Published:Updated:

ஞா!

திருமுலைப்பால் உற்சவம்

`சின்ரல்லா’ என்ற கிறிஸ்தவ நாடோடிக் கதையை மூலமாக வைத்து உருவானதே `ஞான சவுந்தரி’ கதை. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்டு வெற்றி கண்ட நாடகம். ரோம அரசர் தர்மரின் மகள் ஞான சவுந்தரி...

ஞா!

`சின்ரல்லா’ என்ற கிறிஸ்தவ நாடோடிக் கதையை மூலமாக வைத்து உருவானதே `ஞான சவுந்தரி’ கதை. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்டு வெற்றி கண்ட நாடகம். ரோம அரசர் தர்மரின் மகள் ஞான சவுந்தரி...

Published:Updated:
திருமுலைப்பால் உற்சவம்

'ஞா'  வின் தொடக்கம் வார இறுதி நாளான  'ஞாயிறு' என்று முடிந்தால் அனைவரும் சந்தோஷப்படுவார்கள். அன்று அனைவருக்கும் விடுமுறை நாளாகும். தற்காலிக பணியாளர்களுக்குகூட  சில பெரிய  மற்றும் சிறு குறு நிறுவனங்கள்  சம்பளத்துடன் கூடிய விடுமுறை தரும். கிறிஸ்தவர்கள்  தேவாலயங்களுக்கு சென்று ஆண்டவரிடம் தங்கள் கோரிக்கைகளை  முன் வைப்பார்கள். சிலர் குடும்பத்தோடு பீச், பார்க், சினிமா என்று செல்வார்கள்.ஆதலால் ஒட்டுமொத்தமாக அனைவரும்...

 ``ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்’’’

என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் இயற்கையை/சூரியனைப் போற்றிப் பாடி தனது காப்பியத்தை தொடங்குகிறார்.  அவர் சொன்னதை அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ 'ஞாயிறு போற்றுதும்' சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரி அடுத்ததாக மற்ற 'ஞா' க்களைப் பற்றி பார்ப்போம்.

Representational Image
Representational Image

ஞானக்குழந்தை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான  திருஞானசம்பந்தர் பிறந்தது சீர்காழியில். அவருக்கு மூன்று வயது  இருக்கும் போது  ஒரு நாள் தனது தந்தையாருடன்  கோயிலுக்கு  சென்றார். பிள்ளையை கரையில் அமரச் செய்துவிட்டு குளிக்கச் சென்றார் அவரது தந்தையான சிவபாத இருதயர்  நீரில்  சிறிது நேரம் மூழ்கி  இருந்த போது அவருக்கு என்னவோ  ஆகிவிட்டது என்று நினைத்து குழந்தையாக இருந்த அவர்,  அம்மா.. அப்பா.. என்று அழத்தொடங்கினார். உடனே சிவபெருமானும் பார்வதி தேவியும் உடனே எதிரில் தோன்றி காட்சியளிக்க,  புரியாத வயதில் மலைத்து நின்ற குழந்தைக்கு இறைவன்  கட்டளைப்படி தேவி திருமுலைப்பால் ஊட்ட  ஞானத்தாயின் பாலுண்ட அவர் ஞானக்குழந்தையாக மாறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Also Read

அட..!

குளித்து முடித்து வந்த சிவபாதர் குழந்தை வாயின் இரு ஓரங்களிலும் வடிந்திருந்த பாலைக் காட்டி நடந்தது பற்றி கோபமாக கேட்க அவரோ,

``தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.’’

என்று இறைவனை போற்றிப்பாட ஆரம்பித்தார். சிறுவயதிலே ஞானம் பெற்றதால் ஞானக்குழந்தை என்று அழைக்கப்பெற்றார் என்கிறது வரலாறு.

