எப்பொழுதும் நான் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த பகுதியிலுள்ள ஹோட்டல்களுக்கு சென்று சுவை பார்ப்பது வழக்கம். சுவை நன்றாக இருக்கும் ஹோட்டலுக்கு நான் வாடிக்கையாளராக மாறி விடுவேன். வாடிக்கையாளர் என்றால் தினமும் செல்லும் வாடிக்கையாளர் அல்ல. எப்பொழுது அந்த பகுதிக்கு சென்றாலும் அங்கே சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்வேன். அப்படியான ஒரு தேடலில் ஒரு நாள் திருச்சி கிழக்கு ஆண்டார் தெருவிலுள்ள ஹோட்டல் சங்கர விலாஸிற்குள் முதன் முதலாக நான் நுழைந்த போது,
"வாடா அம்பி என்ன சாப்பிடரே...." என்ற குரல் கணீரென்று கேட்டது, அதை கேட்டு நான் சற்று ஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்க அங்கே சங்கரய்யர் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

"என்ன இருக்கு சாப்பிட...." என்றேன்.
"இட்லி, தோசை ஊத்தப்பம் ரவா தோசை அப்புறம் பூரி...இருக்கு...." என்ன வேணும்? என்றார்.
முதல்ல ரெண்டு இட்லி குடுங்க அப்புறம் ஒரு தோசை னு சொன்னேன்.
உண்மையிலேயே அந்த இட்லியும் சட்டினி சாம்பாரும் அப்படி ஒரு சுவை. பின்பு முருகலாக வந்த மாவு தோசையின் மேல் சாம்பாரை ஊற்றி அது முற்றிலும் ஊறி மெம்னமியாக மறுவதற்குள் சட்டினி தொட்டு சாப்பிட்டால் அடா அடா என்ன ஒரு அற்புதமான அனுபவம்.
கடை வாசலுக்கு அருகில் வரும்போதே முருகலான நெய் ராவா தோசையின் மனமும் பரங்கிக்காய் சாம்பார் வாசமும் கலந்து வயிற்றிலுள்ள அமிலத்தை சுரக்க வைத்து பசியை மேலும்கிளறியது. ஹோட்டல் சங்கர விலாஸ் என்று அந்த கடைக்கு பெயர். இன்றைய நவ நாகரீக உணவகங்கள் போல படோடோபமாக பளபளவென டேபிள் சேர் எல்லாம் போட்டு மின்விசிறியுடன் விளக்கொளியின் பிரகாசத்துடன் எல்லாம் இருக்காது. ஒரு பழைய வீட்டில் நடத்தப்பட்ட உணவகம் அது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉள்ளே நுழைந்தவுடன் ஒரே ஓட்டமாக நடையும் வலது புறம் ஒரு ஸ்டோர் ரூமின் சுவரும் அடுத்த கட்டில் இடுப்பில் ஒரு வெள்ளை வெட்டியும் (சற்றே பழுப்பு கலரில் முழுதும் வெண்மையாக இல்லாமல்) தொழில் ஒரு ஈரிழை துண்டை போட்டுகொண்டு ஒரு பழைய டேபிள் பின்னல் இரும்பு சேரில் ஒல்லியாக ஒரு உருவம் அமர்ந்திருக்கும். வெண்மையான கேசம் இரண்டு மூன்று நாட்களாக சவரம் செய்யப்படாத தாடி மீசையுடன் நெற்றியில் சந்தனம் குங்குமம் பளீரென துலங்க சங்கரய்யர் அமர்ந்திருப்பார்.

அவருக்கு பின்புறம் சுவற்றில் அணைத்து சாமி படங்களும் ஆணியடித்து மாட்டப்பட்டிருக்கும். பல்வேறு கால கட்டங்களில் வாங்கப்பட்டதால் சில சாமி படங்கள் என்ன சாமி என்றே தெரியாத வாறு மங்கி போய் இருந்தாலும் அனைத்தின் மேலும் சிறு துண்டு கதம்பமும் சந்தன குங்குமப்பொட்டு பளிச்சென இருக்கும். டேபிள் மீது விபூதி சந்தனம் மற்றும் குங்கும சிமிழ்கள் ஒரு பித்தளை தட்டில் வைக்க பட்டிருக்கும். அவரை தாண்டி உள்ளே அடுத்த கட்டிற்கு சென்றால் எதிரே ஒரு பெரிய தோசை கல் விறகடுப்பின் மேல் பதிக்கப்பட்டு அம்பி என்னும் ஐயப்பன் உத்தரத்திலிருந்து தொங்கும் கயிற்றை இடது கையால் பிடித்து கொண்டு தோசை ஊற்றி கொண்டிருப்பான்.
காலை ஆறுமணிக்கெல்லாம் சுட சுட இட்லியும் கெட்டி சட்டினியும் சாம்பாருடன் ரெடியாக இருக்கும். மணக்க மணக்க பில்டர் காபியும் கிடைக்கும். தோசைக்கல் சூடாக ஆரம்பிக்கும். ஏழுமணிக்கு கூட்டம் களை கட்ட ஆரம்பிக்கும்.
ஒரு பெரிய கப்பில் தோசைமாவை எடுத்து கல்லில் ஊற்றி லாவகமாக தேய்த்து பின்பு மேலே தாராளமாக என்னையும் நெய்யும் ஊற்றி மொறு மொறுப்பாக எடுத்து போட்டு கொண்டே இருக்க பெரியவர் சங்கரய்யர் உண்பவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருப்பார். அவர்கள் இருவர் மட்டுமே பணியாளர்கள். உதவிக்கு டேபிள் துடைக்க சரவணம். சரவணத்துக்கு வயது எழுபது இருக்கலாம். அய்யரும் சரவணமும் கிட்டத்தட்ட ஒரே வயது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக இயங்கும் ஹோட்டல் சங்கர விலாஸ் ஆரம்பித்த காலத்தில் இருந்து அய்யருடன் கூடவே உதவியாக இருப்பவர் சரவணம். முன்பெல்லாம் அய்யரே தோசை ஊற்றுவார். பின்பு கல்லாவையும் தோசைக்கல்லையும் ஒருங்கே கவனிக்க முடியாமல் அதற்கு மட்டும் ஆள் வைத்துக்கொண்டார். இந்த அம்பிக்கும் நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். இருபது வருடங்களாக இங்கே வேலை பார்த்து வருகிறான். மாவின் பக்குவமும் தோசையின் பக்குவமும் அய்யருடையது. சட்டினி சாம்பார் என அனைத்தும் அய்யரின் கை பக்குவம்தான்.
காலை ஆறுமணிக்கெல்லாம் சுட சுட இட்லியும் கெட்டி சட்டினியும் சாம்பாருடன் ரெடியாக இருக்கும். மணக்க மணக்க பில்டர் காபியும் கிடைக்கும். தோசைக்கல் சூடாக ஆரம்பிக்கும். ஏழுமணிக்கு கூட்டம் களை கட்ட ஆரம்பிக்கும்.
உள்ளே நுழைந்தவுடன் யாராக இருந்தாலும் உரிமையாக டா போட்டுத்தான் பேசுவார் சங்கரய்யர்.

"வாடா ராஜாமணி என்ன கொஞ்சநாளா இந்த பக்கம் ஆளையே காணோம் என்பார்."
"அம்பி ராஜாவுக்கு முருகலா ஒரு நெய் ரவா....." என்று கத்தி கொண்டே ஒரு வாழை இலையையும் தட்டில் இரண்டு இட்லியையும் எடுத்து கொண்டு இலையை போட்டு இட்லியையை வைப்பார். இட்லியை வைத்த பின் கெட்டி சட்டினியும் சாம்பாரும் தாராளமாக ஊற்றிவிட்டு ரவா தோசை வரும் வரை அல்லது அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை ராஜாமணியுடன் குசலம் விசாரித்து கொண்டிருப்பார்.
எவ்வளவு காசு கொடுத்து சாப்பிட்டாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சுயமரியாதைக்கு சிறிது பங்கம் ஏற்பட்டாலும் அந்த உணவு எவ்வளவு சுவையாக இருப்பினும் பயனில்லை. சங்கர விலாஸ் ஹோட்டலில் கிடைக்கும் உணவு விலை மிக குறைவாகவும் அன்பு மிகுதியாகவும் இருந்ததாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.
ராஜாமணி போல நடராஜன் வாசு என்கிற வாசுதேவன், பிச்சுமணி, கோவிந்தன் ராமநாதன் மற்றும் பலரும் என அவருடைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இதே வரவேற்பு தான். இதே விசாரிப்பு தான் அவர்கள் யாரும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே மாட்டார்கள். அனைவரும் இங்கே பலவருடங்களாக சாப்பிடுபவர்கள்.
அனைவரும் இங்கே சாப்பிடும்போது தன் வீட்டில் சாப்பிடுவதை போல ஒரு மனநிறைவுடன் சாப்பிடுவார்கள். அவருடைய பேச்சு சற்று அடாவடித்தனமாக இருந்தாலும் ஒரு தகப்பனின் பாசமும் தாயின் அன்பும் அதில் இழையோடும். அவருடைய ஹோட்டலில் அதிகம் பிற சமூகத்தினர் தான் சாப்பிடுவார்கள். அவரிடம் அந்த சாதீய பாகுபாடுகள் எதுவும் இருந்ததை நான் அங்கு உணவருந்திய சிலநாட்களில் பார்த்ததாக ஞாபகமில்லை.
எவ்வளவு காசு கொடுத்து சாப்பிட்டாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சுயமரியாதைக்கு சிறிது பங்கம் ஏற்பட்டாலும் அந்த உணவு எவ்வளவு சுவையாக இருப்பினும் பயனில்லை. சங்கர விலாஸ் ஹோட்டலில் கிடைக்கும் உணவு விலை மிக குறைவாகவும் அன்பு மிகுதியாகவும் இருந்ததாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் சிற்றுண்டிக்காக அங்கே சென்ற போது சங்கரவிலாஸ் ஹோட்டல் மூடியிருந்தது. விசாரித்தபோது அது மூடப்பட்டு சிலநாட்கள் ஆனதாக கூறினார்கள். அய்யருக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள ஏனோ என் மனது விரும்பவில்லை. என்னை போலவே பல வாடிக்கையாளர்களும் தகப்பனில்லாத குழந்தைகள் போல நிச்சயம் தவித்து போயிருப்பார்கள். இந்த ஹோட்டல் நடத்தி அய்யர் பெரிதாக பணமேதும் சம்பாதிக்காவிட்டாலும், ஆனால் அவருக்காக கண்ணீர் சிந்தும் பல நல்ல மனிதர்களை சேர்த்து வைத்திருந்தார் என்பதை மறுப்பதிற்கில்லை.
பின் குறிப்பு: அய்யர், அம்பி மற்றும் சரவணம் அனைவரும் உண்மையான மனிதர்கள். நான் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களின் பெயர்கள் மட்டும் என்னுடைய கற்பனை. ஏனெனில் அவர்களுடைய உண்மை பெயர்கள் எதுவும் எனக்கு தெரியாது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.