Published:Updated:

தைராய்டு சுரப்பியின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

முதுமையில் தைராக்சின் நீர் குறைவாகச் சுரப்பதால் மிக்ஸ்சோடிமா (Myxoedema) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோய் மெதுவாக உடலைத் தாக்குவதால், முதியவரால் இதை எளிதில் கண்டு கொள்ள முடிவதில்லை.

தைராய்டு சுரப்பியின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

முதுமையில் தைராக்சின் நீர் குறைவாகச் சுரப்பதால் மிக்ஸ்சோடிமா (Myxoedema) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோய் மெதுவாக உடலைத் தாக்குவதால், முதியவரால் இதை எளிதில் கண்டு கொள்ள முடிவதில்லை.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நமது உடலில் சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சுரக்கும் நீர் (hormones) நேரடியாக இரத்ததுடன் கலந்து, உடல் இயக்கத்திற்குத் தேவையான வேலைகளை செய்கிறது. அவை நாளமில்லாச் சுரப்பிகள் எனப்படுகின்றன. அவற்றுள் பிட்யூட்டரி, கணையம், தைராய்டு ஆகிய சுரப்பிகள் மிகவும் முக்கியமானவை.

தைராய்டு சுரப்பி “தைராக்சின்” எனும் நீரைச் சுரக்கிறது. இந்த நீர் நம் உடலில் உள்ள செல்களுக்குச் சென்று அது சரியாக செயல்பட உதவுகிறது. அதாவது, ஒரு மோட்டார் வாகனத்துக்கு பெட்ரோல் எப்படித் தேவையோ அது போல மனித உடலுக்கு தைராக்சின் அவசியம்.

தைராய்டு சுரப்பி தைராக்சின் நீரை மிகுதியாகச் சுரந்தால் “தைரோடாக்சிகோஸிஸ்” என்னும் தொல்லையும், குறைவாகச் சுரந்தால் "மிக்ஸ்சோடிமா" என்னும் தொல்லையும் ஏற்படும்.

 பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதுமையில் தைராக்சின் நீர் குறைவாகச் சுரப்பதால் மிக்ஸ்சோடிமா (Myxoedema) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோய் மெதுவாக உடலைத் தாக்குவதால், முதியவரால் இதை எளிதில் கண்டு கொள்ள முடிவதில்லை. இந்த நோயின் பல தொல்லைகள் முதுமையின் விளைவாக இருப்பது போலவே தோன்றும். உதாரணம்: உடல் சோர்வு, மந்த நிலை, மனச் சோர்வு, சதை வலிமை இழத்தல், மலச்சிக்கல், காது கேளாமை.

இந்தத் தொல்லைகள் எல்லாம் முதுமையில் எளிதில் வரக்கூடியவையே. அதனால், இவற்றை வைத்துக் கொண்டே ஒருவருக்கு மிக்ஸ்சோடிமா இருப்பதாகக் கூற முடியாது. மிக்ஸ்சோடிமா தொல்லையும் இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பரிசோதனை செய்தால், இந்த நோயை எளிதில் கண்டறிந்து, ரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிக்ஸ்சோடிமா நோயின் அறிகுறிகள்

இந்த நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக வரும். உடல் சற்ற பருமன் அடையும். தோல் கடினமாகவும் வறட்சியாகவும் மாறும். வேர்வையும் குறையும். நாக்கு சற்று தடித்துக் காணப்படும். அதனால் பேச்சு கரகரப்பாக இருக்கும். மந்த நிலை உருவாவதால் எல்லா வேலைகளையும் மெதுவாகச் செய்வார்கள். கை, கால்களில் மரத்த உணர்ச்சியும், நடை தள்ளாடுவதும் ஏற்படும். இவர்கள் குளிர்காலத்தில் குளிரைத் தாங்க முடியாது. முகமும் பருத்துக் காணப்படும். கை, கால் தசைகளில் இறுக்கமான பிடிப்பும் தோன்றும். மூட்டுவலியும், மலச்சிக்கலும் வர அதிக வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதயம் வமை இழத்தல் போன்ற தொல்லைகள் வரலாம்.

இந்த நோய் மூளை, நரம்பு, காது, தொண்டை, குடல், இதயம், தோல் முதலிய உறுப்புகளைத் தாக்குவதால், இந்த நோய்வாய்ப்பட்டவர்கள் பல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை.

இந்த நோயை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும், உதாரணம் T3, T4. TSH. கழுத்து பகுதியில் தைராய்டு கட்டி வீக்கம் இருந்தால் அதை கண்டறிய ஸ்கேன் மற்றும் பையாப்சி போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம்.

தைராய்டு சுரப்பியின் 
தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

சிகிச்சை முறை

இந்த நோயைச் சரிப்படுது;த தைராக்சின் என்னும் மாத்திரையை, தொடர்ந்து வெறும் வயிற்றில் நிறுத்தாமல் சாப்பிட வேண்டும். தொடக்கத்தில் தைராக்சின் மாத்திரையைக் கறைந்த அளவில் ஆரம்பித்து, பின்னர் தன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியிருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுகுகு மருத்துவர்கள் இந்த மாத்திரையின் அளவைக் குறைத்தே பரிந்துரைப்பார்கள். மாத்திரையை உண்ட பின்பு சுமார் ஒரு மணி நேரம் கழித்துதான் காபி, டீ, பால் மற்றும் காலை சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். மலும் கால்சியம் மாத்திரை, இரும்புச் சத்து மாத்திரை மற்றும் ஆண்டாசிட் மாத்திரைகளைச் சுமார் 4 மணி நேரம் கழித்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயது ஆக ஆக தைராய்டு சுரப்பி குறைதலின் தொல்லைகள் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை முதுமையின் விளைவு என்று எண்ணிவிடாமல், தைராய்டு குறைவினாலும் இருக்கலாம் என்று எண்ணி மருத்துவரை நாடி, நோய் இருப்பின் தக்க சிகிச்சை பெற்று நலமாக வாழலாமே!

தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் தொல்லைகள்

இந்நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் என்ற பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாக சுரக்கிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்கு தைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக் கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவித பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியது போல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் தைராய்டு சுரப்பி வீங்கி இருக்கும். கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடல் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது. உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.

Representational Image
Representational Image

நாடித் துடிப்பு அதிகரித்தல், அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்ற தொல்லைகள் முதியவர்க்கு இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாக சுரக்கும் நோயிருப்பதாக கருதி, அதை உறுதி செய்ய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதல் கண்டறியமுடியும்.

சிகிச்சை முறைகள்

மாத்திரை: இந்நோயை மாத்திரை மூலமே பலருக்கு குணமளிக்க முடியும். இம்மாத்திரையை டாக்டரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட வேண்டும். மாத்திரைகளால் இந்நோயின் அறிகுறிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆனால் தைராய்டு சுரப்பியின் வீக்கமோ, கட்டியோ குறையாது.

அறுவை சிகிச்சை: மாத்திரை பயனளிக்காவிட்டாலோ, அல்லது தைராய்டு சுரப்பிகளில் கட்டிகள் இருந்தாலோ அறுவை சிகிச்சையைப் பின்பற்றலாம். இச்சிகிச்சை முறையும் நல்ல பயன் அளிக்கும்.

ரேடியம் அணுக்கதிரியக்க முறை: முதியவர்களுக்கு மிகவும் தகுந்த சிகிச்சை முறையாகும். தொடர்ந்து மாத்திரை உண்ணும் தொல்லையோ, அறுவை சிகிச்சையால் விளையும் சிக்கலோ இதில் இல்லை. ரேடியம் கலந்த மருந்தை ஒரே முறை உண்டால் போதும், இந்நோயின் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து உடல் பூரண நலமடையும்.

தைராய்டு நோயைப் பற்றி இனி அதிகம் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் அதற்காக உள்ள தரமான சிகிச்சையைப் பெற்று நலமாய் வாழலாம்!