Published:Updated:

தொடாமலேயே உள்ளத்தை தொட்ட டி.ஆர்! | My Vikatan

டி.ஆர்

எண்பதுகளில் காதல் சோகப்பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பாடல் இதுதான். அனுபவம் மிக்க வார்த்தைகள், தாள வாத்தியம் இசை ,டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல், உயிரோட்டமான வரிகள்...

தொடாமலேயே உள்ளத்தை தொட்ட டி.ஆர்! | My Vikatan

எண்பதுகளில் காதல் சோகப்பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பாடல் இதுதான். அனுபவம் மிக்க வார்த்தைகள், தாள வாத்தியம் இசை ,டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல், உயிரோட்டமான வரிகள்...

Published:Updated:
டி.ஆர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

80-களில் கமல் ரஜினி என்று இருபெரும் நடிகர்களின் ஆளுமைக்கு இடையில் டி ஆரின் படங்கள் வெற்றிகரமாக ஓடியது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் வித்தியாசமான கதை ,திரைக்கதை, வசனம்,பாடல்கள் ... எல்லாவற்றுக்கும் மேலாக ஹீரோயினை (கதாநாயகியை) தொடாமலேயே காதல் செய்யும் அவரின் பாணி... என்றே சொல்லலாம். கதாநாயகிகளைத் தொடாமல் நடித்து நம் இதயங்களை தொட்டவர் டி.ஆர்.

எண்பதுகளில் காதல் சோகப்பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பாடல் இதுதான். அனுபவம் மிக்க வார்த்தைகள், தாள வாத்தியம் இசை ,டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல், உயிரோட்டமான வரிகள்... இந்தப் பாடல் 1981ம் வருடம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது என்றால் மிகையில்லை.டி எம் எஸ் அவர்களின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் என்று இந்த பாடலைச் சொல்லலாம்.

டி.ஆர்.
டி.ஆர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பாடலுக்கு முன்னால் வரை அவர் பாடினாரென்றால் அது எம்ஜிஆர் ஆகவோ அல்லது சிவாஜியாகவோ தான் தோன்றும். ஆனால் இந்த பாடலில் டிஎம்எஸ் அவர்கள் தான் நம் கண் முன் வருவார். அந்த அளவுக்கு உருகி உருகிப் பாடி இருப்பார் டிஎம்எஸ்... அட போதும்பா பில்டப்பு... பாட்டச் சொல்லுங்க! என்று கேட்கிறீர்களா? அல்லது கண்டுபிடிச்சிட்டீங்களா?! கண்டுபிடிச்சவர்களுக்கு ஒரு மிகப் பெரிய ராயல் சல்யூட். டிஆர் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கத்தில் 1981ம் வருடம் வெளிவந்த' ரயில் பயணங்கள்'படத்தில் இடம் பெற்ற... "வசந்த ஊஞ்சலிலே ...அசைந்த பூங்கொடியே ...உதிர்ந்த மாயம் என்ன... உன் இதய சோகம் என்ன.. உன் இதய சோகம் என்ன ..நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா.'.. என்ற ஆதி அற்புதமான பாடல்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹீரோயினைத் தொடாமலேயே காதல் செய்யும் ஹீரோ கேரக்டர்கள்தான் டிஆரின் பிரத்யேக பாணி. பிரபல பாடகரான ஹீரோவின் மீது எழுத்தாளராக இருக்கும் நாயகிக்கு தீராக்காதல். ஹீரோவின் பாடல் நிகழ்ச்சியில் தவறாமல் ஆஜராகி விடுவார். பரஸ்பரம் பேசிய பிறகு காதல் இருந்தும் அதை இருவரும் சொல்லிக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஹீரோ விற்குஅவர்கள் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் .ஹீரோயினுக்கும் ராஜீவை (படத்தின் வில்லன்) மணக்க வேண்டிய சூழல். திருமணத்திற்கு பிறகு, மானசீக காதல் தெரியவர சொற்களால் அர்ச்சனை செய்கிறார் ராஜீவ்.. விவாகரத்தும் கேட்கிறார். ஹீரோ ஹீரோயினை மறக்க முடியாமல் தேவதாஸ் ஆகிறார். இருவருக்கும் பொதுவான ஒரு எழுத்தாளர் பெண்மணி அவள் படும் அவஸ்தையை ஹீரோவிடம் சொல்ல, ராஜீவை சந்தித்துப் பேசுகிறார் ஹீரோ. எதிர்பாராத ட்விஸ்ட் உடன் படத்தை முடித்திருப்பார் டி.ஆர்.

படத்தின் அடுக்குமொழி வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறந்தது.

டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!
டி.ஆர் இல்ல... முடியும்ங்கறவன்தான் டி.ஆர்!

உதாரணத்துக்கு.."கைவிலங்கு மாட்டிடீட்டாங்கன்னு கவலைப்படுறியா?... ஒரு விலங்கு கிட்ட இப்படி மாட்டிகிட்டோம்ன்னு கவலைப்படுறீயா..?"

"மாப்பிள்ளை உன்னை சந்தோஷமா வச்சு இருக்கிறாராம்மா?அடிக்கடி போன் பண்ணும்மா..

அடிக்குஅடிதான் போன் பண்றேன்"ம்மா

"உனக்கு நல்ல வழிதான் சொல்ல வந்திருக்கேன்..

எந்த வழியும் சொல்ல வேணாம் வந்த வழியே போனா போதும்.."... இப்படி வசனங்கள்... 40 வருடங்கள்கடந்தும் மனதில் பதிந்து இருக்கிறது என்றால் வார்த்தைகளின்(வசனத்தின்) வீரியத்தை பாருங்கள். வசனம் மட்டுமல்ல பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் தோய்த்த பலாச்சுளை..

"வசந்தம் பாடி வர"..

"அட யாரோ பின்பாட்டு பாட..." "அமைதிக்கு பெயர் தான் சாந்தி"...

'இதயம் 'முரளி வகையறா படங்களுக்கு முன்னோடியாக இந்த படத்தைச் சொல்வர்."படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு... பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு'... அவளை நினைக்க வேண்டாம் என நினைத்து அவளையே நினைத்துக் கொண்டிருப்பது தான் காதல் எனும் அரிய தத்துவத்தை அளித்த பாடல் இது.

"பூத்தால் மலரும் உதிரும்

நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை.."

"நிலவோதேய்ந்து வளரும் ..

அவள் நினைவோ தேய்வதில்லை"

"பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே...

என்ன ஆழமான வரிகள். உண்மை காதலை சுமப்பவர்களுக்கு இப்பாடல் ஒரு பொக்கிஷம். உண்மையான அன்பு கொண்ட இதயங்களில் ஏற்பட்ட காயங்களின்(ரணங்களின்) வெளிப்பாடு என்றே இந்த பாடலை சொல்லலாம் . பாடலும் வரிகளும் ஒளிப்பதிவும் உணர்வினை உயிர்ப்பிக்கும் உயிரோட்டம் கொண்டது இந்த ப்பாடல்.

காதலில் சோகத்துக்கு மேற்கண்ட பாடல் ஒரு உதாரணம் என்றால்...

காதல் எப்படி உருவாகும் என்பதற்கு... 1987ஆம் ஆண்டு டி ஆரின் இயக்கத்தில் வெளிவந்த ஒருதாயின் சபதம் படத்தில் இடம்பெற்ற "சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது

கண்ணால தானே இந்த காதல் வளருது

இந்த காதல் வளருது

உள்ளமோ நினைக்குது

உதடு தான் மறைக்குது.."

என்ற பாடலைச் சொல்லலாம் . காதலை கண்கள் வழியாக இதயத்துக்கு கொண்டு சென்றவர் டி ஆர் . டிரம்ஸ், மிருதங்கம், வீணை என கலந்து கட்டி ஒலிக்கும்.இந்தப் பாடலின் வெற்றிக்கு டிஆர் போட்டசெட்காரணமா, பாடலின் வரிகளா, இசையா ,பாடும் நிலா பாலு வின்குரலா.. நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

டி.ஆர்!
டி.ஆர்!

"மூடி வெச்ச மொட்டு பூவுக்குள்ள

வண்டு வந்தா வழி கிடைக்குமா

வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டால்

மொட்டின் இதழ் விட்டு கொடுக்குமே "அட ..

எவ்வளவு அழகான கவித்துமான வார்த்தைகளை எளிமையாக புரியும் வண்ணம் இசையமைத்திருக்கிறார்.

"தினம் தினம் உன்ன பாக்கையிலே

மனம் விட்டு பேச துடிக்கிறேன்...

ஊரு கதை தானே நடக்குது

உள்ளக் கதை உள்ளே மூழ்குது"

இப்படி பாடலின் வரிகள் காதலின் தவிப்பை அழகாய் கண்முன்னே காட்டியது.

... இப்படி டூயட்டில் கூட காதலியை தொடாமல் காதலைப் பற்றி சொல்லிக் கொடுத்த டி ஆர் அவர்களை என்ன சொல்லிப் பாராட்டுவது?! என்ன வார்த்தை சொல்லிப் பாராட்டுவது?!

சார்.. நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் சார்! நல்லா இருப்பீங்க சார்!

சிகிச்சை முடிந்து சீக்கிரமா வாங்க சார்..

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.