சித்திரை மாதத்தில் சீர்காழியில் திருமுலைப்பால் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஞானசவுந்தரி நாடகம்
ஞானசவுந்தரி நாடகம்

ஞான சவுந்தரி

`சின்ரல்லா’ என்ற கிறிஸ்தவ நாடோடிக் கதையை மூலமாக வைத்து உருவானதே `ஞான சவுந்தரி’ கதை. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்டு வெற்றி கண்ட நாடகம். ரோம அரசர் தர்மரின் மகள் ஞான சவுந்தரி. தாயில்லாதவள்... மேரி மாதாவின் மீது தீவிர பக்தி கொண்டவள். தந்தை மறுமணம் செய்து கொள்ள கொடுமைக்கார சித்தி அவளை துன்புறுத்துகிறாள். அவள் ஒழிந்தால்தான் தனக்கு நல்லது என்று முடிவெடுத்து காட்டுக்கு தூக்கிச் சென்று வெட்டிக் கொன்று விடுமாறு கொலையாளிகளுக்கு கட்டளையிடுகிறாள். மாதாவின் அருளால் அவள் எப்படி காப்பாற்றப்படுகிறாள் என்பதே மீதிக்கதை. சிட்டாடல் கம்பெனியால் திரைப்படமாக்கப்பட்டு வெற்றி கண்டது. ஞான சவுந்தரி என்று அதே பெயரில் ஜெமினி அதிபர் வாசனும் ஒரு படமெடுத்தார். அதன் வடிவம் மாறியதால் படம் தோல்வியை தழுவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஞான சம்பந்தன் - பேராசிரியர்

மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றிவர். பட்டிமன்றங்களில் நடுவராக தொடர்ந்து  இருப்பவர். அன்னை மீனாட்சியின் அருளால் நகைச்சுவை  பால் குடித்து வளர்ந்தவர்.  இவர் மேடைப் பேச்சுகளில்  பேசியதை காப்பியடித்து பலர்  ஸ்டாண்ட் அப்  காமெடிகளில்   வெற்றி பெறுகின்றனர்.  பல மாவட்டங்களில் நகைச்சுவை  மன்றங்களை நிறுவி இருக்கிறார். கமல்ஹாசனின்  நெருங்கிய  நண்பர். அவரால் விருமாண்டி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமானார். பல படங்களில் நடித்துள்ளார்.

சமுத்திரகனியின்  நிமிர்ந்து நில் படத்தில் அரசியல் வில்லனாக உருவெடுத்தார். விரைவில் சமுத்திரகனியே  அவரை ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தாலும் வைப்பார். இவர் எழுதிய புத்தகங்களில் இலக்கிய சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்,  பேசும் கலை, கல்லூரி அதிசயங்கள் குறிப்பிடத்தக்கவை.

சர்வதேச நகைச்சுவை மன்றம் திருவல்லிக்கேணி பிரிவில் இவர் பேசும் வீடியோக்களை கேட்டால் மனசு லேசாகும். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும். 

`கு.ஞானசம்பந்தன்
`கு.ஞானசம்பந்தன்

ஞான ராஜசேகரன்

ஓய்வு பெற்ற  ஐ. ஏ. எஸ்  அதிகாரி இவர். தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய 'மோக முள்' நாவலை திரைப்படமாக எடுத்தார். அதுதான் அவர் இயக்கி முதல் திரைப்படம். இப்படத்தில்  'கமலம் பாத கமலம்' என்ற ஒரு இனிமையான பாடலை  ஜேசுதாஸ் அவர்கள் பாடியிருப்பார்.  இளையராஜாவின் இசைமழையில் நனைந்த இப்படம்  தேசிய விருதைப் பெற்றது.  அடுத்ததாக குறிப்பிடத்தக்கப்  படமாக அமைந்தது 'பாரதி'. மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே  பாரதியாகவும் அவர் மனைவியாக தேவயானியும் நடித்தார்கள்.  

சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது. மேலும்  இப்படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலைப் பாடிய பவதாரணிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.     

