Published:Updated:

நேரம் நிற்பதில்லை! | My Vikatan

Representational Image

ஆனால் அவருக்கு ஓர் குழப்பம், நாம் என்ன தொழில் செய்வது ? நமக்கு நம் வேலையை தவிர எதுவுமே தெரியாதே என்று கவலை படுகிறார்.

நேரம் நிற்பதில்லை! | My Vikatan

ஆனால் அவருக்கு ஓர் குழப்பம், நாம் என்ன தொழில் செய்வது ? நமக்கு நம் வேலையை தவிர எதுவுமே தெரியாதே என்று கவலை படுகிறார்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நேரம்:

ஒருமுறை கடந்துவிட்டால் பின் எத்தனை முறை அழைத்தாலும் திரும்பி வருவதில்லை நேரம். இங்கே ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சமமாக கிடைப்பது நேரம் மட்டுமே. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

ஒரு சிறு கதையை பார்ப்போம்,

* ராஜு ஓர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் அவருக்கு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவர் யாரை சந்தித்தாலும் அவரது கனவை பற்றி பேசுவது வழக்கம். எத்தனை நாள் தான் இவ்வாறு அடிமை வாழ்க்கை வாழ்வது, சீக்கிரமாக ஒரு தொழிலை தொடங்க வேண்டும். பின் இந்த வேலையை விட்டுவிட்டு ராஜாவை போல் வாழலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் அவருக்கு ஓர் குழப்பம், நாம் என்ன தொழில் செய்வது ? நமக்கு நம் வேலையை தவிர எதுவுமே தெரியாதே என்று கவலை படுகிறார். நமக்கு குடும்பம் குழந்தைகள் இல்லனா எப்பவோ பெரிய ஆள் ஆயிருக்கலாம் என்று புலம்பிக்கொள்வார்.

சரி பார்ப்போம் நமக்கென்று ஒரு விடிவு காலம் விரைவில் வரும் அதுவரை காத்திருக்கலாம் என்று எண்ணுகிறார்.

அதிக வேலை இல்லை என்றால் உடனே தன் கைபேசியை எடுத்து சமூக வலைத்தளங்களில் மூழ்கிவிடுவார், இன்ஸ்டாகிராம் ரீலிஸ் (Instagram Reels), யூடியூபில் ஷார்ட்ஸ் (youtube shorts) என தன் நேரத்தை செலவிடுவார். பிரபலங்களின் பேட்டிகள் காண்பார், பின் அவரை போலவே தானும் ஒரு நாள் ஒரு மிக பெரிய நிகழ்ச்சியில் பேட்டி தருவது போல கற்பனை செய்து கொள்வர்.

பின் அந்த கற்பனை நிஜமாகும் நாள் என்று வருமோ என்று எண்ணிக்கொன்டே தன் வேலையே செய்வார்.

* அதே அலுவலகத்தில் அவருடன் வேலை செய்பவர் பாலு. அவருக்கும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது கனவு. அவருக்கும் ராஜூவை போல வேலையை தவிர வேறு எதுவும் தெரியாது.

சரி நாம் இனியும் நேரத்தை வீணடித்து கொண்டு இருந்தால் முன்னேற முடியாது என்று எண்ணுகிறார் பாலு. எத்தனை நாள் தான் நமக்கு ஒன்றும் தெரியாது, தெரியாது என்று சொல்லிக்கொண்டிருப்பது, இனி கற்றுக்கொள்வோம் என்று நினைக்கிறார்.

Representational Image
Representational Image

வேலை அதிகம் இல்லாத போது அல்லது விடுமுறை நாட்களில் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு ஒரு தொழிலை தொடங்குவது? புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் எதை கற்றுக்கொள்ள வேண்டும்? என்னென்ன தொழில்கள் லாபம் தரும் போன்ற தகவல்களை சேகரிக்க தொடங்குகிறார்.

இறுதியில் அவர் ஓர் உணவகம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் வேலையை விட்டுவிட்டு அவரால் அதை செய்ய முடியாது. தன் குடும்பத்தின் நிலையை அவர் அறிவார். சரி வார இறுதியில் மட்டும் செயல்படும் உணவகம் ஒன்று தொடங்கலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றுகிறது. அதை செயல்படுத்த முடிவு செய்கிறார்.

வாடகை வண்டி ஒன்றை வாங்கி அதில் அவரது உணவகத்தை அமைக்கிறார். தன் தொழில் தொடங்கும் கனவின் முதல் படியில் கால் பதித்துவிட்டார் பாலு. மறுபுறம் ராஜு தன் நேரத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

நண்பர்களே இதில் யார் நேரத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்? நாம் ராஜூவை போல நேரத்தை வீணடித்து விட்டு மீண்டும் நல்ல நேரம் வருமென்று காத்திருக்க போகிறோமா? அல்லது பாலுவை போல கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறப்போகிறோமா?

நம்மால் கடந்த காலத்தை நினைத்து பார்க்க முடியும் ஆனால் திரும்பி செல்ல முடியாது.

நேரத்தை சரியாக பயன்படுத்துவோம்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.