மாநில சுயாட்சி இந்த வார்த்தையை கேட்டால் இங்கு பலர் கலக்கமடைகின்றனர், குழப்பம் அடைகின்றனர். இப்படி கலக்கமோ, குழப்பமோ அடைய இது ஒன்றும் வேண்டாத வார்த்தை அல்ல. இந்திய ஒன்றியத்திலுள்ள மொழிவாரி மாநிலங்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்கு வேண்டப்பட்ட வார்த்தை. இன்னும் சொல்ல போனால் இந்த வார்த்தையானது, இப்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்தியா முழுவதும் பல அரசியல் கட்சிகளால், அரசியல் வல்லுநர்களால் விவாதிக்கப்படக் கூடிய ஒரு விவாத பொருள் ஆகும்.
மாநில சுயாட்சி என்பது ஏதோ தனிநாடு கோரும் கோரிக்கையோ அல்லது இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்லும் கோரிக்கையோ அல்ல, மாறாக, இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய மாநிலங்கள் தங்களுக்கான முழு அதிகாரத்தையும் பெற்று அந்த அந்த மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்து ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியா போன்ற பல மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் ஒன்றியத்தில், தங்களுக்கான மொழிவழி எல்லைகளை மாநிலங்களாக வகுத்துக்கொண்டு தங்களுக்கென சட்டமியற்றும் சட்டமன்றம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கான பாராளுமன்றம் என்று இரண்டு அவைகளிலும் தங்களுக்கென பிரதிநிதிகளை அனுப்பி தங்களுக்கான பிரச்னை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இதில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி ஒன்றில் , ஒன்றியமும் அதன் ஆட்சி பரப்பும் என்ற தலைப்பில் "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம்" ( India, that is Bharat, shall be a Union of States) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா என்ற ஒன்றியம். அதனால் இந்த ஒன்றியத்தின் உயிர்நாடியான மாநிலங்கள் என்பது அதிக உரிமைகள் பெற்று திகழ வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய ஒன்றியமும் வளம் பெரும் என்பதே மாநில சுயாட்சியின் அடிநாளம் ஆகும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதை படிக்கும் போது நமக்கு ஒரு கேள்வி எழலாம். ஏன் மாநில அரசு அதிக அதிகாரம் பெற வேண்டும்? உண்மையை சொல்லவேண்டுமானால் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அரசு நடக்கக்கூடிய எந்த ஒரு ஒன்றியம் அல்லது நாட்டில் மாநில அரசிடமே அதிக அதிகாரம் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற துணை கண்டத்தில், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனி மொழி, தனி கலாச்சாரம், தனி பண்பாடு, தனி உடை மற்றும் உணவு பழக்கவழக்கம் என்று எல்லாம் மாறுபடுகிறது.

இப்படி, எல்லாம் மாறினாலும் "வேற்றுமையில் ஒற்றுமை" காணுகின்ற ஒரு ஒன்றியத்தில் அந்த அந்த மொழிவழி தேசிய இனங்களின் மொழி,கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் முன்னேற்றங்களை செய்ய வேண்டுமானால் அது மாநில அரசால் தான் முடியும். அதுபோக மக்கள் நல்வாழ்வு என்று வரும் போது குறிப்பாக கல்வி, சுகாதாரம் போன்றவைகளை ஒன்றிய அரசை விட மாநில அரசே திறம்பட செய்ய முடியும், ஏனெனில் மாநில அரசே மக்களின் அருகாமையில் பெரும்பாலான துறைகளில் இருப்பது.
மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி என்பது மிக குறைவு. இதைத்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி என்ற புத்தகத்தின் அணிந்துரையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்..
" ஒரு கடிகாரத்தின் முட்களில் மணி முள் முதன்மை உடையது எனினும், நிமிட முள் பேரளவு இயங்கினால்தான் மணிமுள் சிறிதளவு இயங்குவது முறை. அதனை ஒப்ப மக்களோடு நெருக்கம் உடையதாக இயங்கும் மாநில அரசு பேரளவு இடம் தந்து மத்திய அரசு அதற்கு இணக்கமாக அளவுடன் இயங்கும் நிலையே மக்களாட்சியின் சிறந்த நெறியாகும்.பேராசிரியர் அன்பழகன்
இதில் நிமிட முள் என்பது மாநில அரசையும், மணிமுள் என்பது ஒன்றிய அரசையும் குறிக்கும். கடிகார நிமிட முள் மற்றும் மணிமுள் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், நிமிட முள் அறுபது முறை நகர்ந்தால் தான் மணிமுள் ஒரு முறை நகர முடியும். அது போல தான் மாநில அரசு என்பது வேகமாவும், எந்த தடங்கலும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டால் தான் ஒன்றிய அரசும் சீராக செயல்பட முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``ஒருவேளை நிமிட முள் இயக்கம் என்பது தடை படுமானால், மணி முள் இயக்கமும் தடைபடும். அது போல தான் மாநில அரசின் இயக்கம் என்பது தடை படுமானால், ஒன்றிய அரசின் இயக்கமும் தடை படும்.”
கூட்டாட்சி தத்துவத்தில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தது ஒன்றில்லாமல் ஒன்று இயங்க முடியாது. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் என்றில்லாமல், இருவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில், அதாவது மாநில பட்டியலில் மாநில அரசும், ஒன்றிய பட்டியலில் ஒன்றிய அரசும் , பொது பட்டியலில் இருவரும் சட்டங்களை இயற்றி சீராக செயல்பட்டால்தான் ஒட்டுமொத்த நாடு என்பதும் சீராக வளர்ச்சி அடையும்.

