Published:Updated:

சுவையின் ரகசியம் அளவில் தானா? - அன்னதான சமையல்காரருடன் ஓர் உரையாடல்| My Vikatan

அன்னதான சமையல்

சுவையோடு சமைப்பது பெருங்கலை வீட்டுக்கு செய்யும் பொழுதே குறை ,குறைவில்லாமல் வரும். கட்சி மாநாட்டில் கற்கள் வந்து விழுவது போல. இதில், குருபூஜை அன்னதானத்திற்கு சமைப்பதென்பது , அதிலும் சுவை குன்றாமல் சமைப்ப தென்பது மிகப்பெரிய விஷயமட்டுமல்ல, சவாலும்கூட!

சுவையின் ரகசியம் அளவில் தானா? - அன்னதான சமையல்காரருடன் ஓர் உரையாடல்| My Vikatan

சுவையோடு சமைப்பது பெருங்கலை வீட்டுக்கு செய்யும் பொழுதே குறை ,குறைவில்லாமல் வரும். கட்சி மாநாட்டில் கற்கள் வந்து விழுவது போல. இதில், குருபூஜை அன்னதானத்திற்கு சமைப்பதென்பது , அதிலும் சுவை குன்றாமல் சமைப்ப தென்பது மிகப்பெரிய விஷயமட்டுமல்ல, சவாலும்கூட!

Published:Updated:
அன்னதான சமையல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தானத்தில் சிறந்தது" அன்னதானம் " . அன்னதானம் எனும் பொழுது அதிகமாக செய்யவேண்டியதிருக்கும். ஆயற்கலை அறுபத்து நான்கில் சமையற் கலையும் ஒன்று. அதிலும் சுவையோடு சமைப்பது பெருங்கலை வீட்டுக்கு செய்யும் பொழுதே குறை ,குறைவில்லாமல் வரும். கட்சி மாநாட்டில் கற்கள் வந்து விழுவது போல. இதில், குருபூஜை அன்னதானத்திற்கு சமைப்பதென்பது , அதிலும் சுவை குன்றாமல் சமைப்ப தென்பது மிகப்பெரிய விஷயமட்டுமல்ல ,சவாலும்கூட!

சமீபத்தில் ஆடித்தபசு அன்று அம்பாசமுத்திரத்தில் .தாமிரபரணி நதிக்கரையோரம் வயல்களுக்கு நடுவே ஜீவ சமாதி அடைந்திருக்கும், *வள்ளிக்கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னாலும்.....* என்று பாடிய பிரபல கிளிகண்ணி புகழ் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்பராய சுவாமிகளின் 150 வது குருபூஜையின் அன்னப்ரசாதம் உண்ணும் பாக்கியம் கிடைத்தது.

Representational Image
Representational Image

உணவை தயாரித்த நளபாகர்களை, நான் முகன்களை, (ஆறுமுகம் ,மணி ,மூர்த்தி ,முருகன் ) நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சமையலின், சுவையின், ரகசியத்தை அவரிடமே கேட்டுதெரிந்து கொள்வோமே .

கல்யாணத்திற்கு இத்தனை பேர் வருவார்கள் என்று நாம் கொடுக்கும் பத்திரிகையை வைத்து ஓரளவு கணித்துவிடலாம். ஆனால் அன்னதானம் அப்படியில்லை எப்படி கணக்கிடுகிறீர்கள்?

வருஷா வருஷம் செய்யறதுனால ஓரளவு எங்களுக்கு தெரியும். இருந்தாலும், அரிசி மூடை எக்ஸ்ட்ராவே வெச்சிருப்போம். அடுப்புல தண்ணியும் சூடாயிட்டு இருக்கும் . கூட்டத்த பார்த்து சாப்பாடு காணலைன்னா அரிசி களைஞ்சு போட்டுடுவோம் .

என்னரக அரிசி? எப்படி கணக்கிடுறீங்க ?

மதுரை பொன்னி அரிசியை பயன்படுத்தறேன். கணக்குன்னா, ஒரு படிக்கு பெரியாட்கள் பத்து பேர் நல்லா சாப்பிடலாம் . அத வெச்சு இவ்வளவு பேருக்கு இவ்வளவு அரிசி ன்னு கணக்கு பன்னுவோம்.

சின்னபசங்களையெல்லாம் எப்படி கணக்கிடுறீங்க?

பெரியாட்கள்ள எல்லோரும் நிறைய சாப்பிட மாட்டாங்க. சில பேர் குறையா சாப்பிடுவாங்க அதுல ஈடு கட்டிடுவோம் .

இவ்வளவு பெரிய பாத்திரத்தை தூக்கி, வடிக்க முடியாது. என்ன செய்வீங்க ? தண்ணி எவ்வளவு ஊத்துவீங்க

பக்கத்துல நிற்கிற ஒரு குறும்பான சிறுவன். கிரேன வெச்சு தூக்குவாங்கலா இருக்கும் என்றதும் அங்கு நின்ற எல்லோரும் சிரித்து விட்டோம் .

(ஆறுமுகம் என்பவர் தொடர்ந்தார். அவர் தான் தலைமை சமையல் காரர் .)

தண்ணி வந்து 25 படி அரிசிக்கு ஒரு குடம் தண்ணி. இது எல்லா அரிசிக்கும் பொருந்தாது . அரிசியை பொறுத்து தண்ணி அளவு மாறும் .பாத்திரத்த தூக்கி வடிக்க முடியாததுனால பொங்கி இறக்கிடுவோம். அதுக்குன்னு ஒரு நார் கூடை இருக்கு. சாதம் நசுங்கு பதம் வரவும் (குழையகூடாது) தீயை குறைச்சுட்டு ,அந்த கூடையை வட்டத்துக்குள்ள (பாத்திரத்தின் பெயர்) அமிழ்த்தி ஒரு ஆள் பிடிப்பாங்க . சாதத்துல உள்ள தண்ணி யெல்லாம் கூடைக்குள்ள வந்துடும் .இன்னொறு ஆள் அந்த தண்ணிய எடுத்து வெளில ஊத்து வாரு தண்ணி வர ...வர...எடுத்து ஊத்திகிட்டே இருப்பாரு தண்ணி வர்றது நின்னதும் , கூடையை எடுத்துட்டு சாதத்து ஓன்னு போல அடிவரைக்கும் கிண்டி விட்டு கொஞ்ச நேரம் அடுப்புல வெச்சிருந்தா .சாதம் நல்ல வெந்து ,உதிரி உதிரியா இருக்கும் .

சாதம் குழைஞ்சிடுச்சுன்னா . என்ன தான் ,குழம்பு கறி நல்ல வெச்சிருந்தாலும். சாப்பாடு டேஸ்ட்டா இருக்காது .

அன்னதான சமையல்
அன்னதான சமையல்

வெந்துகிட்டு இருக்குல்லா . இது எவ்வளவு கிலோ அரிசி.?எத்தனை பேர் சாப்பிடலாம் ?

ஐம்பது கிலோ அரிசி . 450 பேர் சாப்பிடலாம்,.

குழம்பு , தொடுகறில்லாம் .எப்படி கணக்கு பன்னுவீங்க ? காய்கறி கறுக்காமல் இருக்க என்ன செய்வீங்க?

அரிசியை கணக்கு பண்ணி போடுவோம் .(50 கிலோ அரிசி க்கு) சாம்பாருக்குன்னா ஏழு கிலோ துவரம் பருப்பு , சாம்பார் சாதத்துக்குன்னா ஒன்பது கிலோ துவரம் பருப்பு போடுவோம் இதுல ரசம், மோர் கொஞ்சம் கழிச்சு போக மீதி சாதம் குழம்புக்கு கணக்கு பன்னி பருப்பு போடுவோம் . குழம்புக்கு காய்னா பத்து கிலோ .சாம்பார் சாதத்துக்கு காய் னா 25 கிலோ. இங்க நறுக்கி வெச்சிருக்கிற அவியல் காய் 45 கிலோ .பச்சடிக்கு வெண்டைக்காய் 50 கிலோ ,உருளைக்கிழங்கு 45 கிலோ.

காய்கள் கறுக்காமல் இருக்க கிழங்கு வகைகளை தண்ணீரில் போட்டு வைப்போம் .இதுக்கு போடற மசாலா ஐட்டங்கள் எல்லாமே அளவு தான். அளவு மாறிடுச்சுன்னா ருசியே மாறிடும் .

Representational Image
Representational Image

ஓ......சுவையின் ரகசியம் அளவில் தானா,?

புன்னகையை பதிலாக தந்தார்.

நீங்க நாலு பேர் மட்டும் தானா ? வேற ஆட்கள் இருக்காங்களா?

அது அஞ்சு பேர் இருக்காங்க . காய்கறி வெட்ட,தேங்காய் துருவன்னு சைடு வேலை செய்வாங்க .

எல்லா சமையலுக்கும் நீங்க ஒன்பது பேர் மட்டும் தான் போவீங்களா?

அது சமையல பொருத்து. நூறு கிலோ , இருநூறு கிலோ பொங்கனும்னா என்ன மாதிரி க்ருப் நிறைய இருக்கு ,அவங்க கிட்ட இருந்து ஆட்கள கூப்டுப்போம்.

வருஷம் முழுக்க ஓடுமா .?

ம்...ஓடும் .பிறந்த நாள் வீடு .சடங்கு வீடு .பால் காய்ச்சுற வீடு நல்லது ,கெட்டதுன்னு ஏதாவது ஆர்டர் வந்துகிட்டே இருக்கும். எனக்கு தேவைபடும் போது நான் மத்தவங்கள கூப்பிடற மாதிரி, மத்தவங்களும் எங்கள கூப்பிடுவாங்க . அதனால வருஷம் முழக்க எங்களுக்கு வண்டி ஓடிடும் . சாப்பாட்டுக்கு சாப்பாடாச்சு, சம்பளத்துக்கு சம்பளமாச்சு .

அவர் பேச்சில் தன்னம்பிக்கை தெரிந்தது!

-ஜானகி பரந்தாமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.