Published:Updated:

நல்லகண்ணு ஐயாவாக யார் நடிச்சா நல்லாருக்கும்?| My Vikatan

தோழர் நல்லகண்ணு

அத்தகு மேன்மை குணங்கள் கொண்ட நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக எடுத்தால் யார் நடிக்கலாம் என்ற கேள்வி சமீபத்தில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

நல்லகண்ணு ஐயாவாக யார் நடிச்சா நல்லாருக்கும்?| My Vikatan

அத்தகு மேன்மை குணங்கள் கொண்ட நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக எடுத்தால் யார் நடிக்கலாம் என்ற கேள்வி சமீபத்தில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

Published:Updated:
தோழர் நல்லகண்ணு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

2022-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் உயரிய விருதான "தகைசால் தமிழர் விருது" கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். நல்லகண்ணு ஐயாவுக்கு வழங்கப்பட்டது. விருதுடன் சேர்த்து பத்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக தமிழக அரசு சார்பில் முதல்வர் வழங்க அந்த தொகையுடன் 5000 சேர்த்து திருப்பி தந்து அந்தப் பணத்தை தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார் தோழர் நல்லகண்ணு!. அவரது அச்செயல் வரவேற்பும் விமர்சனமும் பெற்றது.

அத்தகு மேன்மை குணங்கள் கொண்ட நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கைப் பயணத்தை திரைப்படமாக எடுத்தால் யார் நடிக்கலாம் என்ற கேள்வி சமீபத்தில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலோனோர் "பிரபல" நடிகர்களை தான் தங்களது விருப்பமாக கூறினர். அப்போது "ஜெய்பீம்" படத்தில் ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டன் நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கைப் பயண படத்தில் நடித்தால் நன்றாக இருக்குமென தோன்றியது.

மணிகண்டன்
மணிகண்டன்

பன்முக கலைஞர் என்று மக்களால் அங்கீகரிப்பட்ட மணிகண்டன் 2021 ஆம் ஆண்டின் டாப் 10 நம்பிக்கை இளைஞர்களில் ஒருவராக ஆனந்த விகடன் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி எளிய மக்களின் உணர்வுகளை நன்கு உள்வாங்கிக் கொள்ளக்கூடியவராகவும் தனக்கு கிடைத்த மேடைகள் அனைத்திலும் எளிய மக்களின் வலிகளை பதிவு செய்யக் கூடியவராகவும் இருக்கிறார்.

"டீக்கடை தாட்ஸ்" என்கிற யூடியூப் சேனலில் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் எழுதி இயக்கம் செய்த மணிகண்டனின் ஆர்வத்தையும் சிந்தனையையும் பார்த்து இயக்குனர் பா.ரஞ்சித் "காலா" படத்தில் லெனின் என்கிற "சிவப்புச்சட்டை நாயகன்" கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார். அந்தக் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி "குருதிப்புனல்" படத்தை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு விக்ரம் வேதா படத்திற்கு மணிகண்டன் எழுதிய வசனம் பெரிதாகப் பேசப்பட்டது. அதை தொடர்ந்து "சில நேரங்களில் சில மனிதர்கள்", "ஜெய்பீம்" உள்ளிட்ட படங்களுக்கும் அவரால் எழுதப்பட்ட வசனங்கள் கவனிக்கப்பட்டன. பலகுரல் கலைஞர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், நடன கலைஞர் (இந்தியா பாகிஸ்தான் படத்தில் ஒரு பாடலில் நடனமாடியிருப்பார்) என்று துடிப்பான பன்முக கலைஞராக இருக்கும் இவரை நல்லகண்ணு ஐயா கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்க்க முடிகிறது. உயரம், முகச்சாயல், நிறம், சிந்தனை என அனைத்திலும் ஒன்றிப்போகிறார்.

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன், வெற்றிமாறன், த.செ. ஞானவேல் இன்னும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக கருதப்படுபவர்களில் யாரேனும் நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கைப் பயண படத்தில், நம்ம ராஜாக்கண்ணுவை நாயகனாக்கி படமாக எடுத்தால் அது தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்ட மிக முக்கியமான படைப்பாகவும் வளரும் தலைமுறையினரை நல்வழியில் நடைபோட வைக்கும் உன்னத படைப்பாகவும் இருக்குமென உறுதியாக நம்பலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.