Published:Updated:

ஏன் இந்தப் படம் நிறைய மனிதர்களை சென்றடையல! - `வாகை சூடவா’ ரசிகர்

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஜிப்ரானின் பின்னணி இசை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"வாகை சூட வா" படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. 2011ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் தேசிய விருது வென்ற படம். கல்வி கற்க முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி கொடுமை அனுபவிக்கும் உலகில் உள்ள அத்தனை ஏழை குழந்தைகளுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட படம். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் ஆயுதம் என்று உணர்த்திய இந்தப் படத்தை பாராட்டி சில வார்த்தைகள் எழுதாமல் இருந்தால் அது ஏதோ ஒரு குற்றம் செய்வதை போன்ற உணர்வு தந்ததால் இந்தப் படத்தை பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

வாகை சூடவா
வாகை சூடவா

ஒரு கிராமம்... அந்தக் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்திற்கு வரும் வெகுளித்தனமான ஒரு அப்பாவி வாத்தியார்... அந்த வாத்தியாரிடம் வம்பு இழுக்கும் கிராமத்து பெண்... வாத்தியாரை புரிந்துக்கொள்ளாத குறும்புக்கார சிறுவர் சிறுமிகள்... இந்த விஷயங்கள் அனைத்தும் அப்படியே பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படத்தை நினைவூட்டுகிறது. அந்தப் படத்தின் தாக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட வாகை சூட வா படத்தில் பாக்யராஜை நடிக்க வைத்து சிறப்பித்து இருந்தது படக்குழு.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஜிப்ரானின் பின்னணி இசை. சிறுவர் சிறுமிகள் கோரஸ்ஸாக பாடிய "அ- ண்ணா, ஆ-வண்ணா இ- ண்ணா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா..." என்ற பாடலை எப்போது கேட்டாலும் சிலிர்க்கிறது. "போறானே... போறானே...", "செங்க சூளைக்காரா...", "தஞ்சாவூரு மாடத்தி...", "சர சர சாரக்காத்து..." பாடல்கள் நம் மனதை வெகுவாக கவர்கின்றன. இந்தப் பாடல்களில் எந்த பாடலை எப்போது கேட்டாலும் "வாகை சூட வா... செம படம்ல..." என்று வியக்க வைக்கிறது.

பனைமரத்தில் மீன் ஏறும் காட்சி தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிது. இந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள்... விலாங்கு மீனை பிடிப்பது, செங்க கட்டியை தின்பது, கருப்பட்டிக்கு நாக்கை சுழட்டி காத்திருப்பது, ரேடியோ பெட்டிக்குள் குள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்பி அவர்களை சாகடிக்க தண்ணியில் ரேடியோவை போடுவது போன்ற காட்சிகளில் அப்படியே கிராமத்து சிறுவர்களை கண்முன் கொண்டு வந்தனர். "நீ என்ன புலியா..." என்று கெடாயிடம் கேட்டு முட்டு வாங்கிய விமல் கடைசியில் அந்த ஆட்டுக்கு கருவேலங்காய் கொடுப்பது, சிவகாமி என்பதற்கு பதில் சிவகமி என்று சிறுவன் ஒருவன் தன் அம்மாவின் பெயரை எழுதி விமலிடம் காண்பிப்பது, அடுத்த தடவை வரப்ப ரெண்டு கோடு நோட்டு வாங்கிட்டு வாங்க என சிறுவன் தான் சேர்த்து வைத்த பணத்தை நம்பிக்கையோடு விமலிடம் கொடுப்பது போன்ற காட்சிகள் நெகிழ வைத்தன.

வாகை சூடவா
வாகை சூடவா

இயற்கையை மிக ஆழமாக நேசித்து பறவைகள் தரும் ஒலிகளை வைத்து அடுத்து நடக்க போவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கும் குருவிக்காரராக நடிகர் குமரவேல் அசத்தி இருப்பார். அந்தக் கிராமத்தில் டீக்கடை வைத்து நடத்தும் பெண்ணாக இனியா நடித்திருப்பார். நடித்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்றே கூற வேண்டும். புதிர் போடும் டூனாலெட்டு வேடத்தில் தம்பி ராமையா. "சர்காரோட நேரடி தொடர்புல இருக்கறவன்...", "வாழ்ந்தா கெத்தா வாழனும்... இல்லனா செத்து போகனும்..." போன்ற வசனங்களின் மூலம் தனித்து தெரிகிறார்.

குறைவான சம்பளம் என்ற போதிலும் தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் செய்யும் அரசுப்பள்ளி வாத்தியார்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம் என்று தங்க மீன்கள் படத்தின் கிளைமேக்ஸில் சில வரிகளை காண முடியும். டைட்டில் கார்டில் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்று கூறாவிட்டாலும் இந்தப் படம் ஆசிரியர்களுக்காகவும் எடுக்கப்பட்டது. சாட்டை சமுத்திரக்கனியை கொண்டாடுவது போல் வாகை சூடவா விமலையும் கொண்டாடி இருக்கலாம்... கொண்டாட வேண்டும்!
கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நேர்த்தியாக பதிவு செய்த இயக்குனர் சற்குணம் மிகவும் பாராட்டுக்குரிய மனிதர். "வாகை சூடவா" என்ற அவருடைய இந்த படைப்பு தமிழ் சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இந்தப் படம் இன்னும் நிறைய மனிதர்களை சென்றடையவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் என்று பட்டியலிட்டால் அதில் வாகை சூட வா படம் முக்கிய இடம் வகிக்கும்.


- மா. யுவராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு