Published:Updated:

நா. முத்துக்குமார் வித்தைக்காரர்! - தரமணி மெமரீஸ்

Taramani

நா. முத்துக்குமார் எப்படி ஒரு பெண்ணின் ஆன்ம உணர்வுகளை இவ்வளவு துல்லியமாக எழுதினார் என்று வியப்பாக இருக்கிறது..

நா. முத்துக்குமார் வித்தைக்காரர்! - தரமணி மெமரீஸ்

நா. முத்துக்குமார் எப்படி ஒரு பெண்ணின் ஆன்ம உணர்வுகளை இவ்வளவு துல்லியமாக எழுதினார் என்று வியப்பாக இருக்கிறது..

Published:Updated:
Taramani

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தரமணி ஆல்பம் மட்டும் ஏன் அவ்வளவு ஸ்பெசல் என்றால், ராம் - யுவன் - நா. முத்துக்குமார் கூட்டணியில் உருவான கடைசி ஆல்பம் இது. நா. முத்துக்குமாரின் சினிமா வாழ்க்கையிலும் கடைசி ஆல்பமாக அமைந்த படம் இந்த "தரமணி". "From the bottom of our heart" என்ற அஞ்சலி பாடலில் I dedicate this taramani album to muthukumar... from the bottom of my heart என்று யுவன் கூறியிருப்பார்.

தரமணி படம் வெளியாகி நேற்றுடன் (11.08.2021) நான்கு வருடங்கள் ஆகிறது. அந்தப் படத்தில் குறிப்பிட்டு பேசும்படி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் நா. முத்துக்குமாரின் பங்களிப்பை மட்டுமே தனிக்கட்டுரையாக குறிப்பிட்டு எழுத என் மனம் விரும்புகிறது.

1. யாரோ உச்சிக்கிளை மேலே, 2. உன் பதில் வேண்டி யுகம் பல தாண்டி, 3. உன்னை உன்னை உன்னை, 4. காதல் ஒரு கட்டுக்கதை, 5. ஹே ஒரு கோப்பை வேண்டும் கொண்டு வா, 6. பாவங்களை சேர்த்துக் கொண்டு, என்று தரமணி படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அந்த ஆறு பாடல்களையும் நா. முத்துக்குமார் தான் எழுதியுள்ளார். அந்த பாடல்கள் பற்றிய என் கண்ணோட்டம்..

'தரமணி'
'தரமணி'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. யாரோ உச்சிக்கிளை மேலே...

ஆல்பத்தின் முதல் பாடல் இது. "யாருமின்றி யாரும் இங்கு இல்லை... இந்த பூமி மேலே... தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை..." என்ற வரிகளை முதல்முறை கேட்டதும் இப்படிபட்ட வரிகளை எழுதிய முத்துவை ஏன் கடவுளே இவ்வளவு சீக்கிரம் பறித்துக்கொண்டாய் என்று கேட்க தோன்றுகிறது.

"தரையில் வந்தது வானம்... இனி நட்சத்திரங்களின் காலம்...", "பெண்ணே நீ அருகினில் வரவர காயங்கள் தொலைகிறதே... உன் தோளில் நானும் சாயும்போது நீ என் தாயே...", என்று இந்தப் பாடல் முழுக்க தன் வரிகளால் அற்புதம் செய்திருப்பார் நா.முத்துக்குமார். இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வரியையும் தனி ஸ்டேட்டஸாக வைக்கலாம்... யுவன் இந்தப் பாடலை பாடியிருப்பார் என்பது கூடுதல் சிறப்பு...!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. உன் பதில் வேண்டி... யுகம் பல தாண்டி...

இந்தப் பாடலை சித்தார்த் பாடியுள்ளார். இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் "வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்... நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்..." என்ற வரிகள் மிகவும் ஆழமானவை. "கடல் நீலம் சேர்த்து கனவள்ளி கோர்த்து என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்..." "யாரும் நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே... நிஜமாக்கி வைப்பேன்..." என இந்தப் பாடலில் உள்ள வரிகளுக்காக நா.முத்துக்குமாருக்கு தாராளமாக தேசிய விருது வழங்கியிருக்கலாம். இந்தப் பாடலில் நா. முத்துக்குமாரின் கற்பனை வரிகள் அபாரம். அதே போல "வழிப்போக்கனின் வாழ்விலே..." என்ற சித்தார்த்தின் உச்சரிப்புக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் வழங்கி இருக்கலாம்.

தரமணி
தரமணி

3. உன்னை உன்னை உன்னை...


"தனிமை தனிமை தனிமை இன்றி வேறெதுவும் இல்லை இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை...", "நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்கு என் ஆன்மாவில் இருந்து அரைவரி எழுதினால் போதும் நீ லைக் செய்வாய்... ஆனால் நான் எழுதுவதாய் இல்லை..." போன்ற வரிகளை கேட்கும்போது அவ்வளவு ரகளையாக இருக்கும். பிரேக்அப் செய்த காதலனும் காதலியும் மீண்டும் சேர்வதற்கு முரண்டு பிடிப்பது மாதிரியான வரிகளை எழுதியிருப்பார் நாமு. அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அசால்ட்டாக பாடல் வரிகளாக மாற்றியிருப்பார் நாமு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. காதல் ஒரு கட்டுக்கதை...

"காதல் ஒரு கட்டுக்கதை காலில் விழ நீ தேவையில்லை...", "ஆணும் ஒரு மிருகம் இது யாருக்குத் தெரியும்... பெண்ணும் ஒரு மிருகம் இது யாருக்குப் புரியும்... இதில் நீ என்ன... இதில் அவள் என்ன... எல்லாம் சதை தானே... சதை தின்னும் கதை தான்... ", "அன்பும் அறனும் பொய் தானே வள்ளுவனின் வாக்கும் பொய்தானே... வீடும் வாசலும் பொய் தானே இந்தக் கோட்டை தாண்டி ஓடிப்போ..." போன்ற வரிகளை கேட்கும்போது நா. முத்துக்குமார் இப்படிபட்ட வரிகளையும் எழுதுவாரா என்று ஆச்சரியமாக இருந்தது.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

5. ஹே ஒரு கோப்பை வேண்டும் கொண்டு வா...

"கல் பிறந்ததும் மண் பிறந்ததும் பெண்ணும் பிறந்தாளே அவள் கண்ணில் அன்றே கண்ணீர் துளிகள் கன்னம் தீண்டியதே...

பெண் என்பவள் ஆண் பார்வையில் மோகச்சதை தானா

என்னை வெட்டி கூறிட

குத்திக்கிழித்திட

விரால்கள் நீண்டிடுதே...", " பெண்கள் நெஞ்சில் உள்ள துன்பமெல்லாம் செத்தால் கூட சாகாது இருக்கும்..." போன்ற வரிகளை கேட்கும்போது நா. முத்துக்குமார் எப்படி ஒரு பெண்ணின் ஆன்ம உணர்வுகளை இவ்வளவு துல்லியமாக எழுதினார் என்று வியக்க வைத்தது.

6. பாவங்களை சேர்த்துக்கொண்டு...

தமிழ் சினிமாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று. டாப் 10 பாடல்களில் இளையராஜா எழுதிய "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் என் ஐயனே...". இந்த பாடலுக்கு முதலிடம் என்றால் நா. முத்துக்குமார் எழுதிய "பாவங்களை சேர்த்துக் கொண்டு..." என்ற இந்தப் பாடலுக்கு இரண்டாமிடம் கொடுப்பேன். இந்தப் பாடலுக்காகவும் நா. முத்துக்குமாருக்கும் யுவனுக்கும் தேசிய விருது கொடுத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. "உயிரை நீ படைத்தது எதற்கு... இதயமதில் துடிப்பது எதற்கு...", "நஞ்சினை போல் நெஞ்சுக்குள் இருக்கும் குற்றம் கொல்கிறதே... என் தொண்டைக் குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே...", , "உறக்கமில்லை இரக்கம் காட்டு... இல்லை என் வலிகளை ஆற்று...", "எரிந்து முடிந்த விளக்கில் இன்று வெளிச்சம் ஒன்று வந்தே பிறக்கிறதே...", "நடுங்குகின்ற விரல்களை பிடித்து கருணையுடன் வெப்பத்தை கடத்து..." ஆகிய வரிகளை கேட்கும்போது கண்ணீர் நம்மையறியாமல் வழிந்தோடும்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

பாடலாசிரியர்களுக்கு கற்பனை திறன் மிக அவசியம். எல்லாருக்கும் இந்த திறன் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அதை சரியான இசையமைப்பாளருடன் கைகோர்த்து பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் நா. முத்துக்குமார் வித்தைக்காரர். தன்னுடைய கற்பனை திறனின் உச்சத்தை ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தின் பாடல்களில் வரிகளாக்கியுள்ளார் நாமு. இனி வரும் ராம் படங்களில் நா. முத்துக்குமார் இருக்கமாட்டார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது...!


-மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism