Published:Updated:

தா..!

Representational Image

தா தா என்று கேட்ட விஷயங்களும் தானாகவே வந்த விஷயங்களும் நிறைய இருக்கின்றன. அவைகளைப் பற்றி பார்ப்போம்..

தா..!

தா தா என்று கேட்ட விஷயங்களும் தானாகவே வந்த விஷயங்களும் நிறைய இருக்கின்றன. அவைகளைப் பற்றி பார்ப்போம்..

Published:Updated:
Representational Image

`தா' என்று சொல்லும் போதே யாரிடமோ எதையோ கேட்க நினைக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனாலும் தா தா என்று இரண்டு முறை சொன்னால் நினைவில் வருவது நமது தாத்தாக்கள்தான். இரண்டு தலைமுறை மூன்று தலைமுறை நான்கு தலைமுறை பார்த்த தாத்தாக்கள் உண்டு.

Also Read

அட..!

இந்தியாவின் முது பெரும் மனிதர்... பெயரிலேயே தா தா என்று ஆரம்பிக்கும் 'தாதாபாய் நௌரோஜி அதில் பிரதானமாக அமர்ந்திருப்பவர். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர். அவர் எழுதிய 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் கொடுங்கோலாட்சியும்' புத்தகத்தில் இந்தியாவின் வளங்களையும் வரி நிதி ஆதாரங்களையும் வெள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதைப் பற்றி ஆதாரங்களோடு விளக்கி சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை தந்தார். 'தா' என்று யாரும் கேட்காமலே அவராகவே தந்தார்.

தா தா என்று கேட்ட விஷயங்களும் தானாகவே வந்த விஷயங்களும் நிறைய இருக்கின்றன. அவைகளைப் பற்றி பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Dadabhai naoroji
Dadabhai naoroji

'தா' கம்..

தாகம் என்றதும் பாரதி பாடிய 'என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்... என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' - உணர்ச்சிகரமான இந்த விழிப்புணர்வு பாடலே நினைவுக்கு வரும். அவரின் பாடல்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தன.

தா தா சுதந்திரம் தா தா என்று மக்கள் முழங்க ஆரம்பித்தார்கள். மகாத்மாவின் தலைமையில் போராட்டங்கள் தொடர்ந்து சுதந்திர தாகம் மட்டும் தீர்ந்தது. தண்ணீர் தாகம் இன்னும் தீரவில்லை. கோடை வந்தாலே சென்னையில் பிரதானமாகவும் மற்ற இடங்களில் ஓரளவு மோசமாகவும் தண்ணீர் பஞ்சம் வரும்.

மழைக்காலங்களில் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கும். முறையான வடிகால்கள் இல்லாத காரணத்தாலும் பல ஏரிகள் காணாமல் போன காரணத்தாலும் கோடையில் வறட்சி ஏற்பட்டு மக்கள் காலி குடங்களோடு தண்ணீருக்காக வருடா வருடம் அலைகிறார்கள். இதனை மையமாக வைத்து கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகம்தான் 'தண்ணீர்...தண்ணீர்... வெற்றி பெற்ற இந்த நாடகம் பாலசந்தர் இயக்கத்தில் திரையில் வெளியானது.

தானாக அது தீராது. அரசாங்கம்தான் தீர்க்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'தா' வரங்கள்!

தா என்பது வரம் ஆக மாறி 'தாவரம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரங்கள் கேட்காமலே நமக்கு பல வரங்களை தினசரி தருகின்றன. மரம், செடி, கொடி, புற்கள் இவைகள் அனைத்தும் ஒன்றாக சேர்த்தே 'தாவரம்' என்று அழைக்கப்படுகிறது. அசோகர் சாலைகள் தோறும் மரங்களை நட்டார் என்று சரித்திரப் பாடத்தில் அனைவரும் படித்துள்ளோம். மரங்கள் நிழலைத் தருகின்றன. உண்பதற்கு சத்துள்ள காய் கனிகளை தருகின்றன. செடியில் பூக்கும்பூக்கள் சுப நிகழ்வுகள், கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுகின்றன. ஆவாரம் பூ மருத்துவ குணமுடையது.

'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..?' என்று ஒரு பழமொழியே உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப் பெரிய அளவில் பலனளிப்பது ஆவாரம் பூவே.

