சட்டமன்ற தீர்மானங்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால வரம்பு தேவை - மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்
கடந்த ஆண்டு தி.முக ஆட்சிக்கு வந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற போது ஆளுநராக இருந்த பன்வாரி லால் அவர்கள் பதவி காலம் முடிவடைந்த பிறகு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர். என். ரவி அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட பின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏறக்குறைய பத்தொன்பது மசோதாக்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய மசோதாக்கள் மீதும் எந்த முடிவும் எடுக்கப்படாமலும் பல மாதங்களாக ஆளுநர் அவர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமானது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் சார்ந்த நீட் விலக்கு தொடர்பான மசோதா ஆகும். இந்த தீர்மானம் ஆனது முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பல மாதங்கள் கழித்து ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போது அவரிடம் இருக்கும் ஒரே வாய்ப்பு அவர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதே, ஆனால், இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு பல நாட்களாகியும் ஆளுநரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தொடர் கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் எடுத்து வைக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇப்படி ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் இந்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? அரசியல் ரீதியான ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் சட்ட ரீதியாக முக்கிய காரணம் ஆளுநர் சட்டமன்ற தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால நிர்ணயம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட படவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 200 , சட்டமன்றமன்றகளால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பது மற்றும் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டிய தீர்மானங்கள் தொடர்பான ஆளுநரின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடுகிறது. மேலும், இதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த சட்டப்பிரிவு 200 இல் ஒரு மசோதா மீதான ஒப்புதல் மற்றும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. இதன் விளைவாக, மாநில ஆளுநர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதா மீதும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தலாம்.
இப்படியாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏறக்குறைய பத்தொன்பது தீர்மானங்களும் முதல்வர் அவர்கள் ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்தும் கூட இன்று வரை ஒப்புதல் அளிக்கப்படாமலே இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது போன்ற சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்கள், ஏப்ரல் 1, 2022 அன்று பாராளுமன்றத்தில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார். மேலும், இந்த மசோதாவில் கூறப்படுவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் 200 இல் சட்டமன்ற தீர்மானங்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் மீதும் ஆளுநருக்கான கால வரம்பு நிர்ணயம் செய்யும் பொருட்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், மேலும்,ஆளுநர் தீர்மானங்கள் மீது ஒப்புதல் அளிக்கவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவோ அவருக்கு இரண்டு மாத காலம் என்பதை நிர்ணயம் செய்ய திருத்தம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் பெயரளவுக்கு நிர்வாக தலைவராவார், அனைத்து நிர்வாக செயல்களும் அவர் பெயரில் நடைபெற்று வந்தாலும், அரசியலமைப்பு சட்டம் 163 வது பிரிவின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரே ஆவர்,
இது போல, தீர்மானங்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பதற்கான கால அளவு தீர்மானிக்கப்படும் போது, மக்களால் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசின் செயல்பாடுகளை நியமனம் செய்யப்படும் ஒரு ஆளுநர் தடுக்கவோ அல்லது காலம் தாழ்த்தவோ முடியாது. இதற்கடுத்த படியாக, பெரும்பாலும், கூட்டாட்சி தத்துவத்தில் மக்கள் நல்வாழ்வு தொடர்பான பொறுப்பும், கடமையும் மாநில அரசுகளுக்கு அதிகம். அதனால், மாநில அரசுகள் நிறைவேற்றும் தீர்மானங்கள் என்பது பெரும்பாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களாகவே இருக்கும். அதனால்,ஆளுநருக்கு தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு கால அளவு இல்லை என்றால் அவர் காலம் தாழ்த்தும் போது அந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடையாமல் பயனற்று போய்விடும்.
மேலும், ஒரு மாநில சட்டமன்றம் என்பது அந்த மாநில மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டமியற்றவே ஆகும், அந்த சட்டங்கள் நியமனம் செய்யப்படும் ஆளுநரால் தடுக்கப்படுமானால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த சட்டங்களின் பயனை எப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்? ஏதோ ஒரு சட்டத்தின் மீது ஆளுநரின் காலதாமதம் என்பது மக்கள் மத்தியில் அது ஆளுநரின் மதிப்பை பாதிக்காது, மாறாக அது அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் அரசையே பாதிக்கும். அப்படியொரு நிலையில், மக்களுக்கு பதிலளிக்கும் நிலையில் நியமனம் செய்யப்படும் ஆளுநர் இருக்கமாட்டார், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசே இருக்கும்.

இப்படியாக, நியமனம் செய்யப்படும் ஆளுநர் என்பவர் மறைமுகமாக மாநில அரசின் செயல்பாடுகளை தடுக்கிறார் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் கடமையை மக்களுக்கு ஆற்றுவது என்பது கடினமே.
கூட்டாட்சி தத்துவத்தின் படி பல மொழி வழி தேசிய இனங்கள் கூடி வாழக் கூடிய இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒன்றியத்தில், மக்களால் தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாநில அரசுகள் கொண்டுவரக்கூடிய ஒரு தீர்மானத்தின் மீது நியமன ஆளுநர் முடிவெடுக்க அல்லது ஒப்புதல் தர எந்த கால அவகாசமும் இல்லை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.