Published:Updated:

கோடை டிரிப் போறீங்களா?- இதையெல்லாம் செய்துட்டு போங்க!

Representational Image

ஊருக்கு போவதை ரகசியமா செய்யாதீங்க, அதுக்காக ஊருக்கெல்லாம் தம்பட்டமும் அடிக்காதீங்க, பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுல இருக்கறவங்க, கிட்ட ஏற்கனவே சண்டையா இருந்தால் கூட..

கோடை டிரிப் போறீங்களா?- இதையெல்லாம் செய்துட்டு போங்க!

ஊருக்கு போவதை ரகசியமா செய்யாதீங்க, அதுக்காக ஊருக்கெல்லாம் தம்பட்டமும் அடிக்காதீங்க, பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுல இருக்கறவங்க, கிட்ட ஏற்கனவே சண்டையா இருந்தால் கூட..

Published:Updated:
Representational Image

கோடைவெயிலை சமாளிக்க குளுகுளு ஏற்காடு, குற்றாலம், உதகை இப்படியான ஊருக்கு கிளம்பறது அவசியம்தான். ஆனா அதற்கு முன்னால், இதையும் செய்துட்டு போனீங்கன்னா நல்லது நண்பர்களே..

வீட்டு முன்கதவு, பின்கதவு ரெண்டையும் பெரிய திண்டுக்கல் பூட்டா போட்டுடங்க. இல்லாட்டி, இப்பத்தான் ட்ஜிட்டல் லாக், ஆட்டோமேடிக் லாக் வந்திடுச்சே. அதில் ஏதாவது ஒன்றை போட்டுட வேண்டியதுதான்.

இந்த கோடைக்காலத்தில, வீட்டில் உறுப்பினர்கள் இருந்தாகூட, வீட்டு முன்கதவு, பின்கதவு, மூடியே இருக்கட்டுமே, ஏன்னா, பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான் திருட்டு பயம் அதிகமா இருக்கும் ஏனென்றால் வெயிலின் தாக்கத்தால் தூக்கத்தால் கண்கள் நம்மை அறியாமலேயே செருகி கொள்ளும். அது போதாதா?

திருடுபவர்களுக்கு வசதியாய் போய் விடும்!

Representational Image
Representational Image

ஊருக்கு போவதை ரகசியமா செய்யாதீங்க, அதுக்காக ஊருக்கெல்லாம் தம்பட்டமும் அடிக்காதீங்க, பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டுல இருக்கறவங்க, கிட்ட ஏற்கனவே சண்டையா இருந்தா கூட.. ஊருக்கு போவதற்கு முன்னால் அவங்க கிட்ட தோழமையோடு பேசி பழகி ஊருக்கு போகும்போது ”கொஞ்சம் நம்ம வீட்டையும் பார்த்துக்கோங்க”ன்னு அன்பா கேட்டுக்கோங்க. கோரிக்கை மனு கொடுத்திடுங்க

கதவிற்கு அருகிலோ, சன்னலுக்கு அருகிலோ, வீட்டுசாவி, பீரோ சாவி இவைகளை வைப்பது புத்திசாலித்தனமல்ல ” வைச்சீங்கன்னா, இருக்காது அம்புட்டுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அநாவசியமாக முகம்தெரியாத சந்தேகப்படும் நபர்கள் வாசலுக்கு அருகே நின்றால், ”வாங்க தம்பி என்ன வேணும்” என்று தைரியமாக விசாரியுங்கள். ஊர்ல யாராச்சிலும் வந்திட்டு போறாங்க நமக்கென்ன என்று அலட்சியமாக இருக்காதீர்கள் ``தம்பி யாருப்பா நீ விசாரித்தாலே” போதும் அவர்கள் நழுவிவிடுவார்கள்

ஏணி, தோட்ட வேலைக்கு பயன்படும் பொருட்களை வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு போகாதீர்கள். அவைகள் உங்கள் வீடுகளில் நுழைவதற்கு நீங்களே விசா வழங்கி இருப்பதாக திருடுபவர்கள் எண்ணிக் கொள்வார்கள்

”ஒங்க வீடு அபார்ட்மெண்டா? ” அபார்ட்மெண்ட் காவலாளியிடம் தகவல் தெரிவித்து உங்கள் வீட்டை தனிகவனமாக பாதுகாக்க சொல்லுங்கள். கூடுதல் செலவைப் பார்க்காமல், தனியாக ”அண்ணே! பிள்ளைகளுக்கு ஏதாச்சிலும் வாங்கி கொடுங்க என்று பணம் கொடுத்து விடுங்கள். அவை நீங்கள் ஊர் திரும்பும் வரை வேலை செய்யும்.

Representational Image
Representational Image

தூரத்தில் இருந்து பார்த்தால் உங்கள் வீடுகாலியாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி விடாதீர்கள். ஒங்க வீட்டுல இருந்துட்டு, அடுத்தவங்க வீட்டை நோட்டம் பயன்படுத்திக் கொள்வார்கள் பலே கில்லாடி ஆசாமிகள்.

நீண்டநாள் பயனமாக இருந்தால், ”பால் பாக்கெட், செய்திதாள், இவைகளை நிறுத்தி விடலாம்தானே. ஆமாம் நல்ல ஐடியாதான் என்று சிக்கனபேர்வழிகள் அதைச் செய்தால் தவறு.

நீங்கள் ஊர் திரும்பும் வரை பால் பாக்கெட்டையும், செய்திதாளையும் நண்பர் வீட்டில் டெலிவரி கொடுக்க சொல்லுங்கள்.

இதெல்லாம் செய்துட்டு போனீங்கன்னா, குளுகுளு கொடைக்கானல்ல ஊட்டில சுகமா இருக்கலாம். வீடும், வீட்டில் உள்ள பொருட்களும் பாதுகாப்பா இருக்கும்

-கே. அசோகன், மும்பை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism