Published:Updated:

முக்கியத்துவம் வாய்ந்த எஸ். ஆர். பொம்மை வழக்கு | மாநில சுயாட்சி - 4 | My Vikatan

S R Bommai

இந்த எஸ். ஆர் .பொம்மை வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் யாதெனில், இதன் மூலமாக ஒன்றிய அரசுகளுடன் முரண் கொண்ட அரசுகளை ஒன்றிய அரசு கலைப்பது என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கடுத்தபடியாக...

முக்கியத்துவம் வாய்ந்த எஸ். ஆர். பொம்மை வழக்கு | மாநில சுயாட்சி - 4 | My Vikatan

இந்த எஸ். ஆர் .பொம்மை வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் யாதெனில், இதன் மூலமாக ஒன்றிய அரசுகளுடன் முரண் கொண்ட அரசுகளை ஒன்றிய அரசு கலைப்பது என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கடுத்தபடியாக...

Published:Updated:
S R Bommai

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எஸ். ஆர் . பொம்மை என்பவர் ஆகஸ்ட் 1988 முதல் ஏப்ரல் 1989 வரை கர்நாடகத்தின் ஜனதா தள கட்சின் முதலமைச்சராக இருந்தவர். இவர் கர்நாடக மாநில தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் தந்தையாவார். எஸ். ஆர்.பொம்மை தலைமையிலான கர்நாடக அரசானது ,அப்போதைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் அவர்களால் அரசியலமைப்பு சட்டம் 356 ன் படி 21 ஏப்ரல் 1989 அன்று கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த ஆட்சி கலைப்பும், அதன் பின் நடந்த சட்ட போராட்டமும் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருந்தது.

Basavaraj Bommai
Basavaraj Bommai

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆட்சி கலைப்பு சட்டம் என்பது 1935 இந்திய அரசு சட்டத்தின் 93 இன் பிரிவில்(Power of Governor to issue Proclamations.) இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மாகாணங்களில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி இருந்தது. ஆனால், நாடு விடுதலை அடைந்த பிறகு, இந்தியா தனக்கான அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் போது இந்த 93 வது சட்ட பிரிவே 356 வது பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது. 1947 இல் நாடு விடுதலை அடைந்த போது இருந்த ஒரு நிலையை கருத்தில் கொண்டே இந்த 356 சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது, அதன் பின் நிலைமை சரியான பின், இந்த சட்டத்தின் பயன்பாடானது வெகுவாக குறையும் என்று அரசியலமைப்பை வகுத்தவர்கள் எண்ணி இருக்க கூடும். ஆனால், நிலைமையோ இங்கு வேறு விதமாக இருந்தது, நாடு விடுதலை அடைந்த பிறகு பல காரணங்களுக்காக அரசியல் பழிவாங்கும் நோக்கோடு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பல மாநில அரசுகள் இந்த சட்டத்தால் கலைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1988 இல் ஜனதா கட்சியும், லோக் தளம் கட்சியும் இணைந்து எஸ்.ஆர். பொம்மை தலைமையில் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது. அதன் பின், சில நாட்களுக்கு பிறகு, கே.ஆர். மொலகேரி என்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி, தனக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டி ஆளுநர் வெங்கடசுப்பையாவை சந்தித்து வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அரசானது பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறி அவரது அரசை கலைக்க வேண்டி அப்போதைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு பரிந்துரைத்தார். மேலும், கே.ஆர். மொலகேரி குறிப்பிட்ட 19 உறுப்பினர்களில் பெரும்பாலோனர் தாங்கள் கே.ஆர். மொலகேரிக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறினர். ஆனால் இதனை கருத்தில் எடுத்துக் கொள்ளாத குடியரசு தலைவர் வெங்கட்ராமன், எஸ். ஆர் . பொம்மை அரசை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை நிறுவினார்.

Karnataka high court
Karnataka high court

எஸ். ஆர் . பொம்மை அவர்கள் தன் ஆட்சி கலைக்கப்பட்டதை அடுத்து, அதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து, எஸ். ஆர். பொம்மை அவர்கள் உச்சநீதி மன்றத்தை அணுகினர். இந்த வழக்கானது, உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரித்து 11 மார்ச் 1994 அன்று தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் அவர்கள், ஒரு மாநில அரசை 356 ன் படி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சி நிறுவது என்பது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்ட செயலே, மேலும், அவர்கள் , எதாவது ஒரு மாநில அரசு 356 ன் படி தவறான காரணங்களுக்கு கலைக்கப்பட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட்டு அதனை செல்லாது என அறிவிக்கும் உரிமையும் உண்டு என குறிப்பிட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், “ஒரு மாநில அரசை ஐ 356 பயன்படுத்தி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை நியமிக்க வேண்டும் என்றால் அதற்கு முன் அது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை பெற வேண்டும், அதன் பிறகே குடியரசு தலைவர் தன் ஆட்சியை அந்த மாநிலத்தில் நிறுவ முடியும். அதுவரை அந்த மாநில அரசை இடை நீக்கம் மட்டுமே செய்ய முடியும்.” ஒருவேளை, நாடாளுமன்ற இரு அவைகளும் ஒரு மாநில ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில், அந்த மாநில அரசு மீதான இடைநிறுத்தம் என்பது இரண்டு மாதத்திற்குள் காலாவதியாகி அந்த பழைய அரசு மீண்டும் ஆட்சியமைக்கும்.

S. R. Bommai
S. R. Bommai

இந்த எஸ். ஆர் .பொம்மை வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் யாதெனில், இதன் மூலமாக ஒன்றிய அரசுகளுடன் முரண் கொண்ட அரசுகளை ஒன்றிய அரசு கலைப்பது என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

இதற்கடுத்தபடியாக, இந்த வழக்கின் தீர்ப்பு என்பது ஒரு மாநில அரசின் பெரும்பான்மையை தீர்மானம் செய்வது என்பது அந்த மாநில சட்டமன்றமே தவிர, ஒன்றிய அரசின் ஒருங்கிணைப்பாளரான மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனம் செய்யப்படும் ஆளுநர் அல்ல என்பதையும் தெளிவு படுத்துகிறது.

இதற்கடுத்தபடியாக, இந்த தீர்ப்பானது ,இந்த சட்டத்தை எந்த ஒரு மாநிலத்திலும் அரசியலமைப்பு சட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற ஒரு நிலை இருந்தால் மட்டுமே அந்த மாநிலத்தில் பயன்படுத்தவேண்டும் என்பதையும், இந்த சட்டத்தை அரசியல் சாசன சீர்குலைவுக்கு மட்டுமே பயன்படுத்தலாமே தவிர, நிர்வாக சீர்குலைவுக்கு பயன்படுத்த முடியாது என்பதையும் தெளிவு படுத்துகிறது.

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலமைப்பு சட்டம் மீது சத்திய பிரமாணம் எடுத்து அதன் படி ஆட்சி நடத்தும் ஒரு மாநில அரசை இந்த 356 என்ற ஆட்சி கலைப்பு சட்டம் என்பது எப்போதும் ஒரு அச்சுறுத்த லோடுதான் வைத்திருக்கும். எப்போது இந்த அரசானது கலைக்கப்படும்? அல்லது தொடருமா? என்ற ஒரு அச்சம் எப்போதும் ஒரு மாநில அரசுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஒருவேளை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாநில அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒன்றிய அரசின் முகவரான ஆளுநரின் பரிந்துரைப்படி கலைக்கப்பட்டால், அந்த மாநில அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு கொடுக்க முடியும். இந்த தீர்ப்பு என்பது ஆட்சி கலைப்பு என்ற கொடிய சட்டத்தில் இருந்து மாநில அரசுகளுக்கு ஓரளவு நிம்மதி பெற்றுத்தந்துள்ளது.

Representational Image
Representational Image

மொத்தத்தில், இந்த வழக்கானது இந்திய ஒன்றியத்தில் வெகு காலமாக நிலவி வந்த கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான ஒரு சட்டத்தை மாநிலங்கள் மீது தவறாக ஏவும் போக்குக்கு ஒரு வேகத்தடையை தந்துள்ளது. கூடுதலாக , இந்த வழக்கானது இந்திய ஒன்றியத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தில் மிக முக்கியமான ஒரு வழக்காக பார்க்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் 356 ஐ பயன்படுத்தி எப்போதெல்லாம் ஒரு மாநில அரசு கலைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த வழக்கின் தீர்ப்பு என்பது மேற்கோள் காட்டப்படுகிறது. மேலும்,இந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகு 356 பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைப்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism