Published:Updated:

நீங்கள் பொறுப்புள்ள மனிதரா? | My Vikatan

Representational Image

கணவனின் கடமை , மனைவியின் கடமை, ஊழியனின் கடமை, பக்தனின் கடமை .. என ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழ்நிலையிலும் மனிதனின் கடமை மாறுபடுகிறது.

நீங்கள் பொறுப்புள்ள மனிதரா? | My Vikatan

கணவனின் கடமை , மனைவியின் கடமை, ஊழியனின் கடமை, பக்தனின் கடமை .. என ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழ்நிலையிலும் மனிதனின் கடமை மாறுபடுகிறது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடமையை செய்தால் அவன் பொறுப்புள்ள மனிதன். கடமைக்கு செய்தால் அவன் பொறுப்பற்றவன்.

எது கடமை?

பெற்றோரின் கடமை குழந்தைகளை நன்றாக வளர்ப்பது,

பிள்ளைகளின் கடமை வயோதிக காலத்தில் பெற்றோரை காப்பது.

ஓர் ஆசிரியரின் கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது.

ஓர் மாணவனின் கடமை நல்ல பாடம் கற்பது.

கணவனின் கடமை , மனைவியின் கடமை, ஊழியனின் கடமை, பக்தனின் கடமை .. என ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழ்நிலையிலும் மனிதனின் கடமை மாறுபடுகிறது.

அட அவனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.. பொறுப்பா நடந்துக்கோ .. என்ற கூற்றுகளை நாம் கடந்து வந்து இருப்போம்.

Representational Image
Representational Image

சரி, எப்படி பொறுப்பாக நடந்து கொள்வது?

உங்கள் டைரி'யை எடுத்துக்கொள்ளுங்கள், அதில்,

1. நாளை நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று இன்றிரவே பட்டியலிடுங்கள்.

2. அதில் மிக முக்கியமானவை, முக்கியமானவை .. என்று வரிசை படுத்துங்கள்.

3. அதை எந்த நேரத்தில் எப்படி செய்ய போகிறீர்கள் என்று குறித்துக்கொள்ளுங்கள்.

4. இப்பொது உங்களிடம் ஓர் தெளிவான திட்டம் இருக்கும்.

5. நிம்மதியாக உறங்குங்கள்.

6. காலையில் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்துகொள்ளுங்கள்.

7. உங்கள் திட்டத்ததை மீண்டும் ஒருமுறை சரிபாருங்கள்.

8. திட்டமிட்டபடி உங்கள் நாள் தொடங்கட்டும்.

ஒரு மனிதன் தன் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டாலே அவன் பொறுப்புள்ள மனிதனாக மாறிவிடுவான்.

நீங்கள் ஓர் குடும்பத்தின் நம்பிக்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. உங்களை நம்பி இருப்பவர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடாதீர்கள்.

நேரத்தை உங்கள் வசமாக்குங்கள், உங்கள் கடமையை சிறப்பாக செய்யுங்கள். உங்களுக்கு உள்ளே இருக்கும் ஓர் சிறந்த பொறுப்புள்ள மனிதனை இந்த உலகம் காணட்டும்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.