Published:Updated:

நம் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இரண்டு தமிழ்ப்படங்கள்!

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலர் உலக சினிமா என்று அயல்நாட்டு படங்களை பார்த்து சிலாகிப்பர்கள். ஒவ்வொரு வருடமும் அந்தப் படங்கள் ரிலீசான தேதியில் அந்தப் படத்தை பற்றி எழுதி அந்தப் படத்தை கொண்டாடுவார்கள். ஆனால்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அக்டோர் 11ம் தேதி "உலக பெண் குழந்தைகள் தினம்" கடைபிடிக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் மெடல்கள் வெல்வதில் இந்திய ஆண்களுக்கு சமமாக... சொல்லப் போனால் ஆண்களை விட அதிகம் மெடல் வென்றவர்கள் நம் இந்திய பெண்களே. இதே சமூகத்தில் தான் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்துவிட்டு இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துவிட்டால் "அய்யோ... இரண்டாவதும் பிள்ளையா பொறந்துருச்சே... நான் பையன் பொறக்கனும்தான ஆசப்பட்டேன்..." என்று வருந்தும் மக்கள் இருக்கிறார்கள். படிக்காத பட்டிக்காட்டான்களும் இப்படி சொல்லி வருந்துகிறார்கள் மெத்த படித்த பட்டதாரிகளும் இப்படி சொல்லி வருந்துகிறார்கள்.

இப்படிப்பட்ட சமூகத்தில் மாற்றம் உண்டாக்க வேண்டும் என்பதற்காக தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் அந்தக் காலத்திலேயே வந்துள்ளன. பாரதிராஜா இயக்கிய "கருத்தம்மா", ஜானகி விஸ்வநாதன் இயக்கிய "குட்டி" ஆகிய இரண்டு படங்களும் தான் அவை. இந்த இரண்டு படங்களையும் நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று உறுதியாக சொல்வேன்.

ராஜஶ்ரீ
ராஜஶ்ரீ

கருத்தம்மா:

பெரியார் தாசன் தனக்கு பிறந்த பெண் குழந்தையை நினைத்து வருந்துகிறார். பெண் குழந்தையா போச்சே... என்று புலம்ப அந்தக் குழந்தையை கொல்ல முற்படுகிறார்கள். ஆனால் அந்த ஊரில் இருக்கும் ஒருவர் அந்தக் குழந்தையை சாகவிடாமல் காப்பாற்றி வேறு ஊருக்கு அனுப்பி பிழைக்க வைக்கிறார். அந்த பெண் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகி டாக்டராக உயர்கிறாள். பெரியார் தாசன் வாழும் ஊருக்கு திரும்ப வருகிறாள். அப்போது தன்னை பெற்ற அப்பாவை சந்திக்க நேர்கிறது. நோய்வாய்ப்பட்டு இருக்கும் தன் அப்பாவை அந்தப் பெண் மருத்துவம் பார்த்து காப்பாற்றுகிறாள். எந்த குழந்தையை சாகடிக்க நினைத்தாரோ அந்தக் குழந்தையால் உயிர் பிழைத்ததை நினைத்து வருந்துவார் பெரியார் தாசன். தேசிய விருது வென்ற படம் இது. இந்தப் படத்தை எடுத்ததற்காக பாரதிராஜாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

குட்டி:


குட்டி என்றதும் தனுஷ் நடித்த குட்டி படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த படத்தை நான் இங்கு குறிப்பிடவில்லை. எழுத்தாளர் சிவசங்கரி கதை எழுத... தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்த... இளையராஜா இசையமைத்த ஜானகி விஸ்வ நாதன் இயக்கிய படம் "குட்டி". கிராமத்தில் குயவர் ஒருவருக்கு மகளாக பிறந்த கண்ணம்மா தன் குடும்ப வறுமை காரணமாக சென்னைக்கு ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்காக வருகிறாள். கிராமத்தில் தன் அப்பாவுடன் இருந்த வரை சந்தோசமாக வாழ்ந்த குட்டி நகரத்திற்கு வந்ததும் நரக வேதனை அனுபவிக்கிறாள். அவள் அந்தக் கொடுமையை தாங்க முடியாமல் தன் கிராமத்திற்கே திரும்ப செல்ல முயல்கிறாள். அவள் தன் கிராமத்திற்கு திரும்பினாளா? நகரம் தந்த அந்தக் கொடுமையில் இருந்து தப்பித்தாளா? என்பதே கதை. இந்தப் படமும் தேசிய விருது வென்ற மிக முக்கியமான படம்.

குட்டி
குட்டி

உலக சினிமா:

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலர் உலக சினிமா என்று அயல்நாட்டு படங்களை பார்த்து சிலாகிப்பர்கள். ஒவ்வொரு வருடமும் அந்தப் படங்கள் ரிலீசான தேதியில் அந்தப் படத்தை பற்றி எழுதி அந்தப் படத்தை கொண்டாடுவார்கள். ஆனால் அவர்களின் கண்களுக்கு... நம் கண்களுக்கு... "கருத்தம்மா", "குட்டி" மாதிரியான படங்கள் ஏனோ தெரிவதே இல்லை. தமிழில் வெளிவந்த தரமான உலக சினிமாக்கள் தான் இந்தக் கருத்தம்மாவும் குட்டியும்.


பாலின சமத்துவம்:

முகநூலிலும் வாட்சப் ஸ்டேட்டஸிலும் வைரல் ஆகும் பாலின சமத்துவம் குறித்த வீடியோக்களை பகிரும் ஆண்கள் நிஜத்தில் தன் வீட்டுப் பெண்களை பார்த்து "எனக்கு ஏன் நீ அடிமையா இருக்க மாட்டினு அடம்பிடிக்குற..." என்று தங்களது ஆதிக்க செயல்பாடுகளின் மூலம் மறைமுகமாக கேள்வி கேட்பவர்களாக தான் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் கண்டிப்பாக இந்த படங்களை பார்க்க வேண்டும். அப்படியே விகடனில் பாலின சமத்துவம் குறித்து தொடராக வெளிவந்த "ஆண்பால் பெண்பால் அன்பால்" தொடரையும் வாசியுங்கள். அதில் பெண் குழந்தைகளை பற்றி நிறைய நல்ல கருத்துக்களை படிக்க முடியும்.

உண்மையான பொக்கிஷங்கள்:

கருத்தம்மாவும் குட்டியும் தான் தமிழ் சினிமாவின் உண்மையான பொக்கிஷங்கள்! தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மகன், மகள், பேரன், பேத்தி என்று குடும்பத்தோடு அமர்ந்து இந்தப் படங்களை பாருங்கள்! இந்தப் படங்களை பற்றி குடும்பத்திற்குள் ஆரோக்கியமான உரையாடலை தொடங்குங்கள். சமுதாயத்தில் உண்மையான நிரந்தரமான மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்யுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு