இதென்ன, எஸ்.வி என்று யோசிக்கிறீங்களா... இனிஷியலோட சொன்னாத்தான் சில ஜாம்பவான்கள் அறியப்படுவார்கள். அவர்களால் அந்த இனிஷியலுக்கும் ஒரு பெருமை. மகாதேவன், விஸ்வநாதன் என்று சொன்னால் யாரையோ சொல்வது போலத் தெரியும். அதுவே K.V. மகாதேவன், M.S.விஸ்வநாதன் என்று சொன்னால் திரையுலகை பல காலம் ஆண்ட அந்த மன்னர்களைத் தவிர வேறு யாரையும் அடையாளம் காட்டாது. அவர்களைப்பற்றி தனித்தனி கட்டுரைகளில் விரிவாக பார்க்கலாம். S.V. என்று இனிஷியல் மூலம் அறியப்பட்ட... புகழ்பெற்ற சில நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.

S.V. சுப்பையா :
ஆதி பராசக்தி படத்தில் அபிராமி பட்டராக நடித்து, T.M.S. அவர்களின் கம்பீர குரலில் ஒலிக்கும்
"மணியே மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கு அழகே, அணுகாதவற்கு பிணியே பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே பணியேன் ஒருவரை , நின் பத்மபாதம் பணிந்த பின்னே"
பாடலுக்கு வாயசைத்து தை அமாவாசை அன்று முழு நிலவை கொண்டு வந்த நிகழ்வை நம் கண் முன் திரையில் காட்டி நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியவர் இவர்தான். கப்பலோட்டிய தமிழனில் பாரதியாகவும் பாகப்பிரிவினை படத்தில் சிவாஜிக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். தனது குணச்சித்திர நடிப்பால் இவர் முத்திரை பதித்த படங்கள் பாலசந்தரின் 'அரங்கேற்றம், மற்றும் சொல்லத்தான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்களின் 'பணத்தோட்டம்' படத்தில் வில்லனாக நடித்திருப்பார். அது கிளைமாக்ஸில்தான் தெரியும். இயல்பான நடிப்பு, வசன உச்சரிப்பு இவைகளில் ஒரு தனித்தன்மை தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎஸ்.வி.ரங்காராவ் :
"கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்..." 'மாயா பஜார்' படத்தில் 'கடோத்கஜனாக நடித்து மிரட்டியிருப்பார் இவர். பல புராணப்படங்களில் நடித்து இருக்கிறார். அப்பா, மாமனார், மிகப்பெரிய முதலாளி இந்த வேடங்கள் என்றால் இவருக்குதான் அந்தக்காலத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள். கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக 'நீதிக்குப் பின் பாசம்' படத்தில் நடித்திருப்பார்.

பல 'சேர்மேன்' களை உருவாக்கும் அரசியல்வாதியாக/ வில்லனாக நம் நாடு படத்தில் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடித்திருப்பார். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சேர்மன் பதவிகளுக்கு போட்டிப்போட அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்த நேரத்தில் இவருடன் அசோகன் தங்கவேல் ஆகியோர் சேர்மன் பதவி பற்றி பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. அந்த காட்சியை உன்னிப்பாக பார்த்தால் இந்த காலத்து அரசியல் போலிகளை தூக்கி சாப்பிடுவது போல இருக்கும் அவரது நடிப்பு.
அந்த லிங்க் கிடைத்தால் பாருங்கள் புரியும். படிக்காத மேதை படத்தில் 'எங்கிருந்தோ வந்தான்' பாடலில் ரங்கன் மீது தான் வைத்திருந்த பாசத்தை அற்புதமாக உணர்ச்சி பொங்க காட்டி நடித்திருப்பார். அதே சமயம் பொண்ணுக்கு அடங்கிப்போகும் சாதாரண பணக்கார அப்பாவாக எங்க வீட்டுப் பிள்ளையில் நடித்திருப்பார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எஸ்.வி.சகஸ்ரநாமம் :
சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த நாடக நடிகர். சேவா ஸ்டேஜ் என்ற நாடக குழுவை உருவாக்கி பல நாடகங்களை மேடையேற்றி இருக்கிறார். இவருடைய குழுவில் நடிகர் முத்துராமன், நடிகைகள் தேவிகா, கமல் படத்தில் தொடர்ந்து நடித்த எஸ்.என். லட்சுமி போன்றவர்கள் இருந்தனர். பி.எஸ். ராமையா அவர்களின் கதை வசனத்தில் மேடை நாடகமாக வெற்றி கண்டதுதான் 'போலீஸ்காரன் மகள்' பின்னர் ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமானது.
சேவா ஸ்டேஜ் குழுவிற்கு பெருமை சேர்த்த நாடகங்களில் ஒன்றானது இந்த நாடகம். புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை, உரிமைக்குரல் படங்களிலும் பாலசந்தர் இயக்கிய வெள்ளி விழா, இரு கோடுகள் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சோப்பு சீப்பு கண்ணாடி, நவாப் நாற்காலி போன்ற படங்களில் காமெடியிலும் கலக்கி இருப்பார். இவரின் நாடகப்பணிக்காக இந்திய அரசு சங்கீத நாடக அகடமி விருது கொடுத்து கௌரவித்தது.

எஸ்.வி.சேகர் :
"எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை... கிட்டுமணி போல ஒரு மக்கு மணி யாருமில்லை" என்று புலம்பி பாடும் ஒரு மனிதனாக விசு இயக்கிய முதல் படமான 'மணல் கயிறு' படத்தில் நடித்து நம்மை சிரிக்க வைத்தவர் எஸ்.வி. சேகர். 1970-80 களில் ரேடியோவில் ஒரு மணி நேர ஒலிச்சித்திரமாக பல திரைப்படங்களை கேட்டு ரசித்திருப்போம். படம் முடிந்ததும் ரேடியோ ஆக்கம் எஸ்.வி.சேகர் என்று சொல்வார்கள். அப்படி அறியப்பட்டவர்தான் பின்னாளில் காமெடி நாடகம் போடுவதில் தனக்கென்று ஒரு இடம்பிடித்தார்.
முதன் முதலாக 1977 ல் 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற நாடகத்தை மேடை ஏற்றினார். அதில் அறிமுகமான மோகன் பிறகு 'கிரேஸி மோகன்' ஆக மாறினார். மேடை நாடகமாக போடப்பட்டு கொண்டு இருந்த போதே குமுதம் இதழில் தொடர் நாடகமாக வந்து மேலும் லட்சக்கணக்கான மக்களிடம் சென்றடைந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த நாடகக்தில் வரும் 'முத்து, மருது, ராமபத்ரன், ஆகிய திருடர்களோடு 'உப்பிலி' சேகர் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பு வெள்ளத்தில் நம்மை மிதக்க வைக்கும்.
அடுத்ததாக 'ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது' நாடகம் போட்டார். வீட்டுக்கு வாடகைக்கு வருபவர்களை படுத்தி எடுக்கும் வீட்டு ஓனர் பற்றிய கதை. முந்தைய நாடகம் போல இதுவும் வெற்றிதான். இவரின் நாடகப்பிரியா குழுவில் சுந்தா, ஜி கே., மேனேஜர் சீனா, சிவசங்கரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த குழு வழங்கிய எந்நாளும் மறக்க முடியாத ஒரு வசனம்... கதாநாயகி : "கடைசியில இவர்தான் உங்கப்பாவா...?" என்று கேட்க அதற்கு சேகர் "இல்ல...ஆரம்பத்துலேந்து அவர்தான் எங்கப்பா'" என்பார்.
இனிஷியல் பெற்றோர் நமக்கு பெயரளவில் கொடுத்த சொத்து அதை நம் செயல்பாடுகளால் பன்மடங்கு பெருக்கவேண்டும். அதை நோக்கி பயணிப்போம்.
ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு ஊரிலும் மேடையில் இந்த காட்சி வரும் போது அரங்கமே அதிரும். இவரின் பிரபலமான நாடகங்கள் 'மகாபாரதத்தில் மங்காத்தா, காட்ல மழை , காதுல பூ , எல்லாமே தமாஷ்தான்,பெரியதம்பி. தூர்தர்ஷனில் 'வண்ணக்கோலங்கள்' என்ற தொடர் நாடகம் தந்தார். பாலசந்தர் மூலம் திரை உலகிற்கு 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் அறிமுகமானர். விசுவின் முதல் மற்றும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இயக்குனர் ராம.நாராயணனின் ஆஸ்தான கதாநாயகன் ஆனார். வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் நண்பனாக சில படங்களில் நடித்தார். தற்போது 'வாழ்நாள் சாதனையாளர்'பட்டமும் வாங்கிவிட்டார்.
பெயருக்கு முன்னால் போடப்படும் இனிஷியல் நமது அப்பா பெயரை மட்டுமோ... அப்பா தாத்தா பெயரோடு இணைந்தோ... அம்மா பெயரை மட்டுமோ, ஊரோடும் அப்பா பெயரோடும் சேர்ந்தோ இருக்கலாம். அந்த இனிஷியல் சேர்த்து நம் பெயர் உச்சரிக்கும் போது ஒரு மரியாதை கிடைக்கும் அளவுக்கு நாம் உழைத்து முன்னுக்கு வரவேண்டும். S.V. வெறும் ஆங்கில எழுத்துக்கள் அல்ல. அதற்குள் ஒரு காந்த சக்தி, ஒரு தெய்வீக சக்தி, மகிழ்ச்சியைக் கொடுக்கும் சக்தி என்று முப்பெரும் சக்திகள் கலந்து அழியாப் புகழை அவர்களுக்கு தந்துள்ளது.
இனிஷியல் பெற்றோர் நமக்கு பெயரளவில் கொடுத்த சொத்து அதை நம் செயல்பாடுகளால் பன்மடங்கு பெருக்கவேண்டும். அதை நோக்கி பயணிப்போம். நம்ம 'காட்ல மழை'... அடைமழை நிச்சயம் பெய்யும். "ஆண்டவா எல்லாரையும் நல்லபடியா வைப்பா' - எஸ்.வி.சேகரின் நாடகத்தில் முதல் காட்சியில் வரும் வசனம் சொல்லி நிறைவு செய்கிறேன்.
===
-திருமாளம் எஸ். பழனிவேல்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.