Published:Updated:

காலம் சுருங்குமா? - தொழில்நுட்பமும் மனித மனமும்

Representational Image
Representational Image

என்ன ஒன்று இவ்வாறாக நேரம் குறைய குறைய அந்த உணவுகளின் சுவை குறைந்து கொண்டே இருந்தது. பின்பு அதுவே சுவையாகி போனது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் எட்டு அல்லது ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது ஆங்கிலத்தில் ஒரு பாடம் படித்ததாக நினைவு. அது கால சுருக்கம் (Time Shrinks) பற்றிய ஒரு பாடம். காலம் சுருங்குமா? எனில் எப்படி. அந்த பாடம் நடத்துகையில் கால சுருக்கம் என்பது பற்றி என்னுடைய ஆசிரியர் இவ்வாறு விளக்கினார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தொலை தொடர்பு வசதிகள், போக்குவரத்து மற்றும் மனிதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தேவைப்படும் கால அளவு ஆகியவற்றை குறிப்பிட்டு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அது எவ்வாறு குறைந்திருக்கிறது என்பதே கால சுருக்கம் என்று விளக்கம் கூறினார்.

Representational Image
Representational Image

நூறு ஆண்டுகளுக்கு முன் திருச்சியிலிருந்து மதராசபட்டினம் (இன்றைய சென்னை) செல்ல பல நாட்களாகும். ஆனால் நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கையில் திருச்சியிலிருந்து சென்னை செல்ல விமானம் இருந்தது. ஒரு மணி நேரத்தில் சென்னை செல்ல முடியும். வெகுஜன போக்குவரத்தான பேருந்தில் எட்டு ஒன்பது மணி நேரம் ஆகும், அதுவே புகைவண்டி என்றால் ஏழு முதல் ஒன்பது மணி நேரங்கள் ஆகும்.

இட்டிலிக்கு மாவு உரலில் ஆட்டிய காலத்தில் இருவர் இணைந்து மூன்று மணி நேரம் ஆட்டுவார்கள். மின் மாவரைக்கும் இயந்திரம் (Grinder) வந்த பிறகு அரிசியையோ அல்லது உளுந்தையோ உரலில் போட்டு விட்டு நாம் பிற வேலையை செய்து கொண்டே அவ்வப்போது இதனையும் கவனித்து கொண்டு விட்டால் போதும். அதன் பிறகு மிக்ஸீ வந்த பிறகு ஓரிரு நிமிடங்களில் அரைத்து விட முடிந்தது. என்ன ஒன்று இவ்வாறாக நேரம் குறைய குறைய அந்த உணவுகளின் சுவை குறைந்து கொண்டே இருந்தது. பின்பு அதுவே சுவையாகி போனது.

அதுபோல வீட்டிற்கு வரும் கடிதங்கள்,

அன்புள்ள என்று தொடங்கி "நலம் நலம் அறிய அவா... நிற்க, இப்பவும் ...." ....என்ற வரிகளுடன் "அன்புள்ள அப்பா/அம்மா/அண்ணா...." என்று முடியும் கடிதங்கள் அவர்களுடைய உணர்வுகளை துக்கம் மகிழ்ச்சி ஏக்கம் அன்பு காதல் என பல உணர்வுகளை வார்த்தைகளாக வடித்து அதை படிக்கும்போதே கடிதம் எழுதியவருடன் பேசுவது போல ஒரு ஆனந்தம் கிடைக்கும். ஒரு கடிதம் கிடைக்க உள்ளூர் கடிதங்களுக்கு இரண்டு மூன்று நாட்களும் வெளியூர் கடிதங்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்களும் வெளிநாட்டுக்கு என்றால் ஓர் வாரத்துக்கு மேலும் ஆகும். கடிதம் எழுதியவர் பதிலுக்காக காத்திருப்பதும் பதில் கடிதம் கிடைத்தவுடன் ஏற்படும் பரவசம் விவரணை செய்ய முடியாத உணர்வு.

Representational Image
Representational Image

இன்று யோசித்து பார்க்கையில் கைபேசி இணையம் என உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் யாருடனும் எந்த கணத்திலும் ஓரிரு நொடிகளில் தொடர்பு கொண்டு பேசிவிடமுடியும். ஆனால் கடித போக்குவரத்து இருந்த காலத்தில் இருந்த ஒரு நெருக்கம் தொடர்பு கொண்ட கால இடைவெளி (Frequency) இன்னும் குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. அதற்கென நேரம் ஒதுக்கி கடிதம் எழுதி பலநாட்கள் கழித்து பதில் எதிர்பாக்கும் தேவையின்றி நேரில் பேசுவது போல பேசுவதற்கான தொழில் நுட்பம் வளர்ந்த போதும் "பேசறதுக்கே நேரம் இல்ல, அவ்வளவு வேல....." என்ற நியாயப்படுத்தல்கள் இன்று மிக சாதாரணமாக பார்க்க முடிகிறது. நான் உட்பட இதற்கு யாரும் விதி விலக்கல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வரும் வாழ்த்து அட்டை களுக்காக காத்திருந்த நாட்களும் அவ்வாறு வந்த வாழ்த்துக்களை படித்து பரவசமடைந்த கணங்களும் இனிமேல் நிகழ்வதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

வாழ்த்து அட்டை வாங்குவதற்கு மகிழ்ச்சியுடன் செலவழித்த நிமிடங்களும், பதினைந்து காசு இன்லேண்ட் லெட்டர் கார்டில் (Inland Letter Card) சொந்த கை வண்ணத்தில் அழகு படுத்தி வாழ்த்துக்களை கையால் எழுதி அனுப்பிய காலங்களும் அதற்கான மெனக்கெடல்களும் மிக அழகானவை.

Representational Image
Representational Image

1980-களில் ஒவ்வொரு தீபாவளிக்கும் மலேசியாவில் இருந்து எங்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை வரும். அங்கு இருக்கும் எங்களுடைய உறவினரான (நாங்கள் மலேஷியா அப்பாயி என்று சொல்வோம்) அவர் வாழ்த்துக்களுடன் அங்கு இருக்கும் அவருடைய மகன் மகள் பேரக்குழந்தைகள் அனைவருடைய பெயருடன் இப்படிக்கு "அன்புள்ள அப்பாயி" என்று எழுதப்பட்டு அந்த அட்டைக்குள் ஒரு இருபது ரூபாய் நோட்டு அப்பாயியின் அன்பு பரிசு என்று எழுதப்பட்டு இருக்கும். அந்த கண மகிழ்ச்சியை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். சில வருடங்களுக்கு பின்பு அது நின்று போனாலும் இன்றும் எண்ணி பார்க்கையில் உதட்டில் அரும்பும் ஒரு சிறு புன்னகையை தவிர்க்க முடியவில்லை.

கால மாற்றத்தில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சியில் மனிதன் ஒவ்வொரு செயலுக்குமான நேரத்தை எப்படி குறைத்திருக்கிறான் என்பதே கால சுருக்கமாகும். ஆனால் காலம் சுருங்க சுருங்க மனிதனின் மனதும் கூட சுருங்கி கொண்டே செல்கிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது.

நேரம் தின்ற செயல்கள் யாவும்

காலம் சுருங்க

மனிதனுக்கு நேரமின்றி போனது ஏனோ......!

அன்புடன்,

ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு