Published:Updated:

யாருடைய குற்றம்?

அரசுப் பள்ளி மாணவர்கள்

மேடையில் நன்றாகப் பேசும் பாலகிருஷ்ணன் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு பேச்சுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியரைப் பற்றி சொல்லி நெகிழ்கிறார் பாலகிருஷ்ணன்.‌

யாருடைய குற்றம்?

மேடையில் நன்றாகப் பேசும் பாலகிருஷ்ணன் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு பேச்சுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியரைப் பற்றி சொல்லி நெகிழ்கிறார் பாலகிருஷ்ணன்.‌

Published:Updated:
அரசுப் பள்ளி மாணவர்கள்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அரசினர் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியை பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் இருந்த மாணவர்கள் நடனமாடிய காணொளி வைரலானது. மற்றொரு அரசினர் பள்ளியில் மாணவன் ஒருவன் ஆசிரியரை அடிக்க முற்படும் காட்சியும் இதேபோல வைரலானது. இந்த மாணவர்களின் செயல்களைப் பார்த்து தமிழகமே கொதித்தது.

இந்த வேதனையைக் காட்டும் விதமாக எழுதப்பட்ட,

'பள்ளிக்கூட வகுப்பறையில்

சல்லித்தனம் நடக்குது!

சொல்லித்தரும் வாத்தியார

சுள்ளானெல்லாம் அடக்குது!

வீணைன்னு நெனச்சதெல்லாம்

விசிலடிச்சுத் திரியிது!

தூணுன்னு நெனச்சதெல்லாம்

துருப்பிடிச்சு உரியுது!'

என்று தொடங்கும் கவிதையும் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பகிரப்பட்டது.

தமிழகக் காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு நில்லாமல், அவர்களுடைய செய்கைகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்பதையும், தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதையும் சுட்டிக் காட்டி எச்சரித்தார்.

அரசும், ஆசிரியர்களும், பொதுமக்களும் அந்த மாணவர்களை தீயவர்கள் என்று முடிவு செய்து அவர்களைத் திருத்துவது எப்படி என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாணவனுடைய குணநலன்களை வடிவமைப்பதில் அவனுடைய பெற்றோர்கள், நண்பர்கள், சமூகம், ஊடகங்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் பங்கிருக்கின்றது.‌ இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மாணவர்களின் சிந்தனைகளின் மீது பெரும் அழுத்தம் செலுத்துகின்றன.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர்களின் மனம் சத்தான மண் போன்றது. விதைக்கப்படுகின்ற அனைத்தையும் விளையவைத்துத் தருகின்ற சிறந்த நிலங்கள் அவை. அவர்களுடைய மனங்களில் வளரும் களைகளை அகற்றி, நல்ல பயிர்களை விளைவிப்பதில் முதன்மைப் பங்கு ஆசிரியர்களுடையது. கல்விக் கூடங்களின் பணி கல்வி அறிவிப்பதோடு முடிந்து விடுவதில்லை. மாணவர்கள் நல்ல மனிதர்கள் ஆவதற்கான மாற்றங்களை விதைப்பதும் ஆசிரியர்களின் கடமையாகும்.‌

தமிழில் ஐஏஎஸ் தேர்வெழுதி, தமிழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று, ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக உயர்ந்த ஆர். பாலகிருஷ்ணன் தன் ஆசிரியரை நினைவு கூர்கிறார். மேடையில் நன்றாகப் பேசும் பாலகிருஷ்ணன் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு பேச்சுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியரைப் பற்றி சொல்லி நெகிழ்கிறார் பாலகிருஷ்ணன்.‌

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு கல்லூரி மாணவன். மிகப்பெரிய போக்கிரி. யாருக்கும் அடங்காதவன். அவனைக் கண்டால் ஆசிரியர்களுக்கு அச்சம். மாணவர்களுக்கும் நடுக்கம். யாருடனும் நட்பு பாராட்டாதவன். அவனுடைய பேராசிரியர் அவனை ஒருமுறை தன்னுடைய அறைக்கு அழைக்கிறார். அறிவுரை வழங்கப் போகிறார் அல்லது தன்னை மிரட்டப் போகிறார் என்ற எண்ணத்தோடு வருகிறான் மாணவன். அறைக்கு வந்த மாணவனை உட்காரச் சொல்லுகிறார் பேராசிரியர்.‌ வற்புறுத்திய பிறகு அமருகிறான் மாணவன். அதுவே அவனுக்கு புது அனுபவம்.

அவனுடைய போக்கிரித்தனத்தைப் பற்றியோ, நடத்தையைப் பற்றியோ எதையும் பேசாமல் "அடுத்த வாரம் நடக்கப்போகும் இலக்கிய நிகழ்வுக்கு வரவேற்புரை வழங்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு" என்று சொல்லுகிறார். அதிர்ச்சியடைந்த மாணவன் தன்னை வேறு யாரோ ஒருவனாக நினைத்துப் பேசுகிறார் என்றெண்ணி தான் யார் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறான். அவனைத்தான் அந்தப் பணிக்கு தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர்.‌ அடுத்த வாரம் வரவேற்புரை வழங்கிய அந்த மாணவன் பின்னாளில் மிகச் சிறந்த இலக்கியவாதியாக மாறினான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

கனிவுள்ளம் படைத்த, தங்கள் பணியை நேசித்த ஆசிரியர்களால் தனிக் கவனம் செலுத்தப்பட்டு, மனம் திருந்தி பெரும் வாழ்க்கை வாழ்ந்தவர்களின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

கடைசி வரிசையில் நடனமாடிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் கடமைக்காகப் பாடம் நடத்தும் அந்த ஆசிரியையை மன்னிக்க முடியவில்லை. தன்னுடைய ஒவ்வொரு மாணவனையும் தன்னுடைய கற்பித்தல் சென்றடைய வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 'ஊதியத்துக்காகப் பாடம் நடத்துகிறேன். நீ கேட்டால் என்ன? கேட்காவிட்டால் என்ன? நீ வாழ்க்கையில் முன்னேறினால் என்ன? முன்னேறா விட்டால் என்ன? எனக்கு ஊதியம் கிடைத்துவிடும்' என்ற எண்ணமே அந்த ஆசிரியையிடம் இருப்பதாகத் தோன்றியது.

Representational Image
Representational Image

'வருங்காலத் தூண்களெல்லாம்

வளஞ்சு போயி கெடக்குது!

பெரம்பெடுத்து திருத்தலாம்னா

சட்டம் வந்து தடுக்குது!'

என்பது ஒரு போலிச் சாக்கு. மாணவர்களைத் திருத்த வேண்டாம் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை.

பிரம்பெடுத்துத்தான் திருத்த முடியும் என்று ஒரு ஆசிரியர் நினைப்பாரானால் மாணவர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் எதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருக்கின்றன. கல்வி கற்பித்தலை விட பதிவேடுகளைப் பராமரிப்பது தான் அவர்களுடைய முதன்மையான வேலையாக இருக்கின்றது. ஒவ்வொரு மாணவன் மீதும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றால் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். சில அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு வகுப்பிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களுடைய வருகையைப் பதிவு செய்வதற்குள்ளாக ஒரு வகுப்பே முடிந்து விடுகிறது.‌

கொரோனா சாவுகளை மட்டுமல்ல, பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் இடைநின்ற மாணவர்களின் கணக்கையும் அரசுகள் மறைத்தே காட்டுகின்றன. மாணவர்கள் ஒரு வருடம் இடை நின்றாலும் கூட அவர்களை இடைநின்றவர்கள் என்று காட்டாமல் விடுப்பில் இருப்பவர்களாகக் காட்டி வருகின்றன. இவையெல்லாம்தான் ஆசிரியர்களின் பணிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்வி போன்ற ஒரு தொழில் நுட்பத்துறையின் தலைமைப் பொறுப்பில் கல்விப் பின்புலம் இல்லாத ஐஏஎஸ் அலுவலரைப் பணியமர்த்துவது, கல்வியை வருவாய்த்துறை போன்ற ஒரு அரசுத் துறையாகக் கருதுவதன் விளைவு. இந்த நடவடிக்கை கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களுக்கும், ஆசிரியர்களின் மனச் சுமையையும், பணிச்சுமையையும் குறைக்கும் முன்னெடுப்புகளுக்கும் எதிரான ஒன்றாகும்.

தங்களுடைய ஊதிய உயர்வுக்காக திரண்டு போராடுகிற ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் செம்மையாக செய்ய விடாமல் செய்கின்ற சிக்கல்களுக்கு எதிராகப் போராடியதில்லை.

அரசு பள்ளி
அரசு பள்ளி
விகடன்

கடைசி வரிசையில் நடனமாடும் மாணவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அந்த ஆசிரியை எப்போதாவது தன்னுடைய மாணவர்கள் சிலர் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று வருந்தியிருப்பாரா? வகுப்பறையில் முறை தவறி நடக்கும் மாணவர்களைப் பற்றி தலைமை ஆசிரியரிடமோ அல்லது வேறு யாரிடமாவதோ புகார் அளித்திருக்கிறாரா? என்னால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று உதவி கேட்டிருப்பாரா?

இதை எதையும் அவர் செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. மாணவர்களைக் கையாள்வதில் சிக்கல்கள் ஏற்படும் போது ஆசிரியர்கள் உதவி கேட்பதற்கான அமைப்பும் நம்முடைய கல்வித் துறையில் வலுவாக இல்லை.

அந்த மாணவர்களின் நடத்தை அவர்கள் தீயவர்கள் என்பதைக் காட்டல்லை. மாறாக அந்த மாணவர்களை வழி நடத்துவதில் நம்முடைய கல்வித் துறை அடைந்திருக்கும் தோல்வியைக் காட்டுகிறது. ஒவ்வொரு மாணவனையும் நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டிய கடமையை ஆசிரியர்கள் செய்யத் தவறியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இது போன்ற செயல்கள் தனியார் பள்ளிகளில் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இச்செயல்களைச் செய்தவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள். மாணவர்களுடைய செயல்களுக்கு அவர்களையோ அல்லது அவர்களுடைய குடும்பச் சூழ்நிலைகளையோ காரணமாகக் கூறுவது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னேறிய வகுப்பினர் கூறும் காரணங்களை விட மோசமானது. ஒரு மனிதனுடைய அறிவு அவனுடைய பிறப்பால் முடிவு செய்யப்படுகின்றது என்று மனு கூறியதை விட மோசமான கூற்று ஒருவனுடைய குணம் அவனுடைய பிறப்பால் முடிவு செய்யப்படுகின்றது என்பது.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்களுடைய ஆசிரியர்களும், கல்வித் துறையும் தான்.

-மருத்துவர். இரா. செந்தில்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism