Published:Updated:

இப்படி ஒரு பாடல் இனி வருமா?? | My Vikatan

இளையராஜா, கவிஞர் வாலி

பதிலுக்கு வாலி அவர்கள் "என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில சிட்டுக்குருவிக்கு சிறக பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே? முதல்ல ஒரு சாம்பிள் பாட்டை சொல்லு" என்றாராம்.

இப்படி ஒரு பாடல் இனி வருமா?? | My Vikatan

பதிலுக்கு வாலி அவர்கள் "என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில சிட்டுக்குருவிக்கு சிறக பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே? முதல்ல ஒரு சாம்பிள் பாட்டை சொல்லு" என்றாராம்.

Published:Updated:
இளையராஜா, கவிஞர் வாலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பேருந்துகளில் /பேருந்தை மையமாக வைத்து கதாநாயகன், கதாநாயகி பாடல்பாடுவது மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி தொடங்கி இதயம், காதலன் ,சூரிய வம்சம் ,,இப்படி எத்தனையோ திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தாலும்,

1978 ஆம் ஆண்டு திரு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த 'சிட்டுக்குருவி' படத்தில் வாலி அவர்கள் எழுதி இளையராஜா இசையமைத்து எஸ் பி .பி அவர்கள் சுசிலாம்மாவுடன் இணைந்து பாடிய பாடல் "என் கண்மணி என் காதலி இளமாங்கனி...'' என்ற பாடல்தான் இன்றுவரை பேருந்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட பாடல் என்று(றே) சொல்லலாம்.. ஒரு பேருந்தின் தினசரி நிகழ்வுகளின் அடிப்படையில் புனையப் பட்டிருக்கும் இந்தப்பாடல்.

பேருந்தின் ஹாரன், நடத்துனரின் விசில் சத்தத்தையும் இசையாய் கோர்த்திருப்பார் இசைஞானி.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பாடலைக் கேட்கும்போது அன்றைய சென்னையின் பஸ் பயணம் கண்முன்னே அழகாய் நிழலாடும். இந்தப் பாடலில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார். இரண்டு குரல்கள் ஒரே பாடலை ஒட்டி பாடுவது போல் இருக்கும். ஆங்கில இசையில் counterpoint என்ற முறையில் இசைக்கப்பட்டது. counterpoint first used in Indian songs இதுதான்.

"இந்தாம்மா கருவாட்டு கூடைமுன்னாடிபோ" "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு" ...இதெல்லாம் அடுத்த ஜென்மம் வரை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கக் கூடியது. இந்த படம் வெளியானபோது செய்தித்தாள் விளம்பரங்களில் இளையராஜா" இசை ராஜா"வாகிறார் என்றே விளம்பரப்படுத்தப்பட்டதாம்..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த அளவிற்கு படத்தின் இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இளையராஜா அவர்களும் வாலியும் கலக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலைப் பற்றி இளையராஜா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கவிஞர் வாலி அவர்களை இரவு நேரம் என்று பாராமல் அழைத்து, சிச்சுவேஷனை சொல்லி பாடல் எழுதச் சொல்ல, வாலி அவர்களோ ட்யூனை வாசிக்கச் சொல்லிக்கேட்டாராம்.

``ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா? ...எப்படி சரிவரும்'' என்றாராம். அப்போது இளையராஜா அவர்கள்,

"அண்ணே! இரண்டு டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதனதன் தனித் தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப்பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஓட்ட வைத்தது போல் இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்" என்றாராம்.

பதிலுக்கு வாலி அவர்கள் "என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில சிட்டுக்குருவிக்கு சிறக பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்கிறே? முதல்ல ஒரு சாம்பிள் பாட்டை சொல்லு" என்றாராம்.

உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினாராம். இசைஞானி. தான் ஒருடியூனும் கங்கை அமரன் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினார்களாம்.

இளையராஜா
இளையராஜா

ஆண் -பொன்

பெண் -மஞ்சம்

ஆண்- தான்

பெண் _அருகில்

ஆண்- நீ

பெண்- வருவாயோ?... இப்படிப் பாடி... அதாவது ஆண் பாடுவதைத் தனியாகவும், பெண் பாடுவதைத் தனியாகவும், பிரித்துப் படித்தால், தனித்தனி அர்த்தம் வரும். அதாவது 'பொன்தான் நீ' என்கிறான் ஆண். 'மஞ்சம் அருகில் வருவாயோ' என்கிறாள் பெண். இரண்டையும் சேர்த்துப் பாடும்போது' பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ'? என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.

' சரி' எனக்கு புரிந்தது என்ற வாலி கொஞ்சம் யோசித்து பிறகு கையில்' pad'யை எடுத்து மளமளவென்று அவருடைய பாணியில் இந்த பாடலை எழுதினாராம்.

பாடலை படித்து பார்த்த போது... இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும் மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாறி வாலி எழுதி இருந்தது... மிகவும் பிடித்துப் போயிற்றாம். வாலி அவர்களைக் கட்டி அணைத்துக்கொண்டாராம்இசைஞானி. "என் கண்மணி" பாடலைப் பிரித்துப் படித்துப் பாருங்கள். என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்? நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ? உன் காதலி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன்? நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?

இளையராஜா
இளையராஜா

என் மன்னவன் என்னைப் பார்த்ததும் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ? உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான். நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ? ... இப்படி அழகாக இரண்டு அர்த்தம் வரும்.

கவிஞர் வாலி அவர்களுக்கு இந்த விஷயத்தை விளக்கி அவரிடம் வரிகளை வாங்கிய இசைஞானியைப் போலவே விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக எழுதியவகையில் கவிஞர் வாலியும் ஒரு 'கவிஞானி' தான்.

காதலை இவ்வளவு அழகாக ஒரு பேருந்தில் வெளிக் கொணரும் முயற்சியாக மிகவும் அருமையாக அமைந்திருக்கும் இந்த பாடல். சரணங்களில் வரிகள் ஒன்றிணைந்து எதிரொலியாக ராகம் பாடவைத்திருப்பார் இளையராஜா. 'வாய்ப்பே இல்ல ராஜா' இப்படி ஒரு பாடல் இனி வருமா??

காதலை இவ்வளவு அழகாக ஒரு பேருந்தில் வெளிக்கொணரும் முயற்சியாக மிக அருமையாக அமைந்திருக்கும் இந்தப்பாடல். சரணங்களில் வரிகள் ஒன்றிணைந்து எதிரொலியாக ராகம் பாட வைத்திருப்பார் இசைஞானி. கவிஞானியும் இசைஞானியும் நமக்கு கிடைத்த இரண்டு பொக்கிஷங்கள்!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.