ஞாநி

இவரது இயற்பெயர் சங்கரன். சிறந்த கட்டுரையாளர்., எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகம், தொலைக்காட்சி என்ற பன்முகத்தன்மை கொண்டவர். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் நிருபராக பணி புரிந்தார். முக்கிய அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை இவரே பொதுக்கூட்டங்களில் மொழி பெயர்த்து பேசியுள்ளார். இவரது ஓ பக்கங்கள் கட்டுரை மிகவும் பிரபலமானது. அதிரடியாக உண்மையை மட்டும் பேசும். பல அரசியல்வாதிகளின் உண்மை முகங்களை அதில் சுட்டிக்காட்டி இருப்பார். இதன் காரணமாகவே மூன்று வார இதழ்களில் மாறி மாறி வெளிவந்தது.

ஞாநி
ஞாநி

ஞாபகம் வருதே...

காதல் குறுக்கீடு இல்லாத வாழ்க்கை அமைவது மிக மிக கடினம். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறுக்கீடுகள் இருந்திருக்கலாம். ஆனால் கடைசியில் அப்பா அம்மா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு பெண் குழந்தை பிறந்தால் பழைய காதலியின் பெயரை சூட்டி மகிழ்வார்கள். இளமையில் நடந்த பல விஷயங்களை தொகுத்து 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...’ என்று பாடி 40 முதல் 80 வயது தாத்தாக்கள் வரை என்று பலரை `ஆட்டோகிராப்’ படம் மூலமாக வாலிபத்துக்கு அழைத்துச் சென்றவர் இயக்குனர் சேரன்.

திரையுலகில் இது பொற்காலம் என்று சுட்டிக்காட்டி 'வெற்றிக்கொடி கட்டியவர்' 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'ன என்னும் பாட்டை போட்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தியவர். ``நம்பர் 6 விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய்...’’ என்று பார்த்திபன் வடிவேலிடம் சொல்லும் காமெடி இவர் தந்ததுதான். நகைச்சுவைக்கு வித்தியாசமான புதிய முகவரி கிடைத்தது.

ஞானபீட விருது

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிகப் பெரிய விருது இது. இந்த விருதை பாரதியஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கிய கழகம் வழங்குகிறது. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் திரு.அகிலன் அவர்கள். அவர் எழுதிய 'சித்திரப்பாவை' என்ற நாவலுக்கு 1975 ஆம் ஆண்டு இவ்விருது கிடைத்தது.

நாவல், சிறுகதை, கட்டுரைகள் என பன்முகப் படைப்பாளி இவர். வேங்கையின் மைந்தன் என்று வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார். அந்த நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்து.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

ஞானபீட விருது பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக வழங்கப்பட்டது. இவரின் நாவல்களில் குறிப்பிடத்தக்கது 'சில நேரங்களில் சில மனிதர்கள் '. லட்சுமி, ஸ்ரீகாந்த், நாகேஷ் நடிக்க பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாக வந்து வெற்றிப் பெற்றது. அக்னிப்பிரவேசம் என்ற பெயரில் விகடனில் சிறுகதையாக வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் நாவலாக உருமாறியது. அதன் தொடர்ச்சியாக 'கங்கை எங்கே போகிறாள்..' என்று பார்ட் 2 அந்தக்காலத்திலேயே எழுதியவர்.

திரைத்துறையில் இயக்குனராகவும் கால்பதித்து `உன்னைப்போல் ஒருவன்’, `புதுசெருப்பு கடிக்கும்’, `யாருக்காக அழுதான்’..போன்ற படங்களை வழங்கினார். மேலும் பல படங்களுக்கு தனது பங்களிப்பை தந்தார்

ஞா என்று சொல்லும் போதே அது ஞானம் என்பதை குறிப்பிடும் சொல் என்பதை உணர்ந்தால் நம் அறிவு விசாலமாகும். அறிவு விசாலமாக விசாலமாக ஞானப்பழம் நமக்கு கிடைத்து விட்டதாக உணரலாம். பழம் நீ அப்பா என்று அவ்வையே நம்மை நோக்கி பாடுவது போல காட்சி தெரியும். அந்த ஞான நிலையை அடைய ஞானத்தின் அதிபதியான ஹயக்கிரீவரை போற்றித் தொழுவோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism