Published:Updated:

``பள்ளிக்கூடத்தை திறக்க சொல்லுங்க சாமி!'' - கிணறு வெட்டும் தொழிலாளியின் சோகம்

கிணறு வெட்டும் வேலை
கிணறு வெட்டும் வேலை

வேடிக்கை பார்ப்போமே, என்று கிணற்றுக்கு பக்கத்தில் சாலையோரம் டூவீலரை நிறுத்தியபோது, நிற்காதீங்க… நிற்காதீங்க.. ஓடுங்க…. ஓடுங்க…. என சத்தமாக குரல் எழுப்பியவாறு என்னை நோக்கி ஓடி வந்தனர்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அண்மையில் தூத்துக்குடி சென்றபோது, ஓரிடத்தில் கிணறு தூர் தோண்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சரி வேடிக்கை பார்ப்போமே, என்று கிணற்றுக்கு பக்கத்தில் சாலையோரம் டூவீலரை நிறுத்தியபோது, நிற்காதீங்க… நிற்காதீங்க.. ஓடுங்க…. ஓடுங்க…. என சத்தமாக குரல் எழுப்பியவாறு என்னை நோக்கி ஓடி வந்தனர்.

இது என்னடா, வேடிக்கை கூட பார்க்க விடமாட்டீங்க போல என சலிப்போடு வண்டியை அங்கிருந்து நகர்த்தினேன்.

கிணறு வெட்டும் வேலை
கிணறு வெட்டும் வேலை

“போங்க சார்.. அந்த பக்கம்… பாறைக்கு வெடி வச்சிருக்கோம்”னு சொன்னாங்க...“அடப்பாவிகளா… எதை மொத சொல்றது.. எதை பின்னாடி சொல்றதுன்னு உங்களுக்கு தெரியமாட்டேன்குதுன்னுட்டு…” அங்கிருந்த நகர்ந்த சில வினாடிகளில் பலத்த சத்தம்.. கிணற்றில் இருந்து பாறைகள் வெடித்து சிதறின…. பாறைக்கு வெடிவச்ச மொத்த கூட்டமும் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.

பின்னர் அய்யாவுக்கு எந்த ஊருன்னு மெல்ல அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். “எங்களுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் மதுராந்தகம், ஊர் ஊரா போய் ஒரு மாசம் இல்ல 2 மாசம் வரை தங்கி வேலை பார்ப்போம். வூட்டம்மா, குழந்தை குட்டிகளையும் கூட்டிச் செல்வோம்.

கிணறு வெட்டுற இடத்திலேயே ஷெட் போட்டு தங்கி வேலை பார்ப்போம். எங்க பொழப்பே நாடோடிகள் மாதிரிதான், காடு 6 மாசம், வீடு 6 மாசம்னு போய்கிட்டு இருக்கு. முன்ன கூலியாக கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியம் கொடுப்பார்கள். இப்போ பணமாக கூலி பெறுகிறோம். அதிலும் வெடி வைக்கும்போது, கிரேன் தூக்கும்போதும் கவனமாக இருக்கனும். இல்லன ஆளுங்களுக்கு சேதாரம்தான்” என்று சலிப்போடு சொன்னார் பெரியவர் வேலாயுதம்.

கிணறு வெட்டும் வேலை
கிணறு வெட்டும் வேலை

அருகே இருந்த அஜித்குமார் என்ற தொழிலாளி, “ஒரு சதுர அடிக்கு ரூ.35 கூலி வாங்கிறோம். சில இடங்கள்ல பாறை கடினமா இருந்தா வெடி வச்சு உடைப்போம். இப்ப 26 குழிகள்ல ஜெலட்டின் வச்சு வெடிக்கச் செய்தோம். அத்தனையும் வெடிச்சிருச்சு. சாயந்திரம் ஆகிவிட்டதால, நாளைக்குத் தான் பாறைகளையும், மண்ணையும் அள்ளுவோம். எங்கள கல் ஒட்டர்கள்னு சொல்லுவாங்க. நாங்க மட்டும் தான் இந்த தொழில் செய்றோம். இந்த வேலைய ‘மேடு வெட்டுதல்’ னும் சொல்லுவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிணற்றில இருந்து மேலே ஏறுவதற்கும், இறங்குவதற்கும் கிரேன் தான் பயன்படுத்துவோம். கீழே வேலை பார்க்கிற ஆட்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாமே இதில் தான் வரும். நம்ம பொழப்பு தான், கல்லு, மண்ணுன்னு போச்சு. புள்ளைகளையாவது படிக்க வைப்போம்னு பள்ளிக் கூடத்தில சேர்த்தோம். இந்த 2 வருஷமா கொரோனாவால பள்ளிக்கூடம் திறக்கல. அதனால், அதுகளும் படிக்காமே எங்களோடு நாடோடியாக சுத்தி வருதுக. எல்.கே.ஜி, யு.கே.ஜி படிச்சான், இப்ப பள்ளிக்கூடம் போகலைங்கிறதால, எல்லாத்தையும் மறந்திட்டான்.

கிணறு வெட்டும் வேலை
கிணறு வெட்டும் வேலை

இந்த பள்ளிக்கூடம் திறந்தாத்தான், புள்ளைக வாழ்க்கை நல்லாயிருக்கும். இல்லன்னா காலத்துக்கும் இப்படி மண்ணோட மண்ணா போயிடும் வாழ்க்கை. சீக்கிரம் பள்ளிகூடங்களை திறக்க சொல்லுங்க சாமி” என்றார் கை கூப்பியபடி.

அருகே மண்ணில் ‘குழி’ தோண்டி விளையாடிக் கொண்டிருந்தான் அவரது மகன்!

-அ.ஹரிகரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு