Published:Updated:

அன்னை சாமுண்டீஸ்வரிக்கு சக்தி யாகம்! | My Vikatan

Representational Image

தீயவர்களுக்கும் துர்க்குணம் உடையவர்களுக்கும் உக்கிர ரூபிணியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அன்னையாக சாந்த ரூபிணியாக இருந்து அருள் பாலிக்கிறார்..

அன்னை சாமுண்டீஸ்வரிக்கு சக்தி யாகம்! | My Vikatan

தீயவர்களுக்கும் துர்க்குணம் உடையவர்களுக்கும் உக்கிர ரூபிணியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அன்னையாக சாந்த ரூபிணியாக இருந்து அருள் பாலிக்கிறார்..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அன்னை பார்வதி தேவி எடுத்த அவதாரமே ஸ்ரீ சாமுண்டீஸ்வரி. ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மைசூரில் அவதரித்தாள். சாமுண்டீஸ்வரி எட்டு திருக்கரங்கள் உடையவள்.

அனைத்து கரங்களாலும் தீய சக்திகளை அழிக்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

மகிஷாசுரன் வதம் முடிந்ததும் தேவர்கள் அன்னையை சாந்தப்படுத்தினர். மார்க்கண்டேய மகரிஷி எட்டு கரங்களுடன் அன்னையின் திருவுருவத்தை வடிவமைத்து மைசூர் மலைப்பகுதியில் அமைத்தார். இதே கோலத்தில்தான் அன்னை இன்றும் நமக்கு காட்சி தருகிறார்.

தீயவர்களுக்கும் துர்க்குணம் உடையவர்களுக்கும் உக்கிர ரூபிணியாகவும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அன்னையாக சாந்த ரூபிணியாக இருந்து அருள் பாலிக்கிறார்..

"ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே

சக்ரதாரிணி தீமஹி

தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்"

இந்த ஸ்லோகத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்

காலை மாலை இரு வேளைகளும் வீட்டில் விளக்கேற்றி அன்னை சாமுண்டீஸ்வரியை வழிபட்டால் எதிர்ப்புகளும் தீயசக்திகளும் விலகிப்போகும்..

மைசூரில் ஆட்சி செய்யும் அந்த அன்னையை சிவபெருமான் வளர்ப்புத் தாயாக இருக்கும்படி செய்த இடம் தான் திருப்பூவனூர்.

சிவபெருமான் திருவிளையாடல்கள் பலவற்றை கேட்டு இருக்கிறோம். திரைப்படமாக பார்த்து இருக்கிறோம்.

அவர் சதுரங்கம் ஆடியதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டோம். சிவனடியார்கள், ஆன்மீகப் பெரியவர்கள் இவர்களெல்லாம் அறிந்திருப்பார்கள். பலருக்கு பிரதமர் அவர்கள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை துவங்க சென்னை வந்த போது ஆற்றிய உரையில் குறிப்பிட்ட பிறகு தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த தகவல் பரவிவிட்டது.

செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தற்போது பிரக்ஞானந்தா.

Representational Image
Representational Image

இளைஞர்கள் பலரை கவர்ந்த விளையாட்டு கிரிக்கெட்.

செஸ் விளையாட்டு சிவனே ஆடியிருக்கிறார் என்று தெரிந்த பிறகு பலருக்கும் ஒரு எழுச்சி ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் அவர்கள் குறிப்பிட்ட அந்த கோயில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் என்ற கிராமத்தில் உள்ளது.

ஐந்தாம் திருமுறையில் திருநாவுக்கரசர் இவ்வூர் கோயில் பற்றி பாடியுள்ளார்.

பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்

நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்

பாவ மாயின பாறிப் பறையவே

தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் ஒரு கோடி முறை போற்றிப் பாடுபவர் தம் பாவங்கள் சிதைந்து கெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனை விட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர். இப்பாடலின் பொருள் இதுதான்.

இறைவனின் கருணையால் பிள்ளையில்லாத தென்பாண்டி நாட்டு மன்னன் வசுசேனன் காந்திமதி தம்பதியருக்கு அன்னை உமையவள் குழந்தையாக சாமுண்டி அன்னை வளர்ப்பு தாயானாள். அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயர் சூட்டினான் மன்னன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய ராஜராஜேஸ்வரியை சதுரங்க விளையாட்டில் யாராலும் வெல்ல முடியவில்லை. விளையாட்டில் அவளை வெல்பவர்க்கே மணமுடித்து கொடுப்பேன் என்று அரசன் அறிவிக்க, பூவனூர் திருத்தலத்தில் இறைவனே சித்தர் வடிவில் வந்து சதுரங்கத்தில் வென்று அனைவருக்கும் காட்சி தந்தார்.

சதுரங்கத்தில் வென்று ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதால் இறைவன் 'சதுரங்க வல்லப நாதர்' என்ற திருநாமம் பெற்றார்.

