Published:Updated:

நாட்டுப்புற நாயகர்கள்! | My Vikatan

Students Artist Federation

இந்த கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகிறது, சமுகத்தின் மீது அக்கறை ஏற்படுகிறது, சுயமரியாதை வளர்கிறது, பதின் பருவத்தில் மன பக்குவம் அடைகின்றனர், நேரத்தை விரயமாக்காமல் பயன்படுத்துக்கின்றனர்.

நாட்டுப்புற நாயகர்கள்! | My Vikatan

இந்த கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகிறது, சமுகத்தின் மீது அக்கறை ஏற்படுகிறது, சுயமரியாதை வளர்கிறது, பதின் பருவத்தில் மன பக்குவம் அடைகின்றனர், நேரத்தை விரயமாக்காமல் பயன்படுத்துக்கின்றனர்.

Published:Updated:
Students Artist Federation

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கலை ஏதோ ஒரு வகையில் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகிறது. மனிதனின் உடலோடு,உணர்வோடு ஒன்றிப்போய் இருக்கிறது. வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் வாழ்வின் ஒருவித ஆயுதமாகவும் விளங்குகிறது கலை. அதிலும் நாட்டுப்புறக்கலைகள் மிக கூர்மையானவை. நம் மண்ணின் சிறப்புகளை, மனிதர்களின் பண்புகளை, வாழ்வியலை மகத்தாக எடுத்துரைப்பது நாட்டுப்புறக் கலைகளே..! அத்தகைய கலைகளை கல்வி கற்கும் காலத்திலே கையில் எடுத்துள்ளது மாணவக் கலைஞர்கள் அமைப்பு (Students Artist Federation). சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு சென்னையில் இயங்குகிறது இந்த அமைப்பு.


முழுக்க முழுக்க கல்லூரி படிக்கும் மாணவர்களை கொண்டு இயங்குகிறது இந்த "மாணவக் கலைஞர்கள் அமைப்பு (SAF)". மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகள் தேவையாக உள்ளது. முக்கியமாக கலை பயற்சி. ஒவ்வொரு கலைகளுக்குள்ளும் ஒரு அறிவியல் இருக்கிறது. பல வித திறன்கள் உள்ளது.

பறை என்பது Communication Tool... வீதி நாடகம் Personality Development... ஒயில் என்பது Body Language வளரக்கூடியது... கரகம் என்பது Intelligence மேம்படுத்தக்கூடியது... சாட்டைக்குச்சி என்பது ஒற்றுமையை உருவாக்க கூடியது... சிலம்பம் என்பது தைரியத்தை வளர்க்க கூடியது...

தெருக்கூத்து என்பது Sex Education சொல்லிக் கொடுக்கக் கூடியது... என ஒவ்வொரு கலையிலும் நிறைய திறன்கள் நிறைந்துள்ளது. ஒவ்வொரு கலையையும் அதன் புரிதலோடு, சீரிய நோக்கத்தோடு கற்றுக் கொடுக்கின்றனர்... கற்றுக் கொள்கின்றனர்.

Students Artist Federation
Students Artist Federation

இந்த கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகிறது, சமுகத்தின் மீது அக்கறை ஏற்படுகிறது, சுயமரியாதை வளர்கிறது, பதின் பருவத்தில் மன பக்குவம் அடைகின்றனர், நேரத்தை விரயமாக்காமல் பயன்படுத்துக்கின்றனர். தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யும் ஒரு வழியும் உருவாகிறது. கலை நிகழ்ச்சி செய்வதன் மூலம் வரும் ஊதியத்தில் தங்களுடைய கல்வி கட்டணங்களை தாங்களே செலுத்திக் கொள்கின்றனர். பிறருக்கும் உதவுகின்றனர். "மாணவக் கலைஞர்கள் அமைப்பின்" மூலம் கலை நிகழ்ச்சிகளில் தாங்கள் உழைத்து பெற்ற ஊதியத்தை எல்லாம் சேர்த்து தமிழ்ச்செல்வன் என்ற மாணவன் கல்லூரியில் சேர உதவி இருக்கின்றனர். அவர் தற்போது கன்னியாகுமரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளி,கல்லூரிகளில் விளையாட்டுத்துறை போலவே கலைத்துறை என்று ஒன்று இருந்தால் படிக்கும் காலத்தில் நம் கலைகளைப் பற்றிய புரிதல் ஏற்படும். கலையும் பரவலாக்கப்படும். அப்பொழுது தான் அனைவருக்கும் அதன் தேவைகள் தெரிய வரும். அதன் காரணமாகவே இக்கலைகளை இலவசமாக கற்றுக் கொடுக்கிறோம் என்கிறார் திரு.பிரேம் குமார்.


சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை தமிழும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் கலை இலக்கியமும் பயின்றுள்ள பிரேம் குமார் தான் இக்கலை குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயக்குனர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதுகலை பட்டதாரி என்பதைவிட நாடகவியலாளன், நாட்டுப்புறக் கலைஞன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்புகிறார். நாட்டுப்புறக் கலைஞராக மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். சிறுவயது முதலே கலைகளின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அங்குள்ள கலை மற்றும் இலக்கிய பிரிவின் மூலமாக நாட்டுப்புற கலைகளை கற்றுக் கொண்டுள்ளார். பறை, ஒயில் , சாட்டைக்குச்சி, கரகம், கழியல் , மான்கொம்பாட்டம், வேடராட்டம், மரக்காலாட்டம், பொய்க்கால் குதிரை , மாடு(ஆட்டம்),மயில்(ஆட்டம்) மற்றும் வீதி நாடகம் போன்ற கலைகளை பயின்றுள்ளார். "மாற்று ஊடக மையம்" என்ற இயக்கத்தின் மூலம் பல கலை நிகழ்ச்சிகளையும் நவீன நாடகங்களையும் அரங்கேற்றி உள்ளார்.

தனக்கு இக்கலைகளின் மீது ஆர்வம் ஏற்பட முக்கிய காரணமே தன்னுடைய பேராசிரியர் திரு. இரா. காளீஸ்வரன் ஐயா தான் என்கிறார் பணிவோடு.

Students Artist Federation
Students Artist Federation

இந்த அமைப்பின் மூலம் பயிற்சிப் பெற்று கலைகளை கற்றுத் தேர்ந்த மாணவர்களைக் கொண்டு சமத்துவ ஒலிகள் கலைக்குழு , புத்தர் ஞானப்பறை கலைக்குழு, கற்பி கலைக்குழு என்று இதுவரை மூன்று கலைக்குழுக்களை உருவாக்கி பொது நிகழ்வுகளில் கலையாடி தங்களது கல்லூரி படிப்பிற்கான கட்டணத்தை ஈட்டி வருகின்றனர்.

அதுவேளையில் மாதவிடாய் சுழற்சி, மது ஒழிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கொரோனா விழிப்புணர்வு போன்ற சமுக விழிப்புணர்வு நிகழ்வுகளில் எந்த பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி மக்களுக்கு இலவசமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவையையும் கலையின் மூலம் செய்து வருகின்றனர்.


இவ்வாறாக இதுவரை நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சியளித்தும், மாணவக் கலைஞர்களை உருவாக்கியும் உள்ளது "மாணவக் கலைஞர்கள் அமைப்பு". இன்னும் இந்த மாணவ கலைஞர்களை மேலும் அதிகமாக உருவாக்கவும், நாட்டுப்புற கலைஞர்களின் உரிமைகளுக்காகவும், கலைகளை மேலும் பல இடங்களுக்கு கொண்டு செல்லவும், அழியும் நிலையில் உள்ள கலைகளை மீட்டுருவாக்கம் செய்யவும் , நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளை படிக்கவைக்கவும் இவ்வமைப்பு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நம்பிக்கை குரலில் உரக்கச் சொல்கிறார் திரு.பிரேம் குமார்.


இந்த "மாணவக் கலைஞர்கள் அமைப்பு" சென்னையில் இயங்கினாலும் இதில் இயங்கும் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி படிப்பிற்காக சென்னையை நோக்கி வந்தவர்களாகும்.


இனி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி படிப்பிற்கு சென்னையை நோக்கி வரும் மாணவ மாணவிகள், தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள், கலையின் மீது ஆர்வமுள்ளவர்கள், எந்த ஆதரவும், உதவியுமின்றி தவிக்கும் மாணவர்கள், ஆண்,பெண் இருபாலரும் எந்த சாதி,மத அடையாளமுமின்றி சமமாக, இலவசமாக கலையை கற்றுக்கொள்ளலாம். அதன்மூலம் வரும் பொருளாதாரத்தைக் கொண்டு கல்வி கற்கலாம்.


தீண்டாமையை, ஏற்றத்தாழ்வுகளை, பாகுபாடுகளை களையெடுக்கவும், எட்டா கனியாக இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவும் நம் நாட்டுப்புறக் கலையை ஆயுதமாக கையில் ஏந்தி இருக்கும் இந்த "நாட்டுப்புற நாயகர்களை" மனதார பாராட்டுவோம்.


-கோ.ராஜசேகர், தருமபுரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.