Published:Updated:

வெற்றிமாறன் இயக்கத்தில் அற்புதம்மாள்? - வாசகர் பகிர்வு

அற்புதம்மாள்

எனக்குத் தெரிந்த வரையில் "பேரறிவாளன் வழக்கு" பற்றி முதன்முதலாக திரையில் பேசியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அற்புதம்மாள்? - வாசகர் பகிர்வு

எனக்குத் தெரிந்த வரையில் "பேரறிவாளன் வழக்கு" பற்றி முதன்முதலாக திரையில் பேசியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Published:Updated:
அற்புதம்மாள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வருபவர் பேரறிவாளன். மகனின் விடுதலைக்காக முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறார் அவருடைய தாய் அற்புதம்மாள். பேரறிவாளன் செய்த குற்றம் இரண்டு பேட்டரிகளை வாங்கி தந்தது. இதுகுறித்து கடந்த முப்பது வருடங்களாக பலரும் (அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள்) ஊடகங்களில் பேசி வருகின்றனர். ஆனால் இதுவரையில் சினிமா திரையில் யாரும் பேசியதில்லை என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில் "பேரறிவாளன் வழக்கு" பற்றி முதன்முதலாக திரையில் பேசியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்
மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

’’நம்ம ஊர்ல ஒருத்தர பேட்டரி வாங்கி கொடுத்ததா சொல்லி இன்னும் உள்ள வச்சிருக்காங்க.." - சமீபத்தில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் "ஜகமே தந்திரம்" படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனம் இது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் "நச்" வசனங்கள் மனதில் இடம்பிடிக்கின்றன. அந்த வகையில் பேரறிவாளன் குறித்து முதன்முறையாக திரையில் அதுவும் 17 மொழிகளில் வெளியாகும் படத்தில் (OTT என்பதால் இந்த வசனம் இடம்பெற்றிருக்கிறது. சென்சார் போர்டிடம் சென்றிருந்தால் இந்த வசனம் இடம்பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி) தைரியமாக வசனம் வைத்து "மதுரக்காரனுக்கு கொஞ்சம் தில்லு ஜாஸ்தி தான்..." என்ற பாராட்டைப் பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். அதில் வெற்றிமாறனிடம், "நீங்க யாருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க விரும்புகிறீர்கள்...?" என்ற கேள்விக்கு...

"அத இப்ப சொல்லலாமானு தெரில... இருந்தாலும் சொல்றேன்... எனக்கு அற்புதம்மாள் அவர்களுடைய போராட்டங்களை படமா பண்ணனும்னு ஐடியா இருக்கு..." என்று பதில் தந்தார் வெற்றிமாறன். அப்போது முதலே அற்புதம்மாள் அவர்களின் போராட்டங்கள் மீது எனக்கு தனிக்கவனம் பிறந்தது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

``வெற்றிமாறன் அற்புதம்மாளின் போராட்டங்களை எப்போது படமாக எடுப்பார்... அற்புதம்மாளுக்கு அந்தப் படத்தின் மூலம் ஏதேனும் நல்லது நடக்குமா... ?''என்ற ஆவலும் பிறந்தது. சமீபத்தில் "மிக மிக அவசரம்" படத்தில் நடந்ததை போல நிஜத்தில் பெண் காவலர்களுக்கு நடக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் மகளிர் போலீசை இனி பணிநிமித்தமாக வெட்டவெளியில் வெயிலில் நிற்க வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. அதுபோல சினிமா கொடுத்த தாக்கத்தினால் சமூகத்தில் உண்டான மாற்றங்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் இந்த வழக்கில் வெற்றிமாறனின் படைப்பினால் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்பது என் நம்பிக்கை.

மாக்சிம் கார்க்கி எழுதிய "தாய்" நாவலை போல "அற்புதம்மாள் - பேரறிவாளன்" இவர்களின் பாசப் போராட்டம் நடப்பதாக எனக்கு தோன்றுகிறது. (தாய் நாவலில் பாவெல் சிறையில் அடைக்கப்பட்டதும் அவனுடைய தாய் வெளியிலிருந்து மகனுக்காக போராடுவார்... - இந்த ஒப்பீடு தவறாக இருப்பின் கமெண்டில் சுட்டிக் காட்டவும்) வெற்றிமாறனின் எழுத்தில் இயக்கத்தில் அற்புதம்மாள் அவர்களின் போராட்டம் படைப்பாக வந்தால் அது நிச்சயம் சர்வதேச அளவில் கவனம் பெறும். வெற்றிமாறன் மற்ற படைப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு அற்புதம்மாள் கதையை விரைந்து எடுத்து பல மொழிகளில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

- மா.யுவராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism