இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் போன், டிவி போன்ற சாதனங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர், அதிக நேரம் மொபைல் திரையைப் பார்ப்பதில் செலவிடுகின்றனர். இது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நிரந்தர கண் சேதம் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக இருந்தாலும், அதிக நேரம் திரையைப் பார்ப்பதில் செலவிடுவது கண்களை குறிப்பிட்ட அளவு பாதிக்கும். அத்துடன் தலைவலி, கண் சோர்வு, உலர் கண்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

புத்தகம் அல்லது பத்திரிக்கையைப் படிப்பதைவிட மொபைல் / கணினித் திரையில் படிப்பது கண்களை பாதிக்கும். காரணம், ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையைப் படிப்பதைவிட, கணினித் திரையை பார்க்கும்போது மக்கள் குறைவாகவே கண் சிமிட்டுகிறார்கள். டிஜிட்டல் திரைகளில் ஒருவர் கவனம் செலுத்தும்போது, ஒரு நபரின் கண் சிமிட்டும் வீதம் பாதியளவு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை குறையலாம். அத்துடன் அவர்களின் கண்கள் வறண்டும் போய் விடும். மேலும், பலர் திரைகளை சரியான தொலைவில் வைத்துப் பார்க்காமல், கண்களுக்கு மிக அருகில் வைத்து பார்க்கும் பழக்கம் வைத்துள்ளனர்.
இதுபோன்று அதிக நேரம் மொபைல், லேப்டாப் திரையைப் பார்ப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகளில் முக்கியமான ஒன்று, கண்கள் உலர்ந்து போவது. இது கண்எரிச்சலை உண்டாக்கும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS*கண்களின் வறட்சி, எரிச்சலைத் தவிர்க்க, மொபைல் பார்க்கும் போதும், லேப் டாப்பில் வேலை செய்யும் போதும், கவனம் வைத்து கொண்டு அடிக்கடி கண்களை இமைக்க முயல வேண்டும்.
மேலும் மொபைல் திரையை மிகவும் அருகில் வைத்துப் பார்ப்பது கண்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் நெருக்கமாக இருக்கும் பொருட்களைப் பார்க்க கண்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். கணினி திரை அல்லது வேறு திரைகளை குறைந்தபட்சம் 25 அங்குலம் / முழங்கை நீளம் தள்ளி வைத்தே பார்க்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் மக்கள் ஸ்மார்ட்போன்களை கண்களில் இருந்து 8 முதல் 12 அங்குல இடைவெளியில் வைத்திருப்பார்கள். இப்படி அருகில் வைத்திருப்பது கண் சிமிட்டும் விகிதத்தைக் குறைக்கிறது. ஸ்மார்ட் போனை உங்கள் கண்களில் இருந்து குறைந்தது 20 அங்குல தூரத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது.

*நாம் பயன்படுத்தும் மொபைல்/லேப்டாப்/கணினி -இன் திரை, சுற்றியுள்ள வெளிச்சத்தைவிட குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரகாசமாக இருந்தால், கண்கள் பெரிதும் முயற்சி செய்து பார்க்க வேண்டியிருக்கும். அறையில் வெளிச்சத்தை சரிசெய்து, திரையில் கான்ட்ராஸ்ட்டை உயர்த்தி உங்கள் பார்வைக்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்வது நல்லது. தலைக்கு மேல் உள்ள விளக்குகள் அல்லது ஜன்னல்களில் இருந்து வரும் வெளிச்சம் டிஜிட்டல் திரையில் பட்டு கண்ணை கூச வைக்காத வகையில், Brightness-ஐ முறைப்படுத்த வேண்டும் . கண்ணாடித் திரைகளில் இருந்து வெளிப்படும் கண்ணை கூச வைக்கும் ஒளி கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட பகுதியில் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், 'மேட் ஸ்கிரீன் ஃபில்டரை' பயன்படுத்தலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
*ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும், டிஜிட்டல் திரையிலிருந்து 20 விநாடி இடைவெளி எடுத்து 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்க்கவும். இதற்கான நினைவூட்டலுக்காக, ஸ்மார்ட்போனில் அலாரம் வைத்துக்கொள்ளலாம்.
*கைபேசி, பிற திரைகளில் வெளியிடப்படும் நீல நிற ஒளி உடலின் இயற்கையான தூக்க - விழிப்பு சுழற்சியை பாதிக்கலாம். எனவே, தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்னதாக மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. நீல நிற ஒளி வெளியிடப்படுவதைக் குறைக்க சாதனங்கள், கணினிகளில் 'ரீட் மோட்' அல்லது 'நைட் விஷன்' முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் திரையில் அதிக நேரம் செலவிடுவது அதிகரித்துள்ளது. ஏனெனில் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாறியுள்ளன. மேலும் இது தொடரவும் போகிறது. இதிலிருந்து முழுமையாகத் தப்பிக்க முடியாது. அதிக நேரம் திரையைப் பார்ப்பதிலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்கு செய்யக்கூடிய ஒரே விஷயம், குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனைகளுடன் அதிக நேரம் திரையைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும் குறைக்கவும் மேலே குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றுவதும்தான்.
-டாக்டர். ஸ்ரீகாந்த் ராமசுப்ரமணியன், MBBS, MS (Ophthal), MRCS (Edinburgh), FICO, கண் மருத்துவர், அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.