*இந்த கடிகார முள் தத்துவத்தில் இன்னொரு முள்ளையும் குறிப்பிட வேண்டும் அது நொடி முள். ஆம், நொடிமுள் என்பது நமது அரசியலின் மூன்றாவது அடுக்கான உள்ளாட்சி அமைப்புகளை மேற்கோள் காட்ட குறிப்பிடலாம். அதாவது மணி முள், நிமிட முள் இரண்டும் இன்னும் சீராக இயங்க வேண்டுமானால் நொடி முள் சீராக இயங்க வேண்டும். ஆம் ஒரு நாட்டின் நகரங்களையும், கிராமங்களையும் உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானது.
ஒரு கிராமமும், நகரமும் வளர்ந்தால்தான் ஒரு மாநிலம் வளரும், ஒரு மாநிலம் வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். அதனால், கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சி என்பது இல்லை என்றால், முதுகெலும்பு பழுதடைந்த உடம்பு எப்படி குன்றி விடுமோ, அதுபோலவே கிராமங்கள் வளர்ச்சி இல்லாத மாநிலங்கள் மற்றும் நாடு என்பதும் வளர்ச்சி இல்லாமல் குன்றிவிடும்.
ஏன் மாநில அரசின் இயக்கம் என்பது சீராகவும், வேகமாகவும் இருக்க வேண்டுமென்றால், மேற்சொன்னது போல் மாநில அரசே மக்களோடு நெருக்கமாக இருக்கிறது, உதாரணமாக மக்கள் நல்வாழ்வு என்று எடுத்துக் கொண்டால் ஒன்றிய அரசை விட மாநில அரசுக்கே பொறுப்பும், கடமையும் அதிகம். அதாவது பொது சுகாதாரம், கல்வி, நியாய விலை கடை மூலம் உணவுப் பொருள் விநியோகம், குடிதண்ணீர் விநியோகம், பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி என்ற எல்லாமுமே மாநில அரசே மக்களுக்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி மக்களின் அடிப்படை அன்றாட நல்வாழ்வுக்கான தேவைகள் சிறப்பாக பூர்த்தி அடைந்தால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய முடியும், இப்படி ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்தால் தான் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி அடையும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒட்டுமொத்த இந்த நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலங்களின் வளர்ச்சியிலேயே அடங்கி உள்ளது.

மாநில சுயாட்சி என்றால் இது ஏதோ தனியான ஒரு ஆட்சி என்று நினைத்து விட வேண்டாம். இதைத்தான் "மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி" என்று தெளிவாக கூறுகிறார்கள் " இதில் மாநிலம் என்று குறிப்பிடுவதால் அதற்கு இணையாக மத்தியிலே ஓர் அரசு உள்ளது என்பதையும், கூட்டாட்சி என்பதால் அதில் சுயாட்சி என்பதும் இருக்கும் என்று நமக்கு தெளிவாகிறது. மேலும், மாநில சுயாட்சி என்பது இந்திய ஒருமைபாட்டிற்கோ அல்லது ஒற்றுமைக்கோ தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல. மாறாக இங்கு கூட்டாட்சி(Federal system) மற்றும் ஒன்றியம்(Union of states) என்பதிலிருந்து ஒற்றுமை என்பது வெளிப்படும். அதாவது, சுயாட்சி கொண்ட அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைந்த ஒன்றிய அரசு, இதைத்தான் கூட்டாட்சி முறை (Federal system) என்கிறோம்.
Also Read
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அந்த கட்சியின் முதலாவது முதலமைச்சரும், தமிழ் பேசும் இந்த நிலப்பரப்புக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்த வருமான பேரறிஞர் அண்ணா அவர்கள், 1969 ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்கான கட்டுரையில்.
" மாநிலங்கள் அதிக அதிகாரம் பெரும் வகையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கு நல்லாதரவு என்பது நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலே எனக்கு தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன. அரசியல் கட்சிகளை சாராத அறிவாளர்கள் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். நாம் அரசு நடத்தியதால் கிடைக்கின்ற நற்பயன்களிலே இதனை ஒன்று என்றே கருதுகிறேன்." என்று மாநில சுயாட்சி பற்றி கூறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக, 1967 மற்றும் 1971 பொது தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சிக்கான சட்டத்திருத்தம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வர வேண்டுமென்று தெளிவுபடுத்தி இருந்தது .
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.