Published:Updated:

வாழும் வள்ளுவம்!

அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்

உலகப் புகழ்பெற்ற திருக்குறளை பற்றி எழுத வேண்டுமென்றால் பக்கங்கள் பத்தாது. அத்தகைய சிறப்பான திருக்குறள் குறித்த சிறு கட்டுரையே இது.

வாழும் வள்ளுவம்!

உலகப் புகழ்பெற்ற திருக்குறளை பற்றி எழுத வேண்டுமென்றால் பக்கங்கள் பத்தாது. அத்தகைய சிறப்பான திருக்குறள் குறித்த சிறு கட்டுரையே இது.

Published:Updated:
அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

'ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்றால் இரண்டு மரக்குச்சிகளையும் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாகும். நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி என்றால் நாலடியாரையும், திருக்குறளையும் படித்தால் சொல் உறுதியாகும்.

கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்த ஜி.யு.போப். திருக்குறள், நாலடியார், ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

இன்றைய தேதியில் உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலாக பைபிள் என்றுள்ள நிலையில், அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளதாக இரண்டாம் இடத்தில் உள்ளது நமது திருக்குறளே. இப்படியாக உலகப் புகழ்பெற்ற திருக்குறளை பற்றி எழுத வேண்டுமென்றால் பக்கங்கள் பத்தாது. அத்தகைய சிறப்பான திருக்குறள் குறித்த சிறு கட்டுரையே இது.

நான் திருக்குறளை படிக்கும் போதெல்லாம் சொல்ல முடியாத அளவில் வியப்பில் ஆழ்கிறேன். ஆம்.. திருக்குறளுக்கு இணையான நூல் இதுவரை இல்லை , இனியும் வரப் போவதில்லை என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது. இவ்வையகத்து மக்களால் 'வேதங்கள் ' என்று கூறப்படும் நூல் வரிசைகளில் இல்லாத கருத்துச் செறிவும், சிந்தனையும் நிரம்பிய நூல் திருக்குறள். இவ்வுலக மக்கள் வேதங்கள் என படிக்கும் நூல்கள் பொதுவாக மனிதன் சோர்வடையும் போதும், நெறி தவறும் பொழுதும் தன்னம்பிக்கையை ஊட்டுகின்ற வகையில் கருத்துக்களை தருகின்றன.

பிராயச்சித்தம் என்ற பெயரில் நல்வழிப்படுத்த முயல்கின்றன. சமயங்களின் வேதநூல்கள் மனித வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் அலசிக் கூறுகின்றனவா என்றால், இல்லையென்றே கூறலாம்.

திருக்குறள்
திருக்குறள்
Feswa

அதே நேரத்தில் திருக்குறளில் கூறப்படாத கூறுகள் எதுவும் இல்லையென்றே கூறலாம். வணங்குவது,வாழ்த்துவது, வாழ்வது, பேசுவது, உண்பது, உழைப்பது, காதல் கொள்வது, ஊடல் புரிவது, உண்மை பகர்வது, உழவு செய்வது, வான்மழை பெய்வது, வாழ்க்கை நலம், அரசு திட்டமிடல் என நூற்று முப்பத்தி மூன்று அதிகாரங்களில் மனித வாழ்வை குறளாக வடித்துள்ளார். திருக்குறளுக்குள் நுழைந்தவுடன் உள்ள அதிகார வரிசையினை கண்டாலே மனித வாழ்வின் அவசியமான அங்கங்களை அழகுற வரிசைப்படுத்தி இருப்பார்.

கடவுள் வாழ்த்தென துவங்கும் அதிகார வரிசை அடுத்த அதிகாரமே வான் சிறப்பென வான் மழையின் அவசியமான பங்களிப்பை கூறுவதாக அமைந்திருக்கும். மூன்றாவதாக நீத்தார் பெருமையென நமது முன்னோர்களை வணங்குதல் தொடர்ந்து

அறன் வலியுறுத்தல்

இல்வாழ்க்கை

வாழ்க்கைத் துணை நலம்

மக்கட்பேறு/புதல்வரைப் பெறுதல்

அன்புடமை

விருந்தோம்பல்

இனியவை கூறல்

என அமைக்கப்பட்டுள்ள அதிகார வரிசையே வாழ்வியல் சிந்தனைகளின் அவசியமான கூறுகளின் வரிசையே வாழ்வியலை வரையறை செய்யும் விதமான வரிசையாக அமைந்து இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வள்ளுவரின் திருக்குறளை காணும் போதெல்லாம், இப்போதும் நான் வியப்பது ஒன்றுதான். ஒரு மனிதன் தன்னுடைய ஒரு பிறவியில் வாழ்வொன்றையே பிரதானமாக வாழ்ந்து, அந்த வாழ்வின் உண்மையான கருத்துக்களை உணர்வுப்பூர்வமாக உணர்கையில் அனைவருடைய வாழ்வும் முடிந்து போய் விடுகிறது.

இப்படியான வாழ்வில் வாழ்வின் அனைத்துவிதமான பக்கங்களையும் புரிந்து, உணர்ந்து, உணர்வுப்பூர்வமாக உலகிலுள்ள மனிதர்கள் கற்றறியும் வகையிலான எழுதி முடிப்பது என்பது எத்தனை பெரிய அசாத்தியமான செயல். இந்த உலகிலுள்ள மக்களால் வேத நூல்கள் என கொண்டாடப்படும் நூல்கள், மனித வாழ்வின் முக்கியமான ஒன்றான இல் வாழ்க்கை பற்றி திருக்குறளை போன்று அழகுற எடுத்துக் கூறி உள்ளதா? வாழ்வியலின் இன்பங்கள், துண்பங்கள், சுவையூட்டும் வழிமுறைகள், குறை தீர்க்கும் வழிமுறைகள் என எல்லாம் கூறிடும் வகையில் உள்ள திருக்குறளே இவ்வுலகின் சிறந்த வேதநூல் என்பேன் நான்.

முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் வான் புகழ் வள்ளுவன் சிலையினை வானுயர அமைத்து உள்ள நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பான நவயுக நிதி தாக்கலின் போதும்,


"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு."


என்ற வள்ளுவரின் குறளோடு தாக்கல் செய்யப் படுவதே காலம் கடந்தும் வாழும் வள்ளுவத்தின் வரலாறுக்குச் சான்று.


இந்த உலகின் நோபல், ஆஸ்கர், புலிட்ச்சர், கின்னஸ், பாரதரத்னா, ராமன் மகசசே என எண்ணற்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. உலகின் உயர்ந்த பரிசாக "வான் புகழ் வள்ளுவர் " பெயரிலான ஒரு பரிசினை நிறுவி வழங்கப்பட வேண்டும் உலகிலுள்ள மக்களுடைய வாழ்வியலாக வள்ளுவம் இரண்டறக் கலந்திருக்க வேண்டுமென்பதே எனது பேராவல்.

- வீ.வைகை சுரேஷ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism