வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"பூமியில தேவதைகள்... உங்கள் புன்னகையால் மணம் வீசிடுங்கள்" என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் திருநங்கைகளின் நியாபகம் வருவது போல் அமைந்துள்ளது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் வீடியோ. அந்த வீடியோவில் திருநங்கை ஒருவர் சிக்னலில் பைக்கில் இருக்கும் இளைஞரிடம் காசு கேட்டு கைநீட்ட, பதிலுக்கு அந்த இளைஞர் தன்னிடம் இருக்கும் சாக்லேட்டை எடுத்து நீட்டுகிறார். அதை பார்த்ததும் அந்த திருநங்கையின் முகத்தில் மகிழ்ச்சியுணர்வு பரவி புன்னகை தவழ்கிறது. பின்னணியில் மேலே குறிப்பிட்ட பாடல் வரி சேர்ந்து ஒலிக்க அந்த வீடியோ மிக அழகானதாக தெரிகிறது. அதே சமயம் இந்தக் காலகட்டத்திலும் திருநங்கைகள் கையேந்துகிறார்கள் என்பது கவலைக்குரிய விஷியமாகவும் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1993ல் எழுத்தாளர் சு. சமுத்திரம் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய "வாடாமல்லி" நாவல் திருநங்கைகளின் வலிகள் நிறைந்த வாழ்வியலை முதன்முதலாக பதிவு செய்தது. அந்த நாவல் கையேந்துதல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல் போன்றவற்றில் சிக்கித் தவித்த பல திருநங்கைகளுக்கு பலதரப்பட்ட துறைகளில் முன்னேற உத்வேகம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் "திருநங்கையர் நூலகம்" அமைத்துள்ள பிரியாபாபு "வாடாமல்லி" புத்தகம் கொடுத்த தாக்கத்தால் தான் இந்தளவுக்கு உயர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.
அதேபோல திருநங்கையால் எழுதப்பட்ட முதல் புத்தகமான "வெள்ளை மொழி" என்கிற புத்தகம் மதுரை அமெரிக்கன் கல்லூரி பாடத்திட்டத்தில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தை ரேவதி என்கிற திருநங்கை எழுதியிருந்தார்.
'Transgender in India - Achievers and Survivors: An ode to Transwomen' என்கிற புத்தகம் இந்திய அளவில் முதல் திருநங்கை நீதிபதி, முதல் திருநங்கை ஐஏஎஸ், முதல் திருநங்கை காவல்துறை அதிகாரி, முதல் திருநங்கை டாக்டர், முதல் திருநங்கை வழக்கறிஞர் என்று பலதரப்பட்ட துறைகளில் சாதித்துக்காட்டிய திருநங்கைகளின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்துள்ளது. சி. கே. கரியாலி ஐஏஎஸ் மற்றும் பிரியதர்ஷினி ராஜ்குமார் இருவரும் இணைந்து அந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி திருநங்கைகளின் வாழ்வியலை பதிவுசெய்த திருநங்கைகளால் எழுதப்பட்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அவை அனைத்தும் தமிழகத்திலுள்ள அனைத்து நூலகங்களிலும் உள்ளதா என்பது கேள்விக்குறி. அந்த மாதிரியான புத்தகங்கள் பெரும்பான்மையான மக்களை சென்றடையவில்லை என்பதால் தான் இன்றும் சில திருநங்கைகள் கையேந்த வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட பள்ளிப்பாட புத்தகங்களில் நிறைய முற்போக்கான விஷயங்களை பார்க்க முடிந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பதினோறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் "திருநங்கை" என்ற சொல்லை உருவாக்கிய நர்த்தகி நடராஜ் பற்றிய கட்டுரையை இடம்பெற செய்தது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் திருநங்கைகளுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை. நக்கலைட்ஸ் மாதிரியான யூடியூப் சேனல்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்ற ஆட்கள் தேவை என்கிற அறிவிப்பில் ஆண்/பெண்/திருநங்கை/திருநம்பி என்று குறிப்பிடுகின்றனர். அதேபோல எல்லா தனியார் நிறுவனங்களும் தங்களது "வேலைக்கு ஆட்கள் தேவை" அறிவிப்பில் ஆண்/பெண் என்பதோடு நிறுத்தாமல் திருநங்கை/திருநம்பி என்றும் குறிப்பிட வேண்டும். சிறுகடைகள் முதல் பெரிய தனியார் நிறுவனங்கள் வரை திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டுமென்றும் ஊர்ப்புற நூலகம், கிளை நூலகம், மாவட்ட மைய நூலகம் என்று அனைத்து நூலகங்களுக்கும் திருநங்கைகள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கை விட வேண்டும்.

"ஐ", "தர்பார்", "இருமுகன்" போன்ற சில படங்கள் திருநங்கைகளை தரக்குறைவாக காட்டினார்கள். அருவி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நான் கடவுள், பேரன்பு போன்ற படங்களில் வாழ்வாதாரம் இல்லாத சூழலில் சிக்கித் தவித்த திருநங்கைகளை காட்டினார்கள்.
"காஞ்சனா" படத்தில் ஒரு திருநங்கை போராடி மருத்துவர் ஆவதாகவும், "தர்மதுரை" படத்தில் திருநங்கை ஒருவர் மருத்துவமனை உதவியாளராக பணியாற்றுவதாகவும், "நாடோடிகள் -2" படத்தில் திருநங்கை ஒருவர் போலீஸ் ஆவதாகவும், "கார்கி" படத்தில் திருநங்கை ஒருவர் நீதிபதி ஆக உயர்ந்ததாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் திருநங்கையாக மாறிய தன் தந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் மகன் சக மாணவர்களால் எப்படிப்பட்ட அவமானங்களை சந்திக்கிறான் என்பது குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும். எனவே, பதினோறாம் வகுப்பு பாட புத்தகத்தில் உள்ள நர்த்தகி நடராஜ் பற்றிய பாட பகுதிகளை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். நர்த்தகி நட்ராஜ் அவர்கள் பற்றிய பாட பகுதிகள் இவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.