இக்கோயிலில் சாமுண்டி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மாதந்தோறும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது.

ஆன்மீக வழியில் பயணிப்பவர்களுக்கும் தியானம் செய்பவர்களுக்கும் பௌர்ணமி இரவு உகந்தது. பௌர்ணமி அன்று நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாக இருக்கும். முழு நிலவாய் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் அதிர்வும் சக்தியும் வித்தியாசமாக இருக்கும். அதன் ஈர்ப்பு விசை பூமியின் மேல் பகுதிகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும். இது போன்ற இழுக்கும் சக்தி வேலை செய்யும் போது முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால் நமக்குள் இருக்கும் சக்தி இயல்பாகவே மேல் நோக்கி பயணம் செய்யும். ரத்த ஓட்டமும் பிராண சக்தியும் வெளி அதிர்வுகள் மாறி இருப்பதால் எப்போதும் போல் இல்லாமல் வேறு வகையாக ஓடத் தொடங்கும். தனி ஒரு மனிதனின் குணம் எப்படி இருக்கிறதோ அன்று அது மேம்படும்.

Representational Image
Representational Image

அன்றைய தினம் அவர்களின் சக்தி நிலை உயர்கிறது, விழிப்புணர்வு உணர்கிறது என்று பௌர்ணமியின் மகத்துவம் பற்றி ஈஷா சத்குரு விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பூவனூர் ஆலயத்தில் அன்னை சாமுண்டீஸ்வரியின் அருளால் அனைவரும் தங்கள் சக்தியை மேம்படுத்திக்கொள்ள சக்தி யாகம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு எதிரில் உள்ள யாக சாலையில் அதை நடத்துகிறார்கள்.

1942 ல் காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் இக்கோயிலில் 45 நாட்கள் தங்கியிருந்து அதி ருத்ர ஹோமம் நடத்தியுள்ளார்கள். அந்த அதிர்வுகள் இன்றளவும் கோயிலுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும். மேலும் சக்தி யாகம் தொடர்ந்து நடைபெறுவதால் அதன் வீரியம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.

கடந்த 09.10.2022 அன்று அந்த யாகம் நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள விசலூர் கும்பேஸ்வர சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கும்பத்தில் உள்ள நீருக்குள் தெய்வ சக்திகளை வரவழைக்க செய்வதை ஆவாகனம் என்று சொல்வார்கள். மாலை 6.00 மணிக்கு மேல் தொடங்கி 07.30 க்குள் பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பட்டு சாமுண்டீஸ்வரி சந்நிதியை வலம் வந்து பின்னர் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

"ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ஸ்வாஹா...

சக்தி வாய்ந்த சாமுண்டீஸ்வரி மந்திரம் இது. இந்த மந்திர ஒலியை கேட்டாலே நமக்குள் ஒரு புது சக்தி உண்டாகும்.

கெட்டவை விலகி ஓடிவிடும். சங்கடங்கள் தீரும்.

அன்னை சாமுண்டீஸ்வரியை சரண் அடைந்து வழிபட்டு நமது துயரங்களை போக்கிக்கொள்ள பௌர்ணமி தோறும் நடக்கும் இந்த யாகத்தில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் உபயதாரர்கள் மூலம் இந்த யாகம் நடைபெற்று வருகிறது. வைரஸ் தாக்குதலில் நிலைகுலைந்து போன நாம் இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறோம். இருமல் காய்ச்சல் என்று ஏதோ ஒரு வடிவத்தில் அது அவ்வப்போது வந்து பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலில் நமக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. சக்திவாய்ந்த சக்தி மந்திரங்கள் மூலம் அதை நாம் உயர்த்திக் கொள்ளலாம், அதை பௌர்ணமி அன்று செயல்படுத்தும் போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த கோவிலில் நடக்கும் முக்கியமான விசேஷங்கள் அனைத்தையும் முன்னின்று கவனித்து சிறப்பாக செயல்படுத்துகிறார் பூவனூர் திரு.தியாகராஜன் அவர்கள்.

பாரம்பரியம் மிக்க ராசு முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர். திரு ராசு முதலியார் அவர்கள்தான் இக்கோயிலின் ராஜகோபுரம், மண்டபங்கள், சோமாஸ்கந்தர், நடராஜர் சுவாமிகளுக்கு விமானத்துடன் கோயில் கட்டினார்.

இந்த தகவல் 1961 ஆண்டு வெளியான 'பூவனூர் தல வரலாறு' புத்தகத்தில் உள்ளது. தற்போது அவரது திரு உருவம் சாமுண்டீஸ்வரி சன்னதியில் பதிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அர்ச்சகர் திரு.கௌரி சங்கர் குருக்கள். ஒரு முறை சென்று யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். முடிந்தால் நீங்களே உபயதாரராக மாறி அனைவருக்கும் நல்லது செய்யுங்கள்.

-திருமாளம் எஸ். பழனிவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.