Garden
Garden
Peter H from Pixabay

ரோஜா காதலுக்கு மரியாதையை எப்பவோ கொடுத்து விட்டது. பிப்ரவரி 14 அன்று ரோஜாவுக்கு காதலர்கள் மரியாதை கொடுப்பார்கள். பூக்களில் இருந்து தேனை எடுத்து கூடுகட்டும் தேனீக்கள். அதனை கவனமாக எடுத்து தருகிறார்கள், நாம் வாங்கி பயனடைக்கிறோம்.

'மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன், மலர்களிலே பல மணம் கண்டேன் அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்..' - கண்ணதாசன் போற்றிப் பாடியதை மறக்க முடியுமா.?

தேக்கு மரம் , சந்தன மரம், செம்மரம் இவைகள் நமக்கு கிடைத்த வரங்கள்.

'மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்..' பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த வாசகங்கள் நிச்சயம் இருக்கும். தாவரங்கள் உயிருள்ளவைகள்தான். ஒரு பூ அருகில் சென்று நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லிப் பாருங்கள் அது மறுநாள் இன்னும் மகிழ்ச்சியோடு பெரிதாக மாறி இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'தா' லாட்டு ..

நாம் அனைவருமே தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள்தான். என்ன ஒரு வேறுபாடு நம் தாத்தா இனிமையான தாலாட்டை அவரின் அம்மாவின் புடவையில் கட்டிய தூளியில் படுத்தபடி கேட்டு இருப்பார். அப்பாவும் அதே போலத்தான். நாம் பெரம்பிலான தொட்டியில் படுத்து 'ஜோ ஜோ..ஜோஜோ' என்ற பாட்டை கேட்டு இருப்போம்.

இனிமையான தாலாட்டை எனக்குத் தா என்று குழந்தை கேட்காமலே தாய் தரும் இதுவும் ஒரு வரமே. இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது 'செல்போன்'களே... அவைகள் என்ன தவம் செய்தனவோ இப்படி ஒரு பாக்கியம் கிடைக்க.
திருமாளம் எஸ். பழனிவேல்

நிச்சயம் அனைவரும் 'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்...' - இளைஞன் ஆன பிறகும் தனது மகனை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் எஸ்.வரலட்சுமியின் இனிமையானப் பாடலை கேட்டு இப்படி ஒரு அம்மா நமக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டு இருப்போம்.

Representational Image
Representational Image
iStock

பின்னே, 'என்னென்ன தேவை உன் உள்ளம் மகிழ்ந்திட என்பதை சொல்லிடு... என்றும் இல்லையேனும் சொல்லை நீ சொல்ல நான் அதை கேட்பதை மாற்றிவிடு' -அற்புதமான வரிகளை எழுதியிருப்பார் புலவர் புலமைப்பித்தன். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அம்மாவான வரலட்சுமி மகனாக நடித்த எம்.ஜி.ஆர். அவர்களை விட சின்னவர்.

எத்தனை வயசு ஆனால் என்ன மகன் தாய்க்கு என்றும் குழந்தைதான் என்பது ஆணித்தரமாக அப்படத்தில் சொல்லப்பட்டு இருந்தது. இனிமையான தாலாட்டை எனக்குத் தா என்று குழந்தை கேட்காமலே தாய் தரும் இதுவும் ஒரு வரமே. இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது 'செல்போன்'களே... அவைகள் என்ன தவம் செய்தனவோ இப்படி ஒரு பாக்கியம் கிடைக்க.

'தா' வணி..

12 லிருந்து 15 வயதுக்குள் பெண்களுக்குள் உடல்
ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். அப்போது அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக வந்து சேர்வதுதான் இந்த தாவணி. தனது பேத்தி தாவணி அணியும் நிலைக்கு வரும் போது, ``எங்க ஆத்தாவ என் குலசாமிய பராசக்தியை பாக்கிறது போல இருக்கு''-ன்னு அகம் மகிழ்ந்து சொல்லும் கிராமத்து தாத்தாக்கள் இன்னும் இருக்கிறார்கள்.

பாரம்பரிய திருவிழாக்கள் திருமணங்கள் என்று வரும்போதுநகரங்களில் இருப்பவர்கள் தாவணி அணிந்து கொள்ள நினைக்கிறார்கள். பொன் நகைகள் போல தாவணியும் பெண்களுக்கு அழகு சேர்க்கும் அணிகலன் தான்!

காலம் 'தா'னாகவே அவர்களுக்கு தரும் பரிசுகளில் தாவணியும் ஒன்று.

Traditional outfit
Traditional outfit
Pexels

'தா'க்கம்!

"திடீரென்று நடக்கும் சில அரசியல் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போர், இவைகளில் இருந்து உருவாகுவதே 'தா' க்கம் என்ற வார்த்தை.. அதிகம் பாதிப்புக்குள்ளாவது பங்குச்சந்தைகளே. இன்று தினமும் உயர்ந்து கொண்டு இருக்கும் பெட்ரோல் டீசல் விலைகளுக்கு ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த மோதல்தான் காரணம் என்று சொல்லி சமாளிக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் 19 தாக்குதலால் உலகமே நிலைகுலைந்து போனது. மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். 'தா' க்கம் தானாகவே உருவாகுவது. அதில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன. கவுண்டமணி செந்தில் காமெடி, வடிவேல் காமெடி இவைகள் நம்மை தாக்கும் போது நம்மிடம் உள்ள இறுக்கம் தொலைந்து போய் மனம் லேசாகி விடுகிறது. உடல் ஆரோக்கியமடைகிறது.

'தா' மதம்!

"இந்த மதத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இதற்கென்று கொடி, தலைவர்கள் கிடையாது. நாமே தலைவர்கள் நாம் வகுப்பதே கொள்கைகள். இதை ஆங்கிலத்தில் 'BETTER LATE THAN NEVER' என்று சொல்வார்கள். அவ்வள-வு சிறப்பு பெற்றது இந்த 'தா' மதம். பெரும்பாலும் அரசுத்துறை, வங்கி, காப்பீடுத்துறைகளில் இம்மதம் பரவலாக பரவிக்கிடக்கும். எந்தக்காலத்திலும் இதை ஒழிக்க முடியாது. பயணிகளின் கனிவான கவனத்திற்கு சென்னை செல்லும் விரைவு ரயில் 10 நிமிடம் தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது என்று முக்கிய சந்திப்புகளில் அழகான பெண் குரல் ஒன்று தினமும் அறிவித்துக் கொண்டே இருக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வரையில் 'தா' மதம் பெரிய அளவில் சபிக்கப்படாமல் இருக்கும்.

Representational Image
Representational Image

'தா' என்ற பெயரில் பட்டுக்கோட்டை பிரபாகர் அழகான கிரைம் நாவல் ஒன்றை சுமார் 30 வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டார். அது வரவேற்பை பெற்றதும் 'மீண்டும் தா' என்று இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எழுதினார். தா என்று கோரிக்கை வைத்தார் மனசுக்குள்...கற்பனை நதியாக பெருகி வந்து கோரிக்கையை நிறைவேற்றியது. நிம்மதியைத் தா சந்தோஷத்தை தா வேண்டிய அளவு பணத்தை தா என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருக்கிறோம். பெற்ற 'தா' வை திருப்பித் தர வேண்டும். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நிம்மதியை 'தா' ராளமாக தரலாம். முடிந்ததை தானமாக இல்லாதவர்களுக்கு தரலாம். 'தா' வும் மனதை ஒரு நிலைப்படுத்தி எல்லாவற்றையும் செய்யலாம் இனிமையாக. 'தா' ய்மையை போற்றி பெருமைப்படுத்த வேண்டும். 'தா' ரம் மனம் கோணமல் நடக்க வேண்டும்.

'தாயா தாராமா' ன்னு பட்டிமன்றம் நடத்தக்கூடாது. அதை நடத்தி நம்மை மகிழ்விக்க சாலமன் பாப்பையா அவர்கள் உள்ளார்கள். இன்னும் இனிமையான தலைப்பை கண்டுபிடித்து எங்களுக்கு சந்தோஷத்தை 'தா'ருங்கள் 'தா' ருங்கள் என்று கேட்போம். ஒரு 'தா' ய் மக்கள் நாம் என்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்.

-திருமாளம் எஸ். பழனிவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism