Published:Updated:

நீங்க இதில் எந்த வகை ஊர் சுற்றி?

Representational Image

சுற்றுலாப் பயணிகள் என்றால் ஊர் சுற்றுபவர்கள் என்றுதானே அர்த்தம், ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம்

நீங்க இதில் எந்த வகை ஊர் சுற்றி?

சுற்றுலாப் பயணிகள் என்றால் ஊர் சுற்றுபவர்கள் என்றுதானே அர்த்தம், ஆனால் அதிலும் ஆறுவகை இருக்கின்றனராம்

Published:Updated:
Representational Image

1) பயணம் மேற்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்க

இவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு, வீட்டிற்கு திரும்பும் வரை ஒரே ஆட்டம்பாட்டம்தான். காசைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்றும் கவலைக் கொள்ளாதவர்கள். இவர்கள் குறிக்கோளே, பயணத்தை இன்பமயமாக்கி கொள்வதுதான்.

2) வழிகாட்டும் புத்தகங்கள் கையில் வைத்துக் கொண்டு சுற்றுலா செல்பவர்கள் (இவங்ககிட்ட ஓட்டல்காரங்க ஏமாத்த முடியாதாம் ..கையிலே விவரம் தெளிவாக இருக்குமாம்)

இவர்கள், பயணத்திட்டம் வகுத்து கொள்வார்கள். செல்கின்ற இடத்தின் அனைத்து விவரங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோ கட்டணம் எவ்வளவு, டாக்ஸி கட்டணம் எவ்வளவு என்று அட்டவணைப் போட்டு வைத்து கொள்வார்கள். எந்த ஓட்டலில் என்ன மாதிரியான அறைகள், வசதிகள். அத்துணையும் ஆணிவேறு அக்குவேறாக அலசி ஆராய்ந்து வைத்து கொண்டுதான் புறப்படுவார்கள். இவர்களிடம் யாரும் ஏமாற்ற முடியாது.

Representational Image
Representational Image

3) குழுக்களாக அல்லது குடும்பத்தினரோடு பயணம் செய்பவர்கள்

இந்த வகையினர், அலுவலக நண்பர்கள், குடும்ப நண்பர்கள் இவர்களோடு குழுக்களாக சுற்றுலாவை அமைத்துக் கொள்பவர்கள். பயண நேரத்தில், நண்பர்களின் குடும்ப உறுப்பினர்களோடு, இன்னும் உறவைப் பலப்படுத்தி கொள்பவர்கள்.

3) உறங்குவதற்காகவே ஊர்சுற்ற புறப்படுபவர்கள் (வீட்டிலேயே தூங்கலாம் இல்ல)

இந்த வகையினர், வீட்டை விட்டு புறப்பட்டவுடன், இரயிலில், பேருந்தில், சன்னலோர இருக்கையை வாங்கி கொண்டு, நன்றாக உறங்குபவர்கள். தங்குகின்ற ஓட்டல்களிலும், நன்கு உறங்கி பொழுதை, நித்திராதேவியின் அரவணைப்பிலேயே அகமகிழ்ந்து சுற்றுலா காலத்தை, கழிப்பவர்கள்.

4) குறிப்பிட்ட பொருள் அல்லது செடி, கொடிகளுக்காக வேட்டை வெறியோடு செல்லும் வேட்டைக்காரர்கள்

இந்த வகையினர், எந்த ஊரில், என்ன பொருள் சிறப்பு என்பதும், செடி, கொடிகளின் அபூர்வதன்மைகள் இவைகளை ஆராய்ந்து, அதனை வாங்கிவருவதற்கும், ஏதாவது, புதிதாக விலங்கு, பறவை இவற்றை வேட்டையாடும் வேட்கையோடு புறப்படுபவர்கள்.

5) சென்ற இடத்தில் தங்கும் அறைகளில் உள்ள ஐன்னல் வழியே மேகங்களைப்ப பார்ப்பதற்கும், நித்திர தேவியின் அரவணைப்பிற்கும் சாய்வு நாற்காலியில் உட்காh;ந்து செய்தித்தாட்களை புரட்டி..புரட்டி. பார்ப்பவர்களாம்

இந்த வகை சுற்றுலா பிரியர்கள், ஓட்டல்களில் தங்கும் அறைகளில், ஜன்னல் வழியே இயற்கை காட்சிகளை, மேகங்களை கண்டுகளித்து, அதன் உறங்கியும், சாய்வு நாற்காலியில் செய்தித்தாட்களை புரட்டி…புரட்டி பொழுதுபோக்குபவர்கள்.

பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட்டாச்சு, நீங்களும் சுற்றுலா புறப்பட்டாச்சு, இந்த ஆறுவகையில், எந்தவகை என்று, நீங்களே கண்ணைமூடிக் கொண்டு யோசிங்களேன்.

-கே. அசோகன், மும்பை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism