Published:Updated:

ஆசிரியர்களிடம் எங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள்! | My Vikatan

Representational Image

அனைத்து ஆசிரியர்களும் நடந்தும், மிதிவண்டியிலும் வந்த நினைவு. காலை முதல் மாலை வரை ஆசிரியர் வகுப்பிலேயே தான் இருப்பார். விடுப்பு எடுத்தால் மட்டுமே பிற வகுப்பு ஆசிரியர் வந்து கூடுதலாய் பாடம் நடத்துவார்.

ஆசிரியர்களிடம் எங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள்! | My Vikatan

அனைத்து ஆசிரியர்களும் நடந்தும், மிதிவண்டியிலும் வந்த நினைவு. காலை முதல் மாலை வரை ஆசிரியர் வகுப்பிலேயே தான் இருப்பார். விடுப்பு எடுத்தால் மட்டுமே பிற வகுப்பு ஆசிரியர் வந்து கூடுதலாய் பாடம் நடத்துவார்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நீங்கள் ஒரு மாணவனை மாணவனாகவே நினைத்தால் அவன் மாணவனாகவே இருந்து விடுவான். ஆனால் அவன் மேதாவியாக வேண்டும் என்ற பார்வையில் முயற்சி செய்தால் அவன் மேலாவிக்கெல்லாம் மேதாவி ஆவான்
கோதே

ஆசிரியர் தினம் என்று ஒரு நாளில் மட்டும் தான் ஆசிரியர்களை வானளாவ புகழ்வதும், இளமையில் தன் வாழ்வில் மீட்டெடுத்த ஆசிரியர் பெருந்தகைகளை நினைவில் நிறுத்தி,அந்த எண்ணங்களை சிலாகிப்புடன் பகிர்வர். ஆசிரியர்களுக்கும் அன்று ஒரு நாள் மற்றவர்கள் பெருமையுடன் பார்க்கும் போது தான் ஒரு மதிக்கத்தக்க பணியை செய்து வருவதாக நினைவுக்கு வரும். இணைய வசவுகளுக்கு ஒரு நாள் V R S கிடைத்ததாக பெருமகிழ்ச்சி அடைவர். இது பற்றியெல்லாம் கவலையில்லாமல் நேர்மையாய் பணி செய்யும் ஆசிரியர்களும் உண்டு.

Representational Image
Representational Image

#அந்தக்காலம் அது அது..

ஊரில் உள்ள அனைவரும் அரசுப்பள்ளிகளில் பயின்ற காலம். நவீன தொழில்நுட்பங்கள், இலவச பொருட்கள் ஏதுமின்றி..சத்துணவு ஒன்றையே நம்பி சேர்ந்த காலம். படிக்கவில்லையெனில் ஆசிரியர் அடிப்பார், பெற்றோர்களின் கண்டிப்பு அத்தனையும் பயமாக தோன்றி.. நாளடைவில் பிள்ளைகளுக்கு பொறுப்பாய் தோன்றிய பொற்காலம். ஒழுக்கமே கல்விக்கு முதல் முகவரி தந்தது. அனைத்து ஆசிரியர்களும் நடந்தும், மிதிவண்டியிலும் வந்த நினைவு. காலை முதல் மாலை வரை ஆசிரியர் வகுப்பிலேயே தான் இருப்பார். விடுப்பு எடுத்தால் மட்டுமே பிற வகுப்பு ஆசிரியர் வந்து கூடுதலாய் பாடம் நடத்துவார்.

எந்தவித டெஸ்டுகளும் இன்றி ஆசிரியர்கள் முழுமையாக தம் அறிவை அர்ப்பணிப்புடன் பாடம் நடத்தினர். படிக்காத மாணவர்கள் கூட தினசரி வகுப்பிற்கு வந்து முடிந்த அளவு கல்வி கற்றனர. இடைநிற்றல் இருந்து வந்தது, தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் பள்ளிக்கு வர கூச்சப்பட்டு வேறு வேலைக்குச் சென்றனர். மதிப்பெண்ணுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. குறைவான பாடத்திட்டம் இருந்தாலும் நிறைவாக பயின்று அடுத்தடுத்த வகுப்பில் சுழல் முறை கலைத்திட்டம் மூலம் அனைத்தையும் சீராக கற்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

#2000க்குப் பின்

இரண்டாயிரமாவது ஆண்டில் இந்திய அரசால் அனைவருக்கும் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது.

6 முதல் 14 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி அளிக்கும் பொருட்டு இடைநிற்றலின்றி 2010ம் ஆண்டில் தொடக்க கல்வியை நிறைவு செய்ய திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் தான் அதிகளவு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

பள்ளிகள் புதுப் பொலிவு பெற்றன. மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன. இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் அதிகம் பணியமர்த்தப்பட்டனர். 6முதல் 8 வகுப்பு வரை பட்டதாரிகள் நியமிக்கப்பட்டு கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சி துவங்கப்பட்டது.

அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வந்ததே குழந்தைகளுக்கு பெரு மகிழ்வாய் இருந்தது.

Representational Image
Representational Image

நவீன தொழில் நுட்பப் புரட்சியில் பல ஆசிரியர்கள் கிராமப்புற மாணவர்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டினர்.தன்னார்வலர்களை பிடித்து கிராமத்துக்கு முன்னுதாரணமாய் இருந்து வருகின்றனர்.

#இன்றைய சவால்கள்

கொரொனா காலத்தில் அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை அதிகரித்தது. வேலையின்மை, நிதி நெருக்கடி, மாற்றுச்சான்றிதழ் இல்லாமலும் சேர்க்கலாம் எனும் அறிவிப்பு பெற்றோர்க்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது. அம்மாணவர்கள் பலரை இன்றளவும் பல அரசுப்பள்ளிகள் தக்க வைத்திருப்பது ஆசிரியர்களின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

கற்றல் இடைவெளியை குறைக்க ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர்.

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் திரைப்படத்தில் ஒரு காட்சி "கலைவாணரிடம் ஒருவர் வந்து நம் தெரு முனையில் இருக்கும் செல்லையா ஒரு பெண்ணிடம் தவறாக பழகுவதை கேள்விப்பட்டதாக கூறுவார். அதற்கு பதில் சொல்லும் கலைவாணர்

'உங்கள் சட்டைப்பையில் என்ன உள்ளது எனக்கேட்பார்' அதற்கு ரூபாய்களும், சில்லறைகளும், தாள்களும் உள்ளதாக சொல்லுவார். எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக சொல்லும்படியும் பார்க்காமல் சொல்லும்படியும் கூறுவார். அதற்கு விழிக்கும் அவரைப் பார்த்து உங்கள் பையில் உள்ளதைக் கூட கண்ணால் பார்க்காமல் சொல்ல முடியவில்லை பிறகெப்படி கண்டு விசாரிக்காமல் பிறரை குறைசொல்ல முடியும் என்பார். இது ஆசிரியர் பிம்பம் குறித்து பிறரின் மனநிலையை கூறலாம்

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

ஏதோ ஒரு காலத்தில் மதியம் ஆசிரியர் தூங்கினார், சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுகின்றனர், பிற தொழில் செய்கின்றனர், தனிவகுப்பு எடுக்கின்றனர் (இன்றும் ஒரு சிலர்) என்பதால் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் இந்த வரையறைக்குள் கொண்டு வருவது நியாயமற்றது.அப்படி செய்யாத ஆசிரியர்களையும் குற்றவாளிகள் போல் ஆக்குவது நியாயமற்றது. கொரொனா காலத்தில் பலர் பிள்ளைகளின் வீடுகளுக்கே சென்றும்,கோவிலில்,பொது இடத்தில் பாடம் நடத்தியதும் தான் இன்றைய இல்லத்தேடி கல்வியாக பரிணமித்துள்ளது.எந்த ஒரு ஆசிரியரையும் பெற்றோர்கள் எளிதில் தொடர்பு கொள்ளவும், கேள்வி கேட்கவும் முடியும்.

தமிழகத்தில் மூன்று வகையான பள்ளிகள் உள்ளன.ஐம்பது மாணவர்க்கு குறைவான ஈராசிரியர் பள்ளிகள்,அளவான குழந்தைகள் ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், மூன்றாவது பெருமளவு மாணவர்கள் குறைந்தளவு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள்.இதில் மூன்றாவதாய் சொல்லும் பள்ளிக்கூடங்கள் தான் துயர்மிக்கவை..வகுப்பறைக்கு எழுபது முதல் எண்பது வரை பாடம் நடத்துகின்றனர். நாள்தோறும் அரசு கேட்கும் புள்ளிவிபரங்கள், பயிற்சிகள்,மகப்பேறு விடுப்பில் உள்ள பிற வகுப்புகளை கவனிப்பது எனபல சுமைகள்.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகை சவால் நிறைந்தது. ஆல்பாஸ் என்பதால் இலவசங்கள் கொடுக்கும் நாளில் மட்டும் வந்து பிற நாட்களில் வருவதில்லை.ஆகவே ஆல்பாஸ் திட்டத்தில் அட்டெண்டன்ஸ் சேர்ப்பது அவசியமாகிறது.இது போக 14 வகையான இலவசப் பொருட்களை ஒவ்வொரு முறை சென்று எடுத்து வருவது போன்றவற்றால் கற்றல் இடைவெளி அதிகமாகிறது. தேவையற்ற பதிவேடுகள் இன்னும் சுமையை அதிகரிக்கிறது

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்

#விசிட்..விசிட்

ஆங்கிலேயர் காலத்தில் மலைப் பகுதியில் நுழைந்த புலியை பிடித்த மூன்று இளைஞர்களை பாராட்டிய கவர்னர் ஒவ்வொருவரும் விரும்பியதை கேட்க சொல்கிறார். முதலாமவர் இடமும், இரண்டாமர் சாலை அமைக்கவும் கோருகிறார். மூன்றாமவர் நீங்கள் எங்கள் கிராமத்திற்கு ஒரு வருடத்திற்குள் ஏதேனும் ஒரு நாள் வரவேண்டும் என்கிறார். ஏன் ஒரு வருடத்திற்குள் எனக்கேட்கும் கவர்னரிடம்.. நீங்கள் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தால் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருவார்கள், மருத்துவர், அரசு ஊழியர் தங்கள் பணிகளை நன்கு செய்வார்கள். ஒரு வருடத்தில் எங்கள் கிராமம் முன்னேறும் என்கிறார்.

இன்றைக்கு பள்ளி பார்வை என்பது இதற்கு நேர் மாறாக ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயம் செய்வதுபோல் சொல்லிக் கொண்டுதான் வருகின்றனர். இது எப்படி பார்வையாகும் என கல்வியாளர் கூறுகின்றனர். பணி செய்யாதவர்களை பிடிப்பது, அடிப்படை வசதிகளை ஆராய்வது போன்றவை இதன் மூலம் நோக்கமற்றதாகி விடுகிறது. எனவே பள்ளிப்பார்வைகள் சொல்லாமல் வரும்போதுதான் உண்மை நிலை அறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுக்க முடியும்.

#எதிர்பார்ப்புகள்

*அடிக்கக்கூடாது,திட்டக்கூடாது, மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடாது ஆனால் மாணவர்கள் நூறு சதவீதம் நன்கு கற்க வேண்டும்

*வருடத்தின் சில நாட்கள் வந்தாலும் மாணவருக்கு வந்தநாளில் முழு அறிவையும் போதிக்க வேண்டும்

*எப்படியாவது முப்பது மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் போராடுவது அவர்களுக்கு மட்டும் தெரியும்

*வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியில் வாக்காளரை வருடத்தில் நான்கு முறை சேர்க்க, நீக்க, அடையாள அட்டை பெற்றுத்தர முழு முயற்சியோடு முனைய வேண்டும்.

*தனியார் பள்ளிகளிலோ செண்டம் வாங்க வைக்க வேண்டும்.அதனை வைத்தே அடுத்த ஆண்டு ஊதியம். ஞாயிறு வேலை. எதிர்த்துப் பேசினால், சுணக்கம் காட்டினால் பணி நீக்கம் இப்படி எத்தனையொ வேதனைகள்.

  அரசுப் பள்ளி!
அரசுப் பள்ளி!

*பாடம் புகட்டுதல், மாணவர்களிடம் சிந்தனையை தூண்டுதல் போன்றவை இல்லாமல் கோச்சிங் வகுப்புகள் போலவே இன்றைய கல்வி முறை மாற்றிவிட்டது.

*கல்வி ஒன்றே மூலதனம் என்பதை மாணவர்கள் பொறுப்பு உணர்ந்து பயில வேண்டும்.

*70 பேருக்கு ஒரு ஆசிரியர், 100 பேருக்கு ஐந்து ஆசிரியர்கள் என இருக்கும் அவலம் போக்கி.. பணி நிரவலை தைரியமாக அரசு செய்ய வேண்டும்.புதிய பணியிடம் நிரப்பும் முன் செய்தாலே நிதிப் பற்றாக்குறை நீங்கும்.

*ஆசிரியர் சங்கங்கள் ஊதியத்திற்காக போராடுவது உங்கள் உரிமை. ஆனால் கல்வி நலன் சார்ந்த கோரிக்கைகளை முதன்மையாய் வைத்துப் போராடும் போதுதான் மக்கள் மத்தியில் உள்ள காழ்ப்புணர்ச்சி நீங்கும். அந்தக் கால ஆசிரியர்களின் புகழின் நிழலில் ஒதுங்காமல் தனித்துவம் மிக்க மரமாய் நிமிர்ந்து நிற்கலாம். இவையெல்லாம் இல்லையா என்றால் செய்கிறார்கள் ஆனால் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. அவ்வாறு அனைவரும் செயல்பட்டால் ஆசிரியர்களை ஒரு தினத்தில் மட்டும் பாராட்டாமல் வருடம் முழுக்கப் பாராட்டுவார்கள் மக்கள்.

-ஜெனிதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.