு கீரை மசாலா" தயாராகி 'உள்ளேன் ஐயா " என்று சொல்லும். ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் போடக்கூடிய கீரைகளை இப்படி வித விதமாக சமைத்து அசத்துங்கள் ! நான் கோடு போட்டால் நீங்கள் ரோடு போட்டு பாலம் கட்டி விடுவீர்கள் சரிதானே!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.