Published:Updated:

ஷார்ஜா வங்கியின் தலைமை சைபர் பாதுகாப்பு நிபுணரானது எப்படி? - தமிழரின் சக்சஸ் ஃபார்முலா

Representational Image

டெல்லி , மும்பை, ஹைதராபாத், சென்னை என்று நேர்முகதேர்வுக்கு அலைந்து பலனின்றி வெறுத்து போய் வாழ்க்கையே ஒரு இருண்ட சூழ்நிலைக்கு தள்ளபட்டது போல மனமெங்கும் ஒரு விரக்தி பரவி இருந்த சமயம். ஆனால்..

ஷார்ஜா வங்கியின் தலைமை சைபர் பாதுகாப்பு நிபுணரானது எப்படி? - தமிழரின் சக்சஸ் ஃபார்முலா

டெல்லி , மும்பை, ஹைதராபாத், சென்னை என்று நேர்முகதேர்வுக்கு அலைந்து பலனின்றி வெறுத்து போய் வாழ்க்கையே ஒரு இருண்ட சூழ்நிலைக்கு தள்ளபட்டது போல மனமெங்கும் ஒரு விரக்தி பரவி இருந்த சமயம். ஆனால்..

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அமீரகம் எனும் இந்த பாலைவன பூமி என்னுடைய வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக வந்து சேர்ந்தது. 2009ல் பெங்களூரில் கடைசியாக பணி புரிந்த இடத்தில் இருந்து விருப்பமின்றி விலக வேண்டிய சூழ்நிலை, மனைவி 6 மாத கர்ப்பம். 4 வயதில் இன்னொரு குழந்தை.. வெளியில் புது ஐடி வேலை எதுவும் கிடைக்கவில்லை. டெல்லி , மும்பை, ஹைதராபாத், சென்னை என்று நேர்முகதேர்வுக்கு அலைந்து பலனின்றி வெறுத்து போய் வாழ்க்கையே ஒரு இருண்ட சூழ்நிலைக்கு தள்ளபட்டது போல மனமெங்கும் ஒரு விரக்தி பரவி இருந்த சமயம். ஆனால் தொடர்ச்சியாக புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருந்ததன் தொடர்ச்சியாக கணிப்பொறியியல் பட்டத்துடன், இன்று மிக பிரபலமாக இருக்கும் சிக்ஸ் சிக்மா (Six Sigma) சம்பந்தமாக சான்றிதழ் வாங்கி இருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போதுதான் துபையில் இருந்த ஒரு இந்திய வம்சாவளியினரால் நடத்தப்படும் ரீடைல் நிறுவனத்தில் சிக்ஸ் சிக்மா கன்சல்டண்டாக வேலை கிடைத்து அமீரகத்தில் வந்திறங்கினேன்.

Representational Image
Representational Image

அங்குதான் வாழ்க்கை எனக்கு பலதரப்பட்ட அனுபவங்களை கற்று கொடுத்தது. சேமிப்பு கிடங்குகள் நிறைந்த ரீடெய்ல் தொழிலில் உடன் பணிபுரிந்த கீழ்மட்ட தொழிலாளர்களில் இருந்து மேல்மட்ட அலுவலர்கள் வரை பழகும் வித்தியாசமான கலவையான அனுபவம் கிடைத்தது.

உடன் பணிபுரிந்த பலரும் அமீரகத்தில் வந்து சேர்ந்த கதையும், பட்ட சிரமங்களும், முன்னேறிய அனுபவங்களும் மனதில் ஆழ பதிந்தது. பர்துபாயில் மற்றொரு நண்பருடன் அறையை பகிர்ந்து தங்கி அந்த பகுதி முழுவதும் கால்களால் சுற்றி அளந்த காலம் அது. ஆனால் கணிப்பொறியியல் பட்டம் பெற்ற நாள் முதல் தொடர்ந்து புதிய விஷயங்களை கற்று வந்தது போலவே அமீரகம் வந்த நாள் முதல் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த ஆடிட்டர் இடமிருந்து கணிப்பொறி தணிக்கை பற்றி அறிந்து அதில் ஒரு தேர்வு எழுதி கணிப்பொறி தணிக்கையாளர் (Certified Information System Auditor) பட்டயம் பெற்றேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது துபாயில் நடக்கும் பல கருத்தரங்குகளிலும் பார்வையாளராக போய் அமர்ந்து புதிய நட்பு வட்டாரத்தை முனைப்புடன் உருவாக்கினேன். அப்படி கிடைத்த புதிய நட்பு ஒருவரின் பரிந்துரையின் பேரில் குவைத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் கணிப்பொறி தணிக்கை மேலாண்மை நிபுணராக பணியில் அமர்ந்தேன். குடும்பமும் இந்தியாவில் இருந்து வந்து என்னுடன் இணைந்தது.

Representational Image
Representational Image

குடும்பத்துடன் ரொம்பவே மன மகிழ்வுடன் கழித்த காலம் அது. ஐந்து வருட காலம் குவைத் நிறுவனத்துக்காக சவூதி, ஓமன் , பஹ்ரைன் , ஆப்பிரிக்கா என்று பம்பரமாக சுற்றி திரிந்தேன். சவுதிக்கு குவைத்தில் இருந்து சாலை மார்க்கமாக பல முறை பயணித்த அனுபவங்கள் உண்டு. கற்பதை அப்போதும் விடவில்லை. இந்த ஐந்து வருடங்களில் புதிதாக வந்து இறங்கிய சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பத்தை முழுமையாக கற்று தேர்ந்தேன். அதில் Certified Information Security Manager என்ற பட்டய படிப்பில் தேர்வு பெற்று சைபர் பாதுகாப்பு நிபுணராக என் தொழிலில் புதிய அத்தியாயத்தை தொடங்கினேன். பிறகு குவைத்தில் இருந்து சவுதிக்கு Deloitte என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு முதுநிலை மேலாளராக இடம் பெயர்ந்தேன்.

அங்கு ஒரு வருடம் குப்பை கொட்டிய பிறகு என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த அமீரகத்துக்கு மீண்டும் 2015 ல் ஷார்ஜா வங்கியின் தலைமை சைபர் பாதுகாப்பு நிபுணராக பணியில் அமர்ந்தேன். இப்படி இந்த பாலைவன பூமியில் நான் தொழிலில் உயர்ந்ததுக்கு இந்த மக்களின் அன்பும், அவர்கள் என் திறமைக்கு அளித்த மரியாதையும் ரொம்பவே முக்கியமான காரணங்கள்.

திறமையும், தகுதியும் இருப்பவர்களை அரவணைக்க இந்த பாலைவன சோலை என்றுமே தவறுவது இல்லை. இன்று அமீரகமெங்கும் உள்ள வங்கியில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் ஏகப்பட்ட இந்தியர்களே இதற்கு சாட்சி.

நானே இங்கு உள்ள அமீரக மத்திய வங்கியின் (Central Bank Of UAE) ஒரு அங்கமான சைபர் பாதுகாப்பு கமிட்டியின் ஒரு கவுரவ ஆலோசகராக இருக்கிறேன். அமீரகமெங்கும் உள்ள வங்கிகளுக்கு சைபர் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் கமிட்டியின் வேலை. இங்கு வந்த பிறகுதான் வீடு , சொத்து என்று வாங்கி வாழ்விலும் சமூகத்திலும் அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் ஒரு இடத்துக்கு உயர்ந்தேன் என்பது நான் கனவிலும் மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை.

Representational Image
Representational Image

அமீரகத்துக்கு வேலைத் தேடி வருபவர்களுக்கும் , ஏற்கெனவே இங்கு வேலையில் இருப்பவர்களுக்கும் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் தகுதியையும், அறிவையும் தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே இருங்கள் .. நல்ல நிறுவனங்களில் பணிபுரியும் புதிய நபர்களை உங்கள் நட்பு வட்டத்தில் தொடர்ந்து இணைத்துக் கொண்டே இருங்கள். வாஸ்தா என்று சொல்லப்படும் பரிந்துரையின் பேரில் வேலை வாங்குதல் என்பது இங்கு வெகுவாக நடக்கும் ஒரு விஷயம். அதனால் சரியான வாய்ப்புகளை கழுகு போல எதிர்பார்த்து காத்திருங்கள் ..

நண்பர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெற்று காற்றுள்ள போதே தூற்றி கொள்ளுங்கள் .. இந்த அமீரக வாழ்வில் நேரத்தை விரையம் செய்ய பல பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு. படித்து கற்று கொள்ளவும் நிறைய விஷயங்கள் உண்டு . எந்த பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே அமீரகத்தில் நம் வாழ்வின் உயர்வை தீர்மானிக்கும் .வாழ்த்துக்கள் அன்பு தமிழ் நெஞ்சங்களே !!! வளருங்கள் !!!